MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பிரபல சின்னத்திரை நடிகர் ரவி மீது பாலியல் சீண்டல் வழக்கு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பிரபல சின்னத்திரை நடிகர் ரவி மீது பாலியல் சீண்டல் வழக்கு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பிரபல சின்னத்திரை நடிகர் ரவி மீது பாலியல் சீண்டல் வழக்கு

தமிழ்நாடு

பிரபல சின்னத்திரை நடிகர் ரவி மீது பாலியல் சீண்டல் வழக்கு

Fernandez
Last updated: நவம்பர் 18, 2026 1:33 மணி
Fernandez
Share
பிரபல சின்னத்திரை நடிகர் ரவி
பிரபல சின்னத்திரை நடிகர் ரவி மீது பாலியல் சீண்டல் வழக்குப்பதிவு
SHARE

சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் இன்போ மீடியா நிறுவனத்தில் பணியாற்றும் பெண் தொகுப்பாளர் ஒருவரை கன்னத்தில் முத்தமிட்டு பாலியல் ரீதியாக சீண்டியதாக, பிரபல சின்னத்திரை நடிகர் மற்றும் பாஜக பிரசாரப் பிரிவு மாநிலச் செயலாளர் ரவி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாமரை என்ற பெயரில் இயங்கும் இந்த நிறுவனத்தில் 30 வயதுடைய பெண் ஒருவர் அரசியல் பிரிவு செய்தி தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த நவம்பர் 14ஆம் தேதி பிற்பகலில், அந்த பெண் தொகுப்பாளர், பாஜக பிரசாரப் பிரிவு மாநிலச் செயலாளரான ரவியை நேர்காணல் செய்துள்ளார். நேர்காணல் முடிந்ததும் அலுவலகத்தை விட்டு வெளியேறியபோது, ரவி திடீரென அந்த பெண் தொகுப்பாளரின் கன்னத்தில் முத்தமிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த தொகுப்பாளர், இது குறித்து கேட்டபோது, 'உங்கள் நிறுவனம் உங்களை வேலையில் இருந்து நீக்கினால், நான் உங்களை என்னுடன் வைத்துக் கொள்கிறேன்' என ஆபாசமாக பேசியதாகவும் தெரிகிறது. இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் தொகுப்பாளர், தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாகியிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அப்போது, விக்னேஷ் என்பவர் இது குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.

எனினும், ரவி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பாதிக்கப்பட்ட பெண் தொகுப்பாளர் நேற்று (நவம்பர் 17ஆம் தேதி) அசோக் நகர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், அசோக் நகர் போலீசார் ரவி மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட தனியார் தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் பிரபலமானவர் நடிகர் ரவி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பல தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மூலம் அறியப்பட்டவர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Pandian StoresPOCSO ActRaviSexual HarassmentTV Actorசின்னத்திரை நடிகர்பாண்டியன் ஸ்டோர்ஸ்பாலியல் சீண்டல்பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம்ரவி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள் அடங்கிய அறிக்கை தமிழகத்தின் பணக்கார மாவட்டங்கள்: சென்னையில் சர்ப்ரைஸ்!
Next Article முதலமைச்சர் விஜய் புதிய மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய் திருச்சி பயணம்: புதிய மருத்துவமனை திறப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வந்தே பாரத் ரயில் மற்றும் அபராதம் விதிக்கப்பட்ட பயணிகள்

வந்தே பாரத் ரயிலில் 140 கி.மீ. பயணம்: 12 பேருக்கு ரூ.36,000 அபராதம்

உத்தர பிரதேசத்தில், உறவினர்களை வழியனுப்ப வந்த 12 பேர் வந்தே பாரத் ரயிலில்…

நவம்பர் 19, 2026

அயோத்தி ராமர் கோயில்: தரிசன நேரம் இரவு 11 மணி வரை நீட்டிப்பு

அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை…

நவம்பர் 19, 2026

காஷ்மீர் என்கவுண்டர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி…

நவம்பர் 18, 2026

சோனியா நூல் விழாவில் பாஜக வீரர் அம்ரீந்தர் சிங்: காங்கிரஸில் மீண்டும் சேர வாய்ப்பா?

சோனியா காந்தி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில்…

நவம்பர் 17, 2026

பிரேக் செயலிழந்தும் 463 கி.மீ. ஓடிய வந்தே பாரத் ரயில்: விசாரணை தீவிரம்

பிரேக் செயலிழந்த நிலையில் சுமார் 463 கி.மீ.…

நவம்பர் 16, 2026

You Might Also Like

உத்தராகண்ட் சுரங்க விபத்து நடைபெற்ற பகுதி
தமிழ்நாடு

உத்தராகண்ட் சுரங்க விபத்து: 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் சுரங்கப்பாதையில் தண்ணீர் புகுந்த விபத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

2 Min Read
நடிகர் தனுஷ் ரசிகர் மன்ற உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்துதல்
தமிழ்நாடு

நடிகர் தனுஷின் அரசியல் நகர்வு: தீவிரமடையும் ரசிகர் மன்ற உறுப்பினர் சேர்க்கை!

நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்ற உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துமாறு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். கோவை மாவட்டத்தில் தொகுதி வாரியாக நற்பணி மன்றம் தொடங்கப்படவுள்ளது.

1 Min Read
கைது செய்யப்பட்ட தொழிலதிபர் லட்சுமிகாந்தன்
தமிழ்நாடு

வேலை தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.5 லட்சம் பெற்று பாலியல் பலாத்காரம் செய்த தொழிலதிபர் கைது

வேலை தருவதாக கூறி புதுச்சேரிக்கு அழைத்து வரப்பட்டு, ரூ.5 லட்சம் பறிக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கேரள இளம்பெண் புகார். தொழிலதிபர் லட்சுமிகாந்தன் கைது.

2 Min Read
அகஸ்தியர் அருவி, நெல்லை
தமிழ்நாடு

நெல்லை: அகஸ்தியர் அருவியில் நாளை முதல் குளிக்க அனுமதி!

நெல்லை: அகஸ்தியர் அருவியில் 10 நாள் வனத்துறை தடை இன்றுடன் முடிவடைகிறது. நாளை முதல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?