MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கம்பீருக்கு பதில் தோனி வேண்டும்: ஸ்ரீசாந்த் கருத்து
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கம்பீருக்கு பதில் தோனி வேண்டும்: ஸ்ரீசாந்த் கருத்து
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - கம்பீருக்கு பதில் தோனி வேண்டும்: ஸ்ரீசாந்த் கருத்து

விளையாட்டு

கம்பீருக்கு பதில் தோனி வேண்டும்: ஸ்ரீசாந்த் கருத்து

Admin
Last updated: ஜூன் 19, 2026 8:45 காலை
Admin
Share
SHARE

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீது முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்திய அணிக்கு தற்போதைய சூழலில் கம்பீர் போன்ற பயிற்சியாளர் தேவையில்லை என்றும், தோனி போன்ற ஒரு ஆலோசகர் தான் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஸ்ரீசாந்த், இந்திய டெஸ்ட் அணியின் சமீபத்திய சரிவுக்கு கம்பீரின் அணுகுமுறையே காரணம் என்று குற்றம் சாட்டினார். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி கம்பீரின் பயிற்சியில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. 2024 இல் நியூசிலாந்திற்கு எதிராக சொந்த மண்ணில் பெற்ற 0-3 என்ற வரலாற்றுத் தோல்வி மற்றும் 2025 இல் தென்னாப்பிரிக்காவிடம் பெற்ற 0-2 என்ற தொடர் தோல்விகள் கம்பீரின் பயிற்சியின் கீழ் தான் நடந்துள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா கிட்டத்தட்ட இழந்துவிட்டது.

கம்பீர் வீரர்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும், வீரர்கள் சோபிக்காத போது அவர்களை அணியில் இருந்து நீக்குவதாகவும் விமர்சித்த ஸ்ரீசாந்த், 'பயிற்சியாளரை மாற்றுங்கள். இந்திய அணிக்கு ஆலோசகர் தான் தேவை. நீங்கள் முதலில் ஒரு சகோதரனைப் போல இருக்க வேண்டும். வெற்றி பெறும்போது சிரிப்பதும், தோற்கும்போது கோபப்படுவதும் சரியாக இருக்காது. தோனி ஒருபோதும் வீரர்களுக்கு இது போன்ற அழுத்தத்தை தந்தது கிடையாது. இந்திய அணிக்கு தோனி போன்ற ஒரு ஆலோசகர் தேவை' என்று கூறினார்.

மேலும், இந்த ஆண்டில் இந்திய அணி வென்ற டி20 உலகக் கோப்பைக்கான முழு பெருமையும் கம்பீரையே சேரும் என்பதை ஸ்ரீசாந்த் திட்டவட்டமாக மறுத்தார். களத்தில் வீரர்கள் எடுத்த முடிவுகளே வெற்றிக்குக் காரணம் என்று கூறிய அவர், சஞ்சு சாம்சன், கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் பங்களிப்பும், சரியான நேரத்தில் பந்துவீச்சாளர்களில் செய்யப்பட்ட மாற்றங்களுமே வெற்றிக்கு வழிவகுத்தன என்றார். போட்டியின் போது பயிற்சியாளரா களத்தில் முடிவுகளை எடுக்கிறார் என்றும் ஆஷிஷ் நெஹ்ரா போன்ற எப்போது துடிப்பாக இருக்கும் பயிற்சியாளர்களே அணிக்கு பொருந்துவர் என்றும் ஸ்ரீசாந்த் கூறினார். கம்பீரின் அணுகுமுறை குறித்த விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2026 டி20 உலகக்கோப்பை வெற்றிகள் அவருக்கு சாதகமாக உள்ளன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:இந்திய அணிகிரிக்கெட்கௌதம் கம்பீர்தோனிஸ்ரீசாந்த்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஹைதராபாத்தில் டெஸ்லா எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் திறப்பு!
Next Article கோவில்களை சாதி அடிப்படையில் பிரிக்கக்கூடாது – மதுரை ஐகோர்ட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு

மேகதாது அணைக்கு தடை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு

மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி, தமிழக அரசு…

ஆகஸ்ட் 3, 2026

பிரிஜ் பூஷன் விடுவிப்பை எதிர்த்து மேல்முறையீடு: வினேஷ் போகத் அறிவிப்பு

மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில்…

ஆகஸ்ட் 3, 2026

ராஞ்சியில் மாணவர் போராட்டம்: தொலைதூர நகரங்களில் இருந்து ஆன்லைன் உணவு டெலிவரி!

ராஞ்சியில் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து போராடும் மாணவர்களுக்கு…

ஆகஸ்ட் 3, 2026

பீகாரில் 40 ஆண்டு பாஜக கோட்டை வீழ்ந்தது: பிரசாந்த் கிஷோர் மகத்தான வெற்றி

பீகாரில் 40 ஆண்டுகளாக பாஜக வசம் இருந்த…

ஆகஸ்ட் 3, 2026

பிஹார் பங்கிபூர் இடைத்தேர்தல்: பிரசாந்த் கிஷோரின் அமோக வெற்றி!

பிஹார் மாநிலம் பங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத்தேர்தலில்…

ஆகஸ்ட் 3, 2026

You Might Also Like

அபிஷேக் சர்மா கிரிக்கெட் விளையாடும் புகைப்படம்
விளையாட்டு

91 பந்துகளில் 233 ரன்கள்: அபிஷேக் சர்மாவின் அதிரடி இரட்டை சதம்!

பஞ்சாப் மாநில ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், அமிர்தசரஸ் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மா, வெறும் 91 பந்துகளில் 233 ரன்கள் குவித்து இரட்டை சதம் அடித்து சாதனை…

2 Min Read
விளையாட்டு

ஹர்திக் பாண்டியா: சிஎஸ்கே உட்பட 7 அணிகள் போட்டி!

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா விலக வாய்ப்புள்ள நிலையில், அவரை வாங்க சிஎஸ்கே உட்பட 7 ஐபிஎல் அணிகள் போட்டி போடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.…

2 Min Read
இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா
விளையாட்டு

2027 உலகக் கோப்பை: இந்திய பந்துவீச்சை விமர்சித்த புஜாரா

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் மோசமான பந்துவீச்சை முன்னாள் வீரர் புஜாரா விமர்சித்துள்ளார். 2027 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு நல்ல…

2 Min Read
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்
விளையாட்டு

IND vs ZIM: 3வது டி20யில் பஞ்சாப் வீரருக்கு வாய்ப்பு – ஆகாஷ் சோப்ரா

ஜிம்பாப்வேக்கு எதிரான 3வது டி20 போட்டியில் பிரப்சிம்ரன் சிங்குக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஆகாஷ் சோப்ரா கருத்து. இஷான் கிஷனுக்கு ஓய்வு அளிக்கலாம் என பரிந்துரை.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?