தனுஷ் நடிக்கும் ‘தமிழ் முருகன்’ – பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியீடு!

நடிகர் தனுஷ் நடிக்கும் ‘தமிழ் முருகன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியீடு.

தமிழ் கடவுளான முருகப்பெருமானை மையப்படுத்தி உருவாகும் ‘தமிழ் முருகன்’ திரைப்படத்தின் அறிமுக வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவில், சாய் அப்யங்கர் இசையில் அதிரடி காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக, ஆந்திராவில் என்.டி.ஆர்-திரிவிக்ரம் என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில், தமிழர் இறைவனான முருகன் வடபுலத்தில் பிறந்தவர் என்ற கருத்துருவாக்கத்துடன் படம் உருவாகி வருவதாக படக்குழு பதிவிட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம் ஆகியோர் ‘அரவிந்த சமேதா வீர ராகவா’ பட வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள இத்திரைப்படத்தை ஹாரிகா அண்ட் ஹாசினி கிரியேஷன் மற்றும் நந்தமுரி தாராகா ராமாராவ் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த தயாரிப்பாளர் நாகவம்சி, 'வடக்கில் பிறந்தவர்… மையப்பகுதியில் உருவாக்கப்பட்டவர்… தெற்கில் வழிபடப்படுபவர்… இப்போது… பிரபஞ்சத்திற்கே உரிய ஒரு காவியமாக மாறவிருக்கும் கதை' என குறிப்பிட்டிருந்தார். இது முருகனை வடக்கில் பிறந்தவர் எனக் குறிப்பிட்டது சர்ச்சையை மேலும் அதிகப்படுத்தியது.

இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் ‘தமிழ் முருகன்’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். பிரபல எழுத்தாளர் அறிவுமதி இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் Miles To Go நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

முருகனை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் இப்படி பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவரும் சூழலில், நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில், 'தமிழ் மக்கள் மற்றும் தமிழ் நிலங்களின் நித்திய பாதுகாவலர், போர் வீரர், ராஜா & தலைவர் ‘தமிழ் முருகன்’' என்று குறிப்பிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், தமிழ் இறையோன் முருகப்பெருமானை மையப்படுத்தி, போர் வீரராகவும், ராஜாவாகவும், தலைவராகவும் சித்தரிக்கப்படும் தமிழ் முருகனின் அறிமுக காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த அறிமுக வீடியோவில் இடம்பெற்றுள்ள சாய் அப்யங்கரின் பின்னணி இசை படத்திற்கு மேலும் மெருகூட்டியுள்ளது. தமிழ் கடவுள் முருகனை வடபுலத்தில் பிறந்தவர் என ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தனுஷ் நடிக்கும் இந்த ‘தமிழ் முருகன்’ திரைப்படம் தமிழ் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முருகனை தமிழ் கடவுளாகவும், தமிழ் நிலங்களின் பாதுகாவலராகவும் சித்தரிக்கும் இந்த முயற்சிக்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்து வருகிறது.

படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோவில், தனுஷ் ஒரு போர் வீரராகவும், ராஜாவாகவும், தலைவராகவும் கம்பீரமாக காட்சியளிக்கிறார். தமிழ் நிலங்களின் பாதுகாவலராக அவர் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த திரைப்படம் தமிழ் கலாச்சாரத்தையும், முருகனின் பெருமையையும் உலகிற்கு எடுத்துரைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் வசனங்களை அறிவுமதி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version