2026 மே 29 ஆம் தேதிக்கான இன்றைய ராசி பலன்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்றைய தினம், வழக்கு சம்பந்தமான முன்னேற்றத்திற்கான முயற்சிகள் கைகூடும் என்றும், எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதைத் தவிர்க்கவும். உல்லாசப் பயணங்கள் செல்ல வாய்ப்புள்ளது. ஆடம்பரப் பொருட்கள் சேரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தமான போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைப்பதில் இருந்த தாமதம் நீங்கும்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சுகம் உண்டாகும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் மறையும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள்.
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். பணவரத்து திருப்தி தரும். சக நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும்.
கடக ராசிக்காரர்களுக்கு இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. திடீரென்று கோபம் வரும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். சொத்து தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும். சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும்.
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக அலைய நேரிடும். மனோ தைரியம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கஷ்டம் தீரும். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். பணம் சேரும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். செலவும் அதிகரிக்கும்.
மகர ராசிக்காரர்களுக்கு இன்று எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும்.