MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: டாஸ்மாக் ‘பார்ட்டி ஃபண்ட்’ கொள்ளை: முதல்வர் பேச்சுக்கு கிருஷ்ணசாமி கடும் விமர்சனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - டாஸ்மாக் ‘பார்ட்டி ஃபண்ட்’ கொள்ளை: முதல்வர் பேச்சுக்கு கிருஷ்ணசாமி கடும் விமர்சனம்

தமிழ்நாடு

டாஸ்மாக் ‘பார்ட்டி ஃபண்ட்’ கொள்ளை: முதல்வர் பேச்சுக்கு கிருஷ்ணசாமி கடும் விமர்சனம்

Admin
Last updated: ஜூன் 23, 2026 10:34 மணி
Admin
Share
SHARE

டாஸ்மாக் கடைகளில் 'பார்ட்டி ஃபண்ட்' என்ற பெயரில் ஆண்டுக்கு ரூ. 1,000 கோடி கொள்ளையடிக்கப்படுவதாக முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வரின் பேச்சு, 'ரீல்ஸ்'களுக்கு பயன்படுமே தவிர, நிஜமான அரசியலுக்கு உதவாது என அவர் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 40 நாட்களாக முதல்வர் விஜய் மௌனம் காத்து வந்த நிலையில், ஆளுநர் உரை மீதான விவாதத்தில் தனது அரசியல் எதிரிகளை துவம்சம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் மீண்டும் அதே பழைய குற்றச்சாட்டையே திரும்பத் திரும்பக் கூறியுள்ளார். திரைப்படங்களில் வசனகர்த்தா எழுதியபடி பேசிவிட்டுச் செல்லலாம். ஆனால், சட்டமன்றத்தில் ஆதாரமின்றிப் பேசக்கூடாது.

டாஸ்மாக் மூலம் 'பார்ட்டி ஃபண்ட்' என்ற பெயரில் ஆண்டுக்கு ரூ. 1,000 கோடி கொள்ளையடிக்கப்படுவதாக விஜய் குற்றம் சாட்டியுள்ளார். எந்தக் கட்சிக்கு இந்த நிதி சென்றது என்பதற்கான ஆதாரத்தையும் அவர் வெளியிட்டிருந்தால், அது அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். கடந்த இரண்டு வருடங்களாக அவர் மேடைகளில் பேசிவரும் குற்றச்சாட்டு இது. மே 10ஆம் தேதிக்குப் பிறகு முதல்வரான பிறகு, இந்த முறைகேடு குறித்து முழுமையாக ஆய்வு செய்து, உண்மைகளை சட்டமன்றத்தில் வெளியிட்டிருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும்.

ஆட்சிக்கு வந்த பிறகும் தேர்தல் வியூக வகுப்பாளர்களின் ஆலோசனைகளைப் பெறுவது ஆரோக்கியமானது அல்ல. முதல்வர் விஜய்யின் இன்றைய சட்டமன்றப் பேச்சு, வெறும் 'ரீல்ஸ்'களுக்கு மட்டுமே பயன்படும். நிஜமான அரசியலுக்கு உதவாது. தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பும் என எதிர்பார்த்த அவரது குற்றச்சாட்டு, வெறும் 'புழுதிக்காற்றாகவே' போய்விட்டது" என்று கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu PoliticsTasmacகிருஷ்ணசாமிடாஸ்மாக்தமிழ்நாடு அரசியல்பார்ட்டி ஃபண்ட்முதல்வர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழகத்திற்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
Next Article சிஎஸ்கேவின் பின்னடைவுக்கு காரணம் என்ன? ருதுராஜ் கெய்க்வாட் விளக்கம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் கனமழையால் இடிந்து விழுந்த குடியிருப்பு கட்டிடம்

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழந்தனர்.…

ஜூலை 6, 2026

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

பள்ளி அனுமதிக்கு லஞ்சம்: திமுக மீது ஸ்ரீதர் வேம்பு குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான அனுமதிக்கு லஞ்சம் கேட்டதாக ஸ்ரீதர் வேம்பு குற்றம் சாட்டியுள்ளார். திமுகவினரின் மிரட்டல்களுக்கு தான் அஞ்சப் போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாக…

1 Min Read
தமிழ்நாடு

ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்: ராமதாஸ் கண்டனம்

பாமக நிறுவனர் ராமதாஸ், ஊடகவியலாளர்களின் கருத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், ஊடக சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

நீட் தேர்வு மாணவர்கள்: மனநல ஆலோசனைக்கு அரசு உதவி

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் மன அழுத்தமின்றி தேர்வை எதிர்கொள்ள, அரசு தொலைபேசி வாயிலாக மனநல ஆலோசனைகளை வழங்கும் சிறப்பு சேவையை அறிவித்துள்ளது.

1 Min Read
அரசியல்

8000 தனியார் மருத்துவமனைகள்: தவெக அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி!

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், புதிதாக 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கும் தவெக அரசின் முடிவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மருத்துவத் துறையின் தனியார்மயத்தை…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?