MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழ்நாட்டின் கடன் சுமை: வட்டிக்கு ரூ.67,000 கோடி – நிதியமைச்சர் மரியவில்சன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழ்நாட்டின் கடன் சுமை: வட்டிக்கு ரூ.67,000 கோடி – நிதியமைச்சர் மரியவில்சன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - தமிழ்நாட்டின் கடன் சுமை: வட்டிக்கு ரூ.67,000 கோடி – நிதியமைச்சர் மரியவில்சன்

லைஃப் ஸ்டைல்

தமிழ்நாட்டின் கடன் சுமை: வட்டிக்கு ரூ.67,000 கோடி – நிதியமைச்சர் மரியவில்சன்

Admin
Last updated: ஜூன் 16, 2026 6:30 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாட்டில் தனிநபர் கடன் சுமை ரூ. 1,28,934 ஆக உயர்ந்துள்ளது என்றும், வட்டி செலவினத்தால் மூலதன செலவு குறைந்து வருவதாகவும் நிதியமைச்சர் மரியவில்சன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையை தலைமைச் செயலகத்தில் வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 5 ஆண்டுகளில் வட்டி செலவினம் 61 சதவீதம் அதிகரித்துள்ளது. சந்தை நிலவரத்தை பிரதிபலிக்கும் வகையில் வழிகாட்டு மதிப்புகள் திருத்தப்படவில்லை. சொத்துப்பதிவு மூலம் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் தொடர்ந்து இழக்கப்பட்டு வருகிறது. முத்திரைத்தாள் கட்டணம், சந்தை மதிப்பை விட குறைவாக உள்ளது. முந்தைய அரசு முதலீட்டுக்காக அல்லாமல், அன்றாட செலவுகளுக்காக கடன் வாங்கியுள்ளது. அரசு, வட்டி மட்டும் ஆண்டுக்கு ரூ.67,000 கோடி செலுத்துகிறது. கனிம வளத்துறையில் நடந்த ஊழல், வருவாய் இழப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது" என்று கூறினார்.

கர்நாடகா, மராட்டியம், குஜராத் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் மொத்த கடன் சதவீதம் அதிகமாக உள்ளது. திமுக ஆட்சியில் கடந்த 5 வருடங்களில் வாங்கப்பட்ட கடன், கடந்த 60 ஆண்டுகளில் வாங்கிய கடனை விட அதிகம். சொந்த வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்கு, கடனுக்கான வட்டிக்கே செல்கிறது. வட்டி மட்டும் ஆண்டுக்கு ரூ.67,000 கோடி செலுத்தப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.4.87 லட்சம் கோடி கடன் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், பிற மாநிலங்களை விட மிக அதிகமான கடன் சுமையுடன் பிறக்கிறது.

2021ல் ரூ.5 லட்சம் கோடியாக இருந்த கடன், 2026ல் ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று காலத்தை விட திமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. திமுக ஆட்சியில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவில் அதிக வருவாய் கொண்ட மாநிலமாக திகழ்ந்த தமிழ்நாடு, தற்போது நாட்டின் சராசரியை விட வருவாயில் பின்தங்கியுள்ளது. தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடியாக உள்ளது. 2021ல் ரூ.46,538 கோடியாக இருந்த வருவாய்ப் பற்றாக்குறை, 2026ல் ரூ.78,324 கோடியாக அதிகரித்துள்ளது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வருவாய் பற்றாக்குறை வரம்பு மீறி அதிகரித்துள்ளது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மூலதனச் செலவினம் குறைந்துள்ளது. தமிழ்நாட்டின் மொத்த வருவாய் வரவில் வட்டிச் செலவினம் 22.8 சதவீதமாகவும், தவிர்க்க முடியாத செலவுகள் 64.4 சதவீதமாகவும் உள்ளது" என அவர் தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Naduகடன்தமிழ்நாடுநிதியமைச்சர்மரியவில்சன்வட்டி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மதுரை வழியாக ரெயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
Next Article சவுரவ் கங்குலி மீது அவதூறு: போலீசில் புகார் அளித்த முன்னாள் கிரிக்கெட் கேப்டன்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மலப்புரம் குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் காட்டு யானை

கேரளாவில் ஒற்றை காட்டு யானை உலா: மலப்புரம் மக்கள் அச்சம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், குடியிருப்புப் பகுதிக்குள் ஒற்றைக் காட்டு யானை ஒன்று…

ஜூலை 31, 2026

காவி உடையணிந்து, உண்டியலில் பணம் போட்ட ராகுல்: எதிர்க்கட்சி நூதனப் போராட்டம்

அயோத்தி ராமர் கோயில் நிதி விவகாரத்தை கண்டித்து…

ஜூலை 31, 2026

பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோவை விமர்சித்த அபிஜித் தீப்கே

பிரதமர் மோடியின் 'வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டத்…

ஜூலை 31, 2026

பிரதமர் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு ரூ.6,000 மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கும் பிரதமரின் கிசான்…

ஜூலை 31, 2026

விவாகரத்து கோரி உமர் அப்துல்லா, பாயல் அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் மனு

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா…

ஜூலை 31, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

போர் முடிவுக்கு வருமா..? அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானிடம் இருந்து ‘இன்றிரவுக்குள்’ பதில் வரும் – டிரம்ப் நம்பிக்கை

ஈரான்-அமெரிக்கா இடையே முதல்கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 2-வது கட்ட பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டது. போரை முடிவுக்கு கொண்டுவர மத்தியஸ்த நாடான பாகிஸ்தான் மூலமாக…

1 Min Read
தமிழ்நாடு

சட்டமன்றத்தில் கிண்டல்: முதல்வருக்கு ஸ்டாலின் கொடுத்த பதிலடி!

சட்டமன்றத்தில் முதலமைச்சர் தன்னை கிண்டல் செய்ததற்கு பதிலளித்த மு.க. ஸ்டாலின், 'மக்கள் மனதில் பதிந்திருக்கிறேன். மக்கள் தேடும் இடத்தில் நான் முதல் ஆளாக நிற்பேன்' என்று ஆவேசமாக…

2 Min Read
முட்டையின் மஞ்சள் கருவின் ஆரோக்கிய நன்மைகள் பற்றிய தகவல்
லைஃப் ஸ்டைல்

முட்டையின் மஞ்சள் கரு: ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்!

முட்டையின் மஞ்சள் கருவில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் டி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இரத்த சோகை மற்றும் எலும்பு…

1 Min Read
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காவிரி நீர் பிரச்சனை குறித்து ஆலோசனை
இந்தியா

காவிரி நீர் பங்கீட்டு சந்திப்பு ரத்து: ஜோசப் விஜய் பெங்களூரு பயணம் ஒத்திவைப்பு

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகா-தமிழகம் இடையே நிலவும் பதற்றம் காரணமாக, முதல்வர் ஜோசப் விஜய் பெங்களூரு பயணம் ரத்து. அமைச்சர் டி.கே.சிவக்குமார் சந்திப்பு ஒத்திவைப்பு.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?