MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சினிமா கவர்ச்சி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது: ஸ்டாலின்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சினிமா கவர்ச்சி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது: ஸ்டாலின்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சினிமா கவர்ச்சி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது: ஸ்டாலின்

தமிழ்நாடு

சினிமா கவர்ச்சி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது: ஸ்டாலின்

Admin
Last updated: மே 24, 2026 8:46 காலை
Admin
Share
SHARE

சென்னை: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தாலும், தற்போதைய ஆட்சி தங்கள் தயவில்தான் நடப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், 'சினிமா கவர்ச்சியால் அமைந்த இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது' என்றும், விரைவில் மக்கள் திமுகவை மீண்டும் ஏற்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தற்போதைய தேர்தல் தோல்வி திமுக இளைஞர்களுக்கு பெரும் வருத்தத்தை அளித்திருப்பதை தான் புரிந்துகொள்வதாகவும், ஆனால் தனிப்பட்ட ஒருவரின் தோல்வியை விட கட்சியின் தோல்வியே முக்கியம் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார். திமுக தொடர்ந்து இரண்டு முறை வென்று ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலையை மாற்ற கடுமையாக உழைத்ததாகவும், அது நிறைவேறாதது வருத்தமளிப்பதாகவும் அவர் கூறினார்.

தேர்தல் தோல்விக்கான காரணத்தை விளக்கிய ஸ்டாலின், 'குழந்தைகள் ஒரு பொம்மையை புதிதாகப் பார்த்தால் விரும்பி விளையாடி, சில நாட்களில் சலித்து தூக்கி எறிவது போல, தங்களுக்குப் பிடித்த நடிகர் ஒருவர் கட்சி ஆரம்பித்ததால் மக்கள் ஆர்வத்தில் வாக்களித்துள்ளனர். ஆனால், விரைவில் உண்மை நிலை அவர்களுக்குப் புரியும். குழந்தை அம்மாவைத் தேடுவது போல மக்கள் நம்மை மீண்டும் ஏற்பார்கள்' என்றார்.

தற்போதைய நிகழ்வை 'அரசியல் சுனாமி' அல்ல, 'சினிமா சுனாமி' என்று குறிப்பிட்ட ஸ்டாலின், பெரும்பான்மை பலம் இல்லாமலேயே ஆட்சி நடப்பதாகவும், நமது கூட்டணி கட்சிகளின் துணையோடுதான் ஆட்சி புரிகிறார்கள் என்றும் கூறினார். ஜனநாயக முறையில் மக்கள் அளித்த தீர்ப்பு சினிமா கவர்ச்சிக்கு சாதகமாக அமைந்திருக்கிறது என்றும், இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKMK StalinTamil Nadu Politicsஅரசியல்திமுகஸ்டாலின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருவாரூரில் 365 கிலோ புகையிலை பறிமுதல்: 3 பேர் கைது
Next Article ஐபிஎல்: 4வது வரிசையில் சதம் அடித்த முதல் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

SUBKO காபி நிறுவனத்தின் விற்பனை ரசீது

வாடிக்கையாளரை உருவ கேலி செய்த காபி நிறுவனம்: மன்னிப்பு கோரிய SUBKO

பெங்களூரு SUBKO காபி நிறுவனம், வாடிக்கையாளரை ரசீதில் 'குண்டான நபர்' என குறிப்பிட்டு…

ஆகஸ்ட் 23, 2026

சீனா செல்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்: எல்லைப் பிரச்சினை விவாதம்

எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில், தேசிய…

ஆகஸ்ட் 23, 2026

ராகுலின் மாணவர் குரல் நிகழ்ச்சி: பாஜக நிலைகுலைந்ததாக காங்கிரஸ் விமர்சனம்

புனேவில் ராகுல் காந்தி நடத்திய மாணவர் கலந்துரையாடலை…

ஆகஸ்ட் 23, 2026

பா.ஜ.க.வில் ஜென்சி தலைமுறையினருக்காக சிறப்பு அணி: முக்கிய நிர்வாகிகள் நியமனம்

இளம் தலைமுறையினரை ஈர்க்கும் நோக்கில் பா.ஜ.க.வில் 'ஜென்சி'…

ஆகஸ்ட் 23, 2026

தேசிய விண்வெளி தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

விஜய் நிலைப்பாடு மாற்றம்: அமித்ஷாவைக் கண்டு பயமா? தயாநிதி மாறன் கேள்வி

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? அமித்ஷாவைக் கண்டு பயமா? என தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

2 Min Read
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
தமிழ்நாடு

சமச்சீர் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்: வைகோ பாராட்டு

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது சமச்சீரான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்…

1 Min Read
தமிழ்நாடு

மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை: முதல்வர் விஜய்க்கு பெற்றோர் நன்றி!

வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் நினைவாக சாலைக்கு பெயர் சூட்டிய முதல்வர் விஜய்க்கு அவரது பெற்றோர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

1 Min Read
தமிழக காவல்துறை அதிகாரிகள் கூட்டம்
தமிழ்நாடு

காவல்துறை ஆள்சேர்ப்பு தள்ளிவைப்பு; பணிச்சுமை அதிகரிப்பு

தமிழக காவல்துறையில் வார விடுமுறை வழங்குவதில் சிக்கல் நீடிப்பதால் பணிச்சுமை அதிகரித்துள்ளது. இந்நிலையில், காவல்துறை ஆள்சேர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?