MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஐபிஎல் விமர்சனம்: சுனில் கவாஸ்கர் கடும் தாக்குதல்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - விளையாட்டு - ஐபிஎல் விமர்சனம்: சுனில் கவாஸ்கர் கடும் தாக்குதல்!

விளையாட்டு

ஐபிஎல் விமர்சனம்: சுனில் கவாஸ்கர் கடும் தாக்குதல்!

Admin
Last updated: ஜூன் 11, 2026 12:57 மணி
Admin
Share
SHARE

ஐபிஎல் தொடரை விமர்சிக்கும் வெளிநாட்டு முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வாரியங்களுக்கு இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிசிசிஐ வழங்கும் 10 சதவீத தொகையை மறந்துவிட்டு குறை கூறுவதாக அவர் சாடியுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் போது இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடினார். ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. சர்வதேச போட்டிகளை விட உள்ளூர் டி20 லீக் தொடர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக கூறி, இங்கிலாந்தின் மைக்கேல் வான், நியூசிலாந்தின் சைமன் டவுல் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பலர் ஆர்ச்சரையும், ஐபிஎல் தொடரையும் கடுமையாக விமர்சித்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சுனில் கவாஸ்கர் தனது கட்டுரையில், 'இந்திய கிரிக்கெட் வாரியத்தையும், ஐபிஎல் தொடரையும் விமர்சிப்பது வெளிநாட்டினருக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்காக மாறிவிட்டது. தங்கள் நாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடும் போது, அவர்களின் ஒட்டுமொத்த சம்பளத்தில் 10 சதவீத தொகையை பிசிசிஐ சம்பந்தப்பட்ட வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு வழங்குகிறது. இதை எந்த விமர்சகர்களும் பேசுவதில்லை. ஐபிஎல் தொடர் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் பவுண்டுகளை மற்ற கிரிக்கெட் வாரியங்களுக்கு வழங்கி வருகிறது. இந்திய கிரிக்கெட் மற்றும் ரசிகர்களின் பணத்தை வைத்து தான் பல வெளிநாட்டு வாரியங்கள் தங்கள் கஜானாவை நிரப்புகின்றன' என்று குறிப்பிட்டுள்ளார்.

'இதையெல்லாம் மறந்துவிட்டு ஐபிஎல் தொடரையும், இந்திய கிரிக்கெட்டையும் குறை கூறுவதை அவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். நீங்கள் எவ்வளவு தான் கீழே தள்ள நினைத்தாலும், இந்திய கிரிக்கெட் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் என்பதை விமர்சகர்கள் விழித்துக்கொண்டு புரிந்து கொள்ள வேண்டும்' என கவாஸ்கர் ஆவேசமாக கூறியுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CricketIPLஐபிஎல்கிரிக்கெட்சுனில் கவாஸ்கர்பிசிசிஐ
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விஜய் சேதுபதியின் கிண்டல்: விடிவி கணேஷை தாக்கும் தவெக ஆதரவாளர்கள்!
Next Article அடுத்த கூட்டத் தொடரில் பொதுச்சேவை உரிமைச் சட்டம்: அன்புமணி வலியுறுத்தல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி திருமலையில் 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம் செய்யும் 116 வயது மூதாட்டி

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்…

ஜூலை 5, 2026

யானை தந்தங்கள், கலைப்பொருட்கள்: வனத்துறையிடம் ஒப்படைக்க மோகன்லாலுக்கு விண்ணப்பம்

கேரளாவில், நடிகர் மோகன்லாலிடம் யானை தந்தங்கள் மற்றும்…

ஜூலை 5, 2026

கர்நாடகாவில் ஆண்களுக்கான தேசிய மனித உரிமைக்குழு: புதிய முயற்சி

கர்நாடகாவில் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும்…

ஜூலை 5, 2026

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி: இந்தியா ரூ. 38,000 கோடியை தாண்டியது

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2013-14ல் ரூ.…

ஜூலை 4, 2026

ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு ஆடு: அசத்தல் நீச்சல் வீடியோ வைரல்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு…

ஜூலை 4, 2026

You Might Also Like

விளையாட்டு

இத்தாலி ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் வெற்றி

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில்…

1 Min Read
விளையாட்டு

IPL 2026: வைபவ் சூர்யவன்ஷியை வீழ்த்திய தந்திரம்.. நெஹ்ராவின் ‘மாஸ்டர் பிளான்.. செய்து முடித்த சிராஜ்

ஜெய்ப்பூர்: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 230 ரன்கள் என்ற பெரிய இலக்கை சேஸ் செய்த போது, 15 வயது சிறுவன் வைபவ்…

2 Min Read
விளையாட்டு

இந்தியாவை வீழ்த்துவது கடினம்: பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெஸன்

தற்போதைய கிரிக்கெட் உலகில் இந்திய அணிதான் மிகச்சிறந்த அணியாகத் திகழ்கிறது என்றும், அவர்களை வீழ்த்துவது பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, உலகிலுள்ள அனைத்து அணிகளுக்கும் பெரும் சவாலாக உள்ளது என்றும்…

2 Min Read
விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டை காக்க அஸ்வின் யோசனை: முதல்தர போட்டிகளில் கவர்ச்சி அவசியம்

டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் எச்சரிக்கை விடுத்துள்ளார். முதல்தர கிரிக்கெட் போட்டிகளை கவர்ச்சிகரமானதாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?