MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: AIADMK | அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி. வேலுமணி தேர்வு?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > AIADMK | அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி. வேலுமணி தேர்வு?
தமிழ்நாடு

AIADMK | அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி. வேலுமணி தேர்வு?

Admin
Last updated: May 11, 2026 6:50 am
Admin
Share
SHARE

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவிய பிறகு அ.தி.மு.க. கட்சி இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட தொடங்கி உள்ளது மீண்டும் அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் இன்றி, சட்டப்பேரவை அ.தி.மு.க. குழு தலைவராக எஸ்.பி. வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகித்த அ.தி.மு.க. மொத்தத்தில் 169 தொகுதிகளில் போட்டியிட்டது. எனினும், அ.தி.மு.க. கட்சி வெறும் 47 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றது. இந்த தோல்வி மூலம் அ.தி.மு.க. கூட்டணி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில், கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இதில், கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் தேர்தல் தோல்வியால் எதிர்க்கட்சி அந்தஸ்தைகூட பெற முடியாமல் போனது, எடப்பாடி பழனிசாமி பொது செயலாளராக பொறுப்பேற்றதில் இருந்து தேர்தலில் அக்கட்சி சந்தித்து வரும் தொடர் தோல்விகள் மற்றும் த.வெ.க. ஆட்சி அமைப்பது குறித்த கட்சியின் நிலைப்பாடு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவிப்பதுடன் ஆட்சியிலும் பங்கேற்கலாம், சட்டப்பேரவை குழுத் தலைவர் பொறுப்பில் மாற்றம் வேண்டும் என்ற கருத்து சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பில் முன்வைக்கப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்ததால், வாக்குவாதம் ஏற்பட்டு சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தரப்பினர் ஆலோசனை கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக பெரும்பாலான மாவட்ட செயலாளர்களும், 35-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்களும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தரப்பினரை சமாதானப்படுத்த மூத்த நிர்வாகிகள் குழு சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி. சண்முகம் வீட்டுக்குச் சென்று பேசினர். இருப்பினும், சி.வி. சண்முகம் தரப்பு மூத்த நிர்வாகிகளின் சமாதானத்தை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணிக்கு 35-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அத்துடன், எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவை குழுத் தலைவராகவும், சி.வி.சண்முகம் துணைத் தலைவராக ஆதரவு தெரிவித்து அவர்கள் கையொப்பமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எம்.எல்.ஏ.-க்கள் பதவியேற்பு இன்று காலை நடைபெறவுள்ள நிலையில், அ.தி.மு.க.வில் மொத்தமாக உள்ள 47 எம்.எல்.ஏ.-க்களில் 35-க்கும் மேற்பட்டோர் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணிக்கு ஆதரவு அளித்துள்ளனர். அத்துடன் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், எம்.எல்.ஏ.-க்கள் என சுமார் 60 சதவீதம் பேர் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி அணி பக்கம் இருப்பதாக கூறப்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு தற்போது சிக்கலான சூழ்நிலை உருவாகியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாக வாய்ப்பு
Next Article பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் சரண் அடைந்து விட்டோம் என்று பொருள் அல்ல: ஈரான் ஜனாதிபதி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சின்னச்சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்: அடிப்படை வசதிகள் கோரிக்கை

தேனி மாவட்டம் சின்னச்சுருளி அருவியில் கோடை விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். ஆனால், அடிப்படை வசதிகள் இல்லாததால் பெண்கள் சிரமப்படுவதாகவும், வசதிகளை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் ரமேஷின் அதிரடி ஆய்வு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் ரமேஷ், குடிநீர் தரம் மற்றும் புத்தக விற்பனை குறித்து அதிகாரிகளிடம் கடுமையாக…

1 Min Read
தமிழ்நாடு

மகளிர் பேருந்து பயணத் திட்டம் நிறுத்தம்? – தமிழக அரசு விளக்கம்!

மகளிர் இலவச பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

பொருளாதாரப் பேரிடர் அபாயம்: மத்திய அரசுக்கு பாமக கண்டனம்!

இந்தியப் பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாகவும், இதற்கு மத்திய அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாகச் சாடியுள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?