127 தொகுதிகளில் ஸ்டாலின் கொத்து புரோட்டா: விஜய்க்கு அப்பாவு கேள்வி

முன்னாள் சபாநாயகர் அப்பாவு

முன்னாள் சபாநாயகர் அப்பாவு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி வாய்ப்பை இழந்ததை சுட்டிக்காட்டியுள்ள அவர், கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் பேசிய கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர், 'கொளத்தூரில் 5 நிமிடம் பேசினேன், முன்னாள் முதல்வரை கொத்து புரோட்டா போட்டு விட்டேன்' என்று ஆணவத்துடன் பேசியதாக அப்பாவு குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில், 'தேர்தலுக்கு முன் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் த.வெ.க சார்பாக இந்த விஜய் தான் போட்டியிடுகிறேன் என்று கெத்தாக சொன்ன உங்களுக்கும், 127 தொகுதிகளில் மு.க.ஸ்டாலின் கொத்து புரோட்டா போட்டதை மறந்துவிட்டீர்களா?' என அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், கரூர் பிரச்சாரக் கூட்டத்திற்கு விஜய் 12.30 மணிக்கு வருவார் என்று உங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பத்திரிகை பேட்டியில் கூறியது உங்களுக்கு நினைவிருக்கிறதா? 7 மணி நேரம் கால தாமதமாக கரூர் வந்து 20 நிமிடம் தாங்கள் பேசிய காணொளியை நினைவுபடுத்தி, 41 பேர் இறப்பிற்கு யார் காரணம் என்பதை உங்கள் மனசாட்சியிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்றும் அப்பாவு தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலினைப் போல பழிவாங்கும் எண்ணம் இருந்தால், உங்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பார். ஆனால், மு.க.ஸ்டாலின் அரசியலில் எப்போதும் கண்ணியத்தை கடைப்பிடிப்பவர் என்று அப்பாவு குறிப்பிட்டுள்ளார்.

'தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் இரண்டும் ஊழலில் ஒன்றுதான்' என்று கரூரில் பேசிய முதல்வரை நோக்கி, 'தீர்ந்து போன கட்சியில் ஊழல் செய்தவர்களை தொடர்ந்து உங்கள் கட்சியில் சேர்த்து கொள்வது தூய சக்தியா? அல்லது தூர்நாற்ற சக்தியா?' என அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

'CM sir, இது ஜனநாயக நாடு. மக்கள் தான் எஜமான்கள். விரைவில் காலமும் மாறும்! காட்சிகளும் மாறும்! ஆட்சியும் மாறும்!' என்றும் அப்பாவு தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version