MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 5 தொகுதி இடைத்தேர்தல்: ஆகஸ்டில் ஓட்டுப்பதிவு?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - 5 தொகுதி இடைத்தேர்தல்: ஆகஸ்டில் ஓட்டுப்பதிவு?

லைஃப் ஸ்டைல்

5 தொகுதி இடைத்தேர்தல்: ஆகஸ்டில் ஓட்டுப்பதிவு?

Admin
Last updated: ஜூன் 12, 2026 8:22 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் ஓட்டுப்பதிவு நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதேபோல், 25 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்த த.வெ.க. அரசுக்கு, மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர்.

இதையடுத்து, திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகள் காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி, இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

முதல் கட்டமாக, வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவத்தினரின் பட்டியலை உள்துறை அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. மேலும், 5 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளிடம் வாக்காளர் எண்ணிக்கை, வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட தகவல்களைக் கேட்டு, வரும் 22-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அடுத்த மாதம் (ஜூலை) இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:By-electionTamil Naduஅரசியல்இடைத்தேர்தல்தமிழ்நாடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மகரம்: 12 ஜூன் 2026 இன்றைய ராசிபலன்
Next Article மிதுனம் ராசி: இன்றைய ராசிபலன் – 12 ஜூன் 2026
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

தங்கம் விலை திடீர் சரிவு: சென்னையில் சவரன் ரூ.880 குறைந்தது

சென்னையில் இன்று மாலை தங்கத்தின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.240 உயர்ந்திருந்த தங்கம், மாலையில் சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.1,11,600 ஆக…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து சினேகா மோகன்தாஸ் விலகல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில மகளிர் அணிச் செயலாளராக இருந்த சினேகா மோகன்தாஸ், தனது பதவிகளை ராஜினாமா செய்து கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 'ஃபுட் பேங்க்…

2 Min Read
க்ரைம்

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்சியில் இடமில்லை: திமுக முன்னாள் எம்எல்ஏ கருத்தால் சர்ச்சை

திமுக முன்னாள் எம்எல்ஏ எழிலன், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்சியில் இடமில்லை என்ற வசனம் கொண்ட காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இது திமுகவில்…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

ராசிபுரம் அருகே புதையல் என நம்பி ஏமாந்த மக்கள்!

ராசிபுரம் அருகே முட்புதரில் தங்க நாணயங்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலால் பொதுமக்கள் திரண்டு தேடினர். ஆனால், அவை போலி நாணயங்கள் என தெரியவந்ததால் மக்கள்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?