பிரபல சின்னத்திரை நடிகர் ரவி மீது பாலியல் சீண்டல் வழக்கு

பிரபல சின்னத்திரை நடிகர் ரவி மீது பாலியல் சீண்டல் வழக்குப்பதிவு

சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் இன்போ மீடியா நிறுவனத்தில் பணியாற்றும் பெண் தொகுப்பாளர் ஒருவரை கன்னத்தில் முத்தமிட்டு பாலியல் ரீதியாக சீண்டியதாக, பிரபல சின்னத்திரை நடிகர் மற்றும் பாஜக பிரசாரப் பிரிவு மாநிலச் செயலாளர் ரவி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாமரை என்ற பெயரில் இயங்கும் இந்த நிறுவனத்தில் 30 வயதுடைய பெண் ஒருவர் அரசியல் பிரிவு செய்தி தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த நவம்பர் 14ஆம் தேதி பிற்பகலில், அந்த பெண் தொகுப்பாளர், பாஜக பிரசாரப் பிரிவு மாநிலச் செயலாளரான ரவியை நேர்காணல் செய்துள்ளார். நேர்காணல் முடிந்ததும் அலுவலகத்தை விட்டு வெளியேறியபோது, ரவி திடீரென அந்த பெண் தொகுப்பாளரின் கன்னத்தில் முத்தமிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த தொகுப்பாளர், இது குறித்து கேட்டபோது, 'உங்கள் நிறுவனம் உங்களை வேலையில் இருந்து நீக்கினால், நான் உங்களை என்னுடன் வைத்துக் கொள்கிறேன்' என ஆபாசமாக பேசியதாகவும் தெரிகிறது. இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் தொகுப்பாளர், தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாகியிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அப்போது, விக்னேஷ் என்பவர் இது குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.

எனினும், ரவி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பாதிக்கப்பட்ட பெண் தொகுப்பாளர் நேற்று (நவம்பர் 17ஆம் தேதி) அசோக் நகர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், அசோக் நகர் போலீசார் ரவி மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட தனியார் தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் பிரபலமானவர் நடிகர் ரவி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பல தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மூலம் அறியப்பட்டவர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version