MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அறநிலையத்துறை அறிவிப்புகள்: 125 கோடி ரூபாய் புனரமைப்பு பணிகள்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அறநிலையத்துறை அறிவிப்புகள்: 125 கோடி ரூபாய் புனரமைப்பு பணிகள்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அறநிலையத்துறை அறிவிப்புகள்: 125 கோடி ரூபாய் புனரமைப்பு பணிகள்!

தமிழ்நாடு

அறநிலையத்துறை அறிவிப்புகள்: 125 கோடி ரூபாய் புனரமைப்பு பணிகள்!

Fernandez
Last updated: ஆகஸ்ட் 22, 2026 11:33 காலை
Fernandez
Share
அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சட்டசபையில் அறிவிப்புகளை வெளியிடுகிறார்
அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பில் அறிவிப்புகளை வெளியிடுகிறார்
SHARE

தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சட்டசபையில் அறிவித்துள்ளார். இது பக்தர்களுக்கு பெரும் குட் நியூஸாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 64 கோவில்களில் 125 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், சிதிலமடைந்த 150 கோவில்களில் 85 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், 22 கோவில்களில் தேவையான திருப்பணிகளைச் செய்ய 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமயபுரம், மருதமலை உள்ளிட்ட 13 முக்கிய கோவில்களில் மண்டபங்கள், சுற்று மண்டபம், வசந்த மண்டபம், மகா மண்டபம் மற்றும் இளைப்பாறும் மண்டபம் ஆகியவை 21.37 கோடி ரூபாய் மதிப்பில் கட்டித்தரப்படும். குச்சனூர் சனீஸ்வரர் கோவில் உட்பட 8 கோவில்களுக்கு 22.25 கோடி ரூபாய் மதிப்பில் ராஜகோபுரம் கட்டப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.

சென்னை கொளத்தூர் சோமநாதர் கோவில், வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில், நுங்கம்பாக்கம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் ஆகிய மூன்று கோவில்களில் 2 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மரத்தேர்கள் செய்யப்பட உள்ளன. திருச்சி ரங்கநாதர் கோவில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில், மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட 105 கோவில்களில் திருக்குள பணிகளுக்காக 45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சமயபுரம் உள்ளிட்ட 3 கோவில்களில் 11 கோடி ரூபாய் மதிப்பில் பக்தர்களுக்கான தங்கும் விடுதிகள் கட்டப்படும். திருவண்ணாமலை, பழநி, சிறுவாபுரி, இருக்கன்குடி உள்ளிட்ட 22 கோவில்களில் 50 கோடி ரூபாய் மதிப்பில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். பக்தர்கள் அதிகளவில் வரும் 20 முக்கிய திருக்கோவில்களில், பக்தர்களின் நலன் கருதி 3 கோடி ரூபாய் செலவில் ஆம்புலன்ஸ் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவில்களால் நடத்தப்படும் 4 பள்ளிகளில் சுகாதார வளாகம், குடிநீர் வசதி, விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த 5.52 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அறுபடை வீடு கோவில்களை முன்மாதிரி கோவில்களாக மாற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். கிராம தெய்வங்களின் வழிபாட்டு மரபை போற்றும் வகையில் கிராம திருவிழா நடத்தப்படும். அனைத்து மண்டலங்களிலும் கூத்து, நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் கிராமிய திருவிழாக்கள் நடைபெறும்.

கோவில் வளாகத்திலேயே பிரசாதம் தயாரித்து வழங்கும் திட்டம் 15 கோவில்களில் மேம்படுத்தப்படும். மூத்த குடிமக்கள் ஆயிரம் பேருக்கு அந்தந்த பகுதி முக்கிய கோவில்களுக்கு ஆன்மிக பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்படும். கோயில் நிலங்களில் அடர்வனம் மற்றும் நந்தவனம் அமைக்கப்படும். சித்தர்களின் பெருமையை போற்றும் வகையில் விழா நடத்தப்படும். காமராஜர் பிறந்த நாளில் கோயில்களில் பொது விருந்து ஏற்பாடு செய்யப்படும்.

