MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழகத்தின் முதல் திருநங்கை அரசு பேருந்து ஓட்டுநர் ஸ்ரீதேவி: சாதனை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழகத்தின் முதல் திருநங்கை அரசு பேருந்து ஓட்டுநர் ஸ்ரீதேவி: சாதனை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தமிழகத்தின் முதல் திருநங்கை அரசு பேருந்து ஓட்டுநர் ஸ்ரீதேவி: சாதனை!

தமிழ்நாடு

தமிழகத்தின் முதல் திருநங்கை அரசு பேருந்து ஓட்டுநர் ஸ்ரீதேவி: சாதனை!

Admin
Last updated: ஜூன் 20, 2026 6:31 மணி
Admin
Share
SHARE

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) முதல்முறையாக ஒரு திருநங்கை ஓட்டுநராகப் பணியில் இணைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் ஸ்ரீதேவி.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி வரை அரசுப் பேருந்தை இயக்கி வரும் இவர், போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருச்சி-ராமேஸ்வரம் சாலையில் தினசரி நூற்றுக்கணக்கான பயணிகளைப் பாதுகாப்பாக ஏற்றிச் சென்று தனது கடமையை அர்ப்பணிப்புடன் செய்து வருகிறார். அரசுப் போக்குவரத்துத் துறையில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது, சமூகத்தில் திருநங்கைகளுக்கான சமத்துவத்தையும் அங்கீகாரத்தையும் உயர்த்தியுள்ளது.

பேருந்தை இயக்கும் ஸ்ரீதேவிக்கு சக ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் பயணிகள் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆறு மாதங்களுக்கு முன்பு திருநங்கை கலையரசி நடத்துனராகப் பணியில் சேர்ந்த நிலையில், தற்போது ஸ்ரீதேவி ஓட்டுநராகப் பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பயணிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகவும், ஒத்துழைப்பு அளிப்பதாகவும் ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார். ஆண்கள் மட்டுமே ஓட்டுநர்களாக இருந்த அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தன்னை ஓட்டுநராக நியமித்தது பெருமிதமாகவும் பெருமையாகவும் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

‘இது எனக்கு மகிழ்ச்சியான வேலை. நான் இதை வெறும் வேலையாக நினைக்கவில்லை. இந்த வேலையை நான் மிகவும் விரும்பி காதலித்து செய்கின்றேன்’ என்று ஸ்ரீதேவி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தற்போது தற்காலிக ஓட்டுநராகப் பணிபுரியும் தனக்கு நிரந்தரப் பணி வழங்கினால், தனக்கும் தன் குடும்பத்திற்கும், தான் சார்ந்த திருநங்கைகள் சமூகத்திற்கும் அரசு மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்ததாக எண்ணுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். 2025 இல் பயிற்சி முடித்ததாகவும், ஒரு வருட காலமாகப் பேருந்து ஓட்டி வருவதாகவும், பணியை நிரந்தரமாக்கினால் அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருநங்கைகள் என்றாலே யாசகம் கேட்கத்தான் செல்வார்கள் என்று நினைத்தவர்கள், தான் இந்த வேலைக்கு வந்ததால் எல்லோரும் சந்தோஷப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

நவீன காலகட்டத்தில் திருநங்கைகள் கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்துத் துறைகளிலும் தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு திருநங்கை பேருந்து ஓட்டுநராகக் களம் இறங்கியிருப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. கனரக வாகனங்களை இயக்குவது சவாலானது என்ற நிலையை உடைத்து, புதுக்கோட்டை-திருச்சி இடையே தினசரி அரசுப் பேருந்தை வெற்றிகரமாக இயக்கி வருகிறார். குறிப்பாக, அதிக நெரிசல் நிறைந்த திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் எந்தவித பதட்டமும் இன்றி பேருந்தை இயக்கி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. போக்குவரத்துத் துறையில் புதிய வரலாற்றுப் புரட்சியை ஏற்படுத்தியுள்ள ஓட்டுநர் ஸ்ரீதேவிக்கு அரசு உடனடியாகப் பணியை நிரந்தரமாக்கி கௌரவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வலுவாக எழுந்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Transgender Driverஓட்டுநர்சாதனைதமிழ்நாடு அரசு பேருந்துதிருநங்கைஸ்ரீதேவி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரேஷன் அட்டைதாரர்களே கவனம்: ஜூன் 25க்குள் இதை செய்யுங்கள்!
Next Article விவசாய கடன் தள்ளுபடி: தவெக அரசை விமர்சித்த அண்ணாமலை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜார்க்கண்ட் இரும்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்ட காட்சி

ஜார்க்கண்ட் இரும்பு ஆலையில் தீ விபத்து: 3 பொறியாளர்கள் உயிரிழப்பு

ஜார்க்கண்ட் இரும்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பொறியாளர்கள் உயிரிழந்தனர்.…

ஆகஸ்ட் 22, 2026

ரூ.500 கோடி நில மோசடி: லோக் அயுக்தா விசாரணை

தனியார் நில ஆவணங்களில் டிஜிட்டல் கையெழுத்துக்கள் மாற்றப்பட்டு,…

ஆகஸ்ட் 22, 2026

மராத்தி மொழி தெரியாத 1,268 ஓட்டுநர்களுக்கு மகாராஷ்டிர அரசு நோட்டீஸ்

மும்பையில் மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ,…

ஆகஸ்ட் 22, 2026

பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு தடுப்புகள் அகற்றம்: மத்திய அரசு விளக்கம்

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக வளாகத்தில், விசா…

ஆகஸ்ட் 22, 2026

டெல்லியில் 42 நாட்கள் கட்டுமான பணிகளுக்கு தடை

டெல்லியில் குளிர்கால காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில்,…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சீரமைப்புப் பணி
தமிழ்நாடு

1.5 கோடி வாக்காளர்கள் பெயர் நீக்கம்: தேர்தல் ஆணைய நடவடிக்கை!

தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் பணி மூலம் 1.5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read
சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள்
தமிழ்நாடு

7 மணி நேர மின்வெட்டு: சாலையில் படுத்து பொதுமக்கள் போராட்டம்

திருவொற்றியூர் பகுதியில் 7 மணி நேர மின்வெட்டால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், வள்ளலார் நெடுஞ்சாலை மற்றும் எண்ணூர் விரைவு சாலையில் படுத்து சாலை மறியல் செய்து கடும் எதிர்ப்பு…

2 Min Read
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

முதல்வர் விஜய் ஆட்சியில் பெண்கள் விமர்சித்தால் கைது: ஆதவ் அர்ஜுனா

முதல்வர் விஜய் ஆட்சியில் பெண்கள் குறித்து விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுவர் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். யாரையும் பழிவாங்கும் நோக்கம் இல்லை என்றும் அவர் கூறினார்.

1 Min Read
சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் ஆதார் அட்டை
தமிழ்நாடு

சமையல் சிலிண்டர் மானியம்: ஆகஸ்ட் 16 கடைசி நாள்!

சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்களே கவனம்! உங்கள் ஆதார் சரிபார்ப்பை ஆகஸ்ட் 16க்குள் முடிக்காவிட்டால் மானியம் நிறுத்தப்படும். எண்ணெய் நிறுவனங்கள் இறுதி அவகாசம் அளித்துள்ளன.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?