MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தவெக MLA-வுக்கு ரூ.50 கோடி வலை? தமிழக அரசியலில் பரபரப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தவெக MLA-வுக்கு ரூ.50 கோடி வலை? தமிழக அரசியலில் பரபரப்பு

தமிழ்நாடு

தவெக MLA-வுக்கு ரூ.50 கோடி வலை? தமிழக அரசியலில் பரபரப்பு

Admin
Last updated: ஜூலை 7, 2026 7:11 காலை
Admin
Share
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ விஜி சரவணன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ விஜி சரவணன்
SHARE

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணன் தனக்கு திமுக சார்பில் ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாக குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில் விரிவாகப் பேசியுள்ளார்.

'எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து திமுகவில் இணைந்தால் சுமார் ரூ.50 கோடி பணம் தருவதாக திமுகவினர் பேரம் பேசினர். மேலும், திமுகவில் இணைந்தால் அமைச்சர் பதவியும் தருவதாகக் கூறினர். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர்கள் பெயரில் என்னிடம் பேரம் பேசினர். இந்த பேரத்துக்கு நான் இணங்கவில்லை என்றால் என்ன செய்வோம் என்று தெரியாது என மிரட்டவும் செய்தனர்' என்று விஜி சரவணன் குற்றம்சாட்டினார்.

மேலும், 'பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் சேருமாறு என்னிடம் அக்கட்சியினர் வலியுறுத்தினர். ஸ்ரீவைகுண்டத்தில் எனது வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாத திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் இணைந்து சமூக வலைதளங்களில் என் மீது அவதூறுகளைப் பரப்பி வருகின்றன' என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில், தன்னிடம் பேரம் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்றையும் ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ விஜி சரவணன் வெளியிட்டார். இந்த ஆடியோ பதிவு தற்போது பெரும் விவாதப் பொருளாகி உள்ளது.

முன்னதாக, தமாகா சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவுக்கும் இதேபோன்ற பேரம் பேசப்பட்டதாக புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் சுமார் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தற்போது விஜி சரவணன் அளித்துள்ள புதிய புகார் தமிழக அரசியலில் மேலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குதிரை பேர அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இதற்கிடையில், அமைச்சரவை கூட்டத்தில் இரண்டு தனிநபர்கள் கலந்துகொண்டது குறித்து ஆளுநர் விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக சார்பில் ஆளுநர் ஆர்.வி.அர்லேகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அரசியல் சூழலில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேரம் பேசும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKMLA BribeTamil Nadu Politicsஅரசியல்தவெகதிமுகபேரம்விஜி சரவணன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article உச்ச நீதிமன்றத்தில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கரூர் சம்பவம்: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
Next Article கேரளாவில் தனியார் பேருந்துகள் ஸ்டிரைக் அறிவிப்பு கேரளாவில் தனியார் பேருந்துகள் ஸ்டிரைக்: இலவச பயணத் திட்டத்தால் பாதிப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ஈரோடு: 70 டன் ரயில் பெட்டி கிரேனில் இருந்து விழுந்து விபத்து!

ஈரோடு லோகோ பணிமனையில் 70 டன் எடை கொண்ட ரயில் பெட்டி கிரேனில் இருந்து விழுந்து விபத்து. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை. விசாரணை நடைபெறுகிறது.

1 Min Read
தமிழ்நாடு

குண்டர் சட்டம் ரத்து: சிறையிலிருந்து விடுதலையான சவுக்கு சங்கர் முதல்-அமைச்சர் விஜய்க்கு நன்றி!

குண்டர் சட்ட வழக்குகளை மறுஆய்வு செய்த தமிழ்நாடு அரசு, யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து சிறையிலிருந்து விடுதலையான சவுக்கு…

1 Min Read
தமிழ்நாடு

திமுக அரசின் ஊழல்: எல்.முருகன் கண்டனம்

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, நலத்திட்டங்களை செயல்படுத்த தவெக அரசு உடனடியாக முனைய வேண்டும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். திமுக அரசின் ஊழல்களை…

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் 4 தொகுதிகள் காலியான நிலையில் இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில்

தமிழகத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாகியுள்ளன. ஏற்கனவே திருச்சி கிழக்கு தொகுதியும் காலியாக இருந்த நிலையில், தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பை தொகுதிகளின் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?