MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பெற்றோர் வாங்கிய கடனுக்காக மாணவனுக்கு கொடூரத் தண்டனை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - பெற்றோர் வாங்கிய கடனுக்காக மாணவனுக்கு கொடூரத் தண்டனை!

லைஃப் ஸ்டைல்

பெற்றோர் வாங்கிய கடனுக்காக மாணவனுக்கு கொடூரத் தண்டனை!

Admin
Last updated: ஜூன் 18, 2026 8:17 காலை
Admin
Share
SHARE

விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே சிறுவாலை கிராமத்தில், பெற்றோர் வாங்கிய ரூ.50,000 கடனுக்காக, 15 வயது மாணவனுக்கு செங்கல் சூளை உரிமையாளர் பிரபாகரன் கொடூரமாகத் தாக்கி காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறுவாலை கிராமத்தைச் சேர்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவி மற்றும் 15 வயது மகனுடன் வசித்து வருகிறார். இவர், செல்லங்குப்பம் பகுதியைச் சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர் பிரபாகரனிடம் ரூ.50,000 முன்பணம் கடனாக வாங்கியுள்ளார். இதற்காக, அவரும் அவரது மனைவியும் பிரபாகரனின் செங்கல் சூளையில் வேலை செய்து வந்துள்ளனர். வாங்கிய கடன் தொகை முழுமையாகக் கழிவதற்குள் இருவரும் சொந்த ஊருக்குத் திரும்பியதால், பிரபாகரன் பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் பணம் தரவில்லை.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு பிரபாகரன், மாணவனின் தந்தையை கடுமையாகத் திட்டி, மிரட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. குடும்பச் சூழல் காரணமாக பணத்தைத் தாமதமாகத் தருவதாக அவர் கூறியபோதும், உடனடியாகப் பணம் கேட்டு பிரபாகரன் மிரட்டியுள்ளார். நேற்று காலை பள்ளிக்குச் சென்ற மாணவனை, பள்ளி அருகே மறைவான இடத்தில் தடுத்த பிரபாகரனும், அடையாளம் தெரியாத மற்றொரு நபரும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். மாணவனின் வாயில் துணியைக் கட்டி, காலணியால் தாக்கியதாகவும், வயிறு மற்றும் முதுகிலும் அடித்து, பிளேடால் வாயைக் கிழித்ததாகவும் மாணவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

காயமடைந்த மாணவன் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாணவனின் தந்தை கெடார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரபாகரனை கைது செய்து, தலைமறைவான மற்றொரு நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Student Assaultகடன்பாடுதாக்குதல்மாணவன்வன்கொடுமைவிழுப்புரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அமெரிக்கா- ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!
Next Article துபாயில் என் விளையாட்டு வாழ்க்கை: மாதவனின் மகன் வேதாந்த்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

சொத்து விவரங்கள் தாக்கல் செய்யாத சென்னை மேயர் பிரியா!

சென்னை மேயர் பிரியா உட்பட 75% கவுன்சிலர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

18-06-2026 ராசி பலன்: தடைகள் நீங்கி வாழ்க்கை வளம் பெறும்!

18-06-2026 இன்றைய ராசி பலன்: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கும்? காரிய தடைகள் நீங்கி வாழ்க்கை வளம் பெறும்.

3 Min Read
தமிழ்நாடு

கோவையில் வீடு புகுந்து தாக்குதல்: கல்லூரி மாணவி தந்தை மீது இளைஞர்கள் வெறிச்செயல்!

கோவையில் வீடு புகுந்து கல்லூரி மாணவியின் தந்தை மீது இளைஞர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணம், நகைகள் திருட்டு மற்றும் கொலை மிரட்டல் புகார்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

கும்ப ராசிக்கு யோகம்: 14.6.2026 முதல் 20.6.2026 வரை பலன்கள்

கும்ப ராசிக்காரர்களுக்கு ஜூன் 14 முதல் 20, 2026 வரை புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். புத ஆதித்ய யோகத்தால் கல்வி, பதவி உயர்வு, குடும்ப ஒற்றுமை என…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?