மருதமலை, அழகர்கோவில்களுக்கு சொந்தமான பள்ளிகளில் மேம்பாட்டு பணிகள் செய்யப்படும். மருதமலை கோவில் பள்ளியில் 90 லட்சம் ரூபாயில் கலையரங்கம் மற்றும் சுகாதார வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அழகர் சுந்தர்ராசா மேல்நிலை பள்ளியில் 87 லட்சம் ரூபாயில் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்படும். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் கலை அறிவியல் கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்டப்படும்.

பழநி கோயில் கல்வி நிறுவனங்களுக்கு 3.10 கோடி ரூபாயில் 9 புதிய பஸ்கள் வாங்கப்படும். மீண்டும் யானைகள் புத்துணர்வு நல்வாழ்வு முகாம் நடத்தப்படும். கோவை, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே பவானி ஆற்றின் கரையோரம், 3 கோடி ரூபாய் மதிப்பில் யானைகள் நலவாழ்வு முகாம் மீண்டும் நடத்தப்படும். மீனாட்சி அம்மன் கோயில் கருணை இல்லத்தில் கூடுதல் அறை மற்றும் நவீன சமையல் கூடம் அமைக்கப்படும் என பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Minister RameshTamil Nadu Templesஅமைச்சர் ரமேஷ்கோவில் பணிகள்கோவில்கள்திருப்பணிபணியிடங்கள்புனரமைப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article சென்னையில் உயர்ந்துள்ள தங்கத்தின் விலை தங்கம் விலை தொடர் உயர்வு: இன்று பவுனுக்கு ரூ.800 அதிகரிப்பு
Next Article முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் ஆஜராகிறார் டாஸ்மாக் முறைகேடு: செந்தில் பாலாஜி லஞ்ச ஒழிப்புத் துறையில் ஆஜர்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் பேசுகிறார்

90 ஆண்டுகளாக இல்லாத சிக்கல் இப்போது ஏன்? – வந்தே மாதரம் விவகாரத்தில் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலின் சுருக்கப்பட்ட பதிப்பையே காங்கிரஸ் பின்பற்றுவதாகவும், 90 ஆண்டுகளாக இல்லாத…

ஆகஸ்ட் 22, 2026

சோமாலியா கடலில் 2 கப்பல்கள் கடத்தல்: 22 இந்திய மாலுமிகள் மீட்பு தீவிரம்

சோமாலியா, ஏமன் கடற்பகுதிகளில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 2…

ஆகஸ்ட் 22, 2026

31 ஆண்டுகள் சிறைவாசம்: 105 வயது முதியவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 31…

ஆகஸ்ட் 22, 2026

மனைவியுடன் சேர நரபலி: ஒருவர் கொலை செய்யப்பட்டு, தலை பூஜை அறையில் புதைப்பு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவியுடன்…

ஆகஸ்ட் 22, 2026

இளம் வாக்காளர்களை கவர பா.ஜ.க.வின் புதிய வியூகம்

தமிழக பா.ஜ.க. 'ஜென்-இசட்' தலைமுறையினரை கவரும் நோக்கில்…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிடுகிறார்
தமிழ்நாடு

விசாரணை பெயரில் விஜயனை அச்சுறுத்துவது கண்டனத்திற்குரியது: சீமான்

புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊடகவியலாளர் விஜயனை விசாரணை என்ற பெயரில் தமிழக காவல்துறை அச்சுறுத்துவதாகவும், அவரது கைபேசியைப் பறிமுதல் செய்து மோசமாக நடத்தியதாகவும் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 Min Read
சட்டப்பேரவையில் பேசும் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு

கேள்வி கேட்டால் ஆச்சரியப்படும் பதில்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மேஜையில் இருந்த கோப்புகள் குறித்தும், சட்டமன்ற நேரலை விவாதங்கள் குறித்தும் பேசினார். இதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்தார்.

2 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தின் முதல் மது இல்லாத நகராட்சி அரக்கோணம்: வரலாற்று சாதனை!

தமிழகத்தின் முதல் மது இல்லாத நகராட்சியாக அரக்கோணம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. பொதுமக்களின் தொடர் போராட்டங்களுக்குப் பிறகு, அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.

1 Min Read
சென்னையில் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகாத செந்தில் பாலாஜி
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி, சகோதரருக்கு மீண்டும் சம்மன்: போலீஸ் திட்டம்

முதல்வர் விஜய் ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக் குமாருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப போலீஸ் திட்டமிட்டுள்ளது. ஆஜராகாவிட்டால் கைது நடவடிக்கை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?