MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழகத்தில் தொடர் மின்வெட்டு: பாஜக, அமமுக கடும் எதிர்ப்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழகத்தில் தொடர் மின்வெட்டு: பாஜக, அமமுக கடும் எதிர்ப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - தமிழகத்தில் தொடர் மின்வெட்டு: பாஜக, அமமுக கடும் எதிர்ப்பு!

அரசியல்

தமிழகத்தில் தொடர் மின்வெட்டு: பாஜக, அமமுக கடும் எதிர்ப்பு!

Admin
Last updated: மே 23, 2026 7:36 மணி
Admin
Share
SHARE

தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளனர்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தொடர் மின்வெட்டு மக்களிடையே பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் மின்வெட்டால் மக்கள் தவித்ததைப் போலவே, தற்போதைய தவெக அரசும் மக்களை வதைப்பது கண்டிக்கத்தக்கது. கொளுத்தும் வெயிலில் மின்சாரத்தை துண்டித்து குழந்தைகளையும், முதியவர்களையும் அவதிக்குள்ளாக்குவது தான் தவெக அறிவித்த மாற்று அரசியலா? முதல்வர அவர்கள் போர்க்கால அடிப்படையில் மின்சார விநியோகத்தை சீரமைக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது அறிக்கையில், "தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் பல மணிநேரங்கள் நிகழும் அறிவிக்கப்படாத மின்வெட்டால், அனைத்து தரப்பு மக்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். கோடைக் காலங்களில் அத்தியாவசியமான மின்சாரம், இப்படி அறிவிக்கப்படாமல் தடை செய்யப்படுவது மக்களின் அன்றாட வாழ்க்கையையும், ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. எனவே, இந்த தொடர் மின்வெட்டு பிரச்சனையை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டும். மேலும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மற்றும் அமமுக போன்ற எதிர்க்கட்சிகள், மின்வெட்டை உடனடியாக சரிசெய்ய வலியுறுத்தியுள்ளன. இது குறித்து தமிழக அரசு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AMMKDMKTamil Nadu Power Cutsதமிழக செய்திகள்பாஜகமின்வெட்டு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஜனநாயகன் பட விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!
Next Article லக்னோ vs பஞ்சாப்: டெண்டுல்கர் மகன் களமிறங்க, பிளே-ஆஃப் கனவுடன் பஞ்சாப்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் உட்பட கிழக்கு சிக்கிம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது

சிக்கிமில் 4.9 ரிக்டர் நிலநடுக்கம்: மக்கள் பீதி

சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் உட்பட கிழக்கு சிக்கிம் மாவட்டத்தின் பல பகுதிகளில்…

நவம்பர் 12, 2026

திமுக கூட்டணியில் ராஜீவ் துரோகம்? சோனியா காந்தி சுயசரிதை விளக்கம்

2004 மக்களவைத் தேர்தலின் போது திமுகவுடன் கூட்டணி…

நவம்பர் 12, 2026

கர்நாடக விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் வறட்சி நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு…

நவம்பர் 12, 2026

ரூ.2.5 கோடியில் கார்: பீகார் எம்எல்ஏ மகள் திருமணத்தில் மாப்பிள்ளைக்கு அசத்தல் பரிசு!

பீகாரில் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில்,…

நவம்பர் 11, 2026

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது…

நவம்பர் 10, 2026

You Might Also Like

அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

நீட் தேர்வு விவகாரம்: பிரதமர் மோடியும் பதவி விலக வேண்டும் – அமைச்சர் வன்னி அரசு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பிரதமர் மோடியும் பதவி விலக வேண்டும் என அமைச்சர் வன்னி அரசு வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு ரத்து என்பதே முதல்வர்…

2 Min Read
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சட்டப்பேரவையில் உரையாற்றுகிறார்
தமிழ்நாடு

10 ஆண்டு கூட்டணி 10 நாளில் கலைந்தது – ஆதவ் அர்ஜூனா

திமுகவுடனான 10 ஆண்டு கூட்டணி, 10 நாட்களில் கலைந்துவிட்டதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். மேலும், விளையாட்டு வீரர்கள் மற்றும் படகு போக்குவரத்து சேவை குறித்த அறிவிப்புகளையும்…

1 Min Read
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுதல்
தமிழ்நாடு

முதலமைச்சருக்கே எம்.எல்.ஏக்கள் யார் எனத் தெரியாது – உதயநிதி ஸ்டாலின்

திமுக வடக்கு மண்டல வழக்கறிஞர் அணி கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தற்போதைய அமைச்சர்கள் ஜோக்கர்கள் என்றும், முதலமைச்சருக்கே எம்.எல்.ஏக்கள் யார் எனத் தெரியாது…

1 Min Read
தமிழ்நாடு

குதிரை பேரத்தில் விஜய் ஈடுபடவில்லை – வைகோ கருத்து

தமிழக முதல்வர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என்பது எனது கருத்து என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கருத்துக்களுக்கு பதிலளித்த அவர்,…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?