MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: Tamil Nadu Government Formation Live Updates: ஆளுநர் மாளிகையில் விஜய்; தொண்டர்களை நோக்கி கை கூப்பியபடி வருகை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - அரசியல் - Tamil Nadu Government Formation Live Updates: ஆளுநர் மாளிகையில் விஜய்; தொண்டர்களை நோக்கி கை கூப்பியபடி வருகை

அரசியல்

Tamil Nadu Government Formation Live Updates: ஆளுநர் மாளிகையில் விஜய்; தொண்டர்களை நோக்கி கை கூப்பியபடி வருகை

Admin
Last updated: மே 8, 2026 1:50 மணி
Admin
Share
SHARE

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்கள் இல்லாததால் காங்கிரஸ், வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்டது. இதில் காங்கிரஸ் ஆதரவு அளிக்க கடிதம் கொடுத்துள்ளது. பிற மூன்று கட்சிகள் ஆலோசித்து முடிவெடுப்பதாக கூறியுள்ளன. 

மறுபுறம் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தமிழ்நாடு ஆளுநரிடம் த.வெ.க தலைவர் விஜய் புதன்கிழமை (மே 6) ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், வியாழக்கிழமை (மே 7) காலை வரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படாததால் மீண்டும் ஆளுநரை விஜய் சந்தித்துப் பேசினார். இருப்பினும் த.வெ.க.,வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்காமல் இருந்தார். இது சர்ச்சையான நிலையில், தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், விஜய் மெஜாரிட்டி எண்ணுடன் வந்தால் ஆட்சி அமைக்க அழைக்க தயார். ஆனால் விஜய்யிடம் எந்த பெரும்பான்மையும் இல்லை. விஜய் ஆட்சி அமைப்பதை நான் தடுப்பதாக எப்படி சொல்ல முடியும்? விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. தி.மு.க. – அ.தி.மு.க. சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும் சாத்தியம்தான் என்று கூறினார்.

இதற்கிடையில், தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியானது. மேலும், அ.தி.மு.க.வுக்கு தேவையான ஆதரவை வெளியில் இருந்து தி.மு.க. அளிக்கும் என்றும் எதிர்க்கட்சியாக செயல்பட அக்கட்சி முடிவு செய்துள்ளது என்றும் தகவல் வெளியானது. இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு நீடித்தது. எனினும், தி.மு.க. இதனை மறுத்தது. ஆனால், அ.தி.மு.க. கருத்து தெரிவிக்காமலே இருந்து வருகிறது. மேலும், த.வெ.க.வுக்கு ஆதரவு கிடையாது என்றும் அ.தி.மு.க. தெரிவித்து விட்டது. இந்தநிலையில், தமிழகத்தில் ஆட்சி அமைப்பது யார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களைத் தெரிந்துக் கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love1
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்..! – திருமாவளவன்.
Next Article வேலூர்: கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் – கொலையா? போலீசார் விசாரணை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தின் அலுவலகம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு இந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

You Might Also Like

அரசியல்

300 ஆண்டுகளுக்குப் பின் தாயகம் திரும்பிய ராஜேந்திர சோழன் செப்பேடுகள்!

சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜேந்திர சோழன் காலத்து ஆனைமங்கலம் செப்பேடுகள் பிரதமர் மோடியால் இந்தியா கொண்டுவரப்பட்டுள்ளன. இவை தமிழ் மன்னர்களின் கொடைத்திறன் மற்றும் சமய நல்லிணக்கத்தைப்…

2 Min Read
அரசியல்

லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஜிபி-யாக அருண் ஐபிஎஸ் நியமனம்

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஜிபி-யாக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் விஜய் உத்தரவின் பேரில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

1 Min Read
அரசியல்

திமுகவை விமர்சிக்கும் தவெகவுடன் நிற்பதில் நியாயம் உள்ளது – திருமாவளவன்

திமுகவை கடுமையாக விமர்சிக்கும் தவெகவுடன் இணைந்து செயல்படுவதில் ஒரு நியாயம் உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுகவினர் இதை உணர வேண்டும் என்றும் அவர்…

5 Min Read
அரசியல்

அதிமுக, பாஜக ஆதரவாளர்களுக்கு அரசு வழக்கறிஞர் பதவி: த.வெ.க. வழக்கறிஞர்கள் அதிருப்தி

தமிழகத்தில் புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் அதிமுக, பாஜக ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக கூறி த.வெ.க. வழக்கறிஞர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கட்சிக்கு உழைத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?