தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. சமீபத்தில் கட்சி தொடங்கிய நடிகர் விஜய், தனது தேர்தல் பிரச்சாரங்களில் ஆளும் தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய்யை தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விஜய் பேசியதாகக் கூறப்படும் கருத்துக்களை சுட்டிக்காட்டி ஸ்டாலின் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். "படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று கூறிவிட்டு, மக்கள் முன் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே, உங்கள் இன்றைய உரையை கேட்டேன். சில கேள்விகள் உங்களிடம் உள்ளன," என ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
"அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டு, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?" என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், "வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா?" என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
விஜய்யின் வேட்பாளர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு குறித்து பேசிய ஸ்டாலின், "போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?" என வினவியுள்ளார். மேலும், தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என விஜய் பேசியதையும் ஸ்டாலின் சுட்டிக்காட்டி, "சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
"கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?" என விஜய்யின் பா.ஜ.க. எதிர்ப்பு நிலைப்பாடு குறித்து ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். "'தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்' என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?" என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், விஜய்யின் ஆட்சியின் திட்டங்கள் அனைத்தும் தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே என்றும், அவர் கொண்டு வந்ததாகக் கூறும் புதுமையான திட்டங்கள் அனைத்தும் 'வெற்றி' என்ற பெயரில் தோல்வியடைந்த திட்டங்கள் என்றும் ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார்.
பெண்களை தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் என விஜய் கூறுவது பொய் என்றும், அவரது Virtual Abuser-களின் Track Record-ஐ பார்க்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். "ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்" என விஜய் பேசியதை குறிப்பிட்டு, "உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன?" என ஸ்டாலின் கேட்டுள்ளார்.
கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, "எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்" என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை. ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள். அதனால், "முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?" என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir," என ஸ்டாலின் தனது பதிவை முடித்துள்ளார்.
இந்தக் கருத்துப் பரிமாற்றம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தல்களில் இது எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
