MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருமணம் நின்றதால் பாவம் பார்க்க வேண்டாம்: ஸ்மிருதி மந்தனா உருக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருமணம் நின்றதால் பாவம் பார்க்க வேண்டாம்: ஸ்மிருதி மந்தனா உருக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - திருமணம் நின்றதால் பாவம் பார்க்க வேண்டாம்: ஸ்மிருதி மந்தனா உருக்கம்

விளையாட்டு

திருமணம் நின்றதால் பாவம் பார்க்க வேண்டாம்: ஸ்மிருதி மந்தனா உருக்கம்

Sri Prem Kumar R
Last updated: செப்டம்பர் 13, 2026 5:53 மணி
Sri Prem Kumar R
Share
இந்திய மகளிர் கிரிக்கெட் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா
SHARE

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையும், துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா, தனக்குக் கிடைக்கும் அனுதாபப் பார்வைகளை மிகவும் வெறுப்பதாகத் தெரிவித்துள்ளார். திருமணம் நின்றதால் தன்னை யாரும் பாவமாகப் பார்க்க வேண்டாம் என்றும், பரிதாபம் காட்ட வேண்டாம் என்றும் அவர் உருக்கமாகக் கூறியுள்ளார்.

பிரபல போட்காஸ்டர் ராஜ் ஷமானி உடனான நேர்காணலில் ஸ்மிருதி மந்தனா பங்கேற்றார். அப்போது, தனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சோகமான தருணங்களையும், அவற்றை அவர் எவ்வாறு கையாள்கிறார் என்பது குறித்தும் விரிவாகப் பேசினார். உணர்ச்சிகள் அதிகமாகும்போது சில சமயங்களில் குளியலறைக்குச் சென்று அழுவதாகவும், ஆனால் அதற்காக பிறரிடம் இருந்து அனுதாபத்தை எதிர்பார்ப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து பேசிய ஸ்மிருதி மந்தனா, 'நான் சோகமாக இருக்கும்போது நீண்ட நேரம் அமைதியாகி விடுவேன். எனக்குள் நானே ஒடுங்கிப் போய்விடுவேன். மற்றவர்களிடம் என் சோகத்தைச் சொல்லி அழுது வடிய எனக்குப் பிடிக்காது. எல்லாவற்றையும் விட எனக்குப் பிடிக்காத விஷயம் ஒன்று உண்டு என்றால், அது அனுதாபம் தான். எந்த வகையான அனுதாபத்தையும் நான் வெறுக்கிறேன்,' என்று அவர் கூறினார்.

'ஐயோ சோகமாக இருக்கிறாயா, என்ன நடந்தது?' என்று மக்கள் வந்து கேட்பதை என்னால் தாங்க முடியாது. நாம் ஏதோ ஒரு போட்டியில் ஆட்டமிழந்து சோகமாக இருந்தால், நாம் ஏதோ பெரிய இழப்பைச் சந்தித்துவிட்டது போல் மக்கள் ஓடி வந்து ஆறுதல் கூறுவார்கள். எனது வாழ்க்கையின் முக்கிய விதியே யாரிடமிருந்தும் எவ்வித அனுதாபத்தையும் பெறாமல் இருப்பதுதான். என்னை யாரும் பாவம் என்று பார்க்க வேண்டாம். நான் நலமாகவும், மனவலிமையோடும் இருக்கிறேன்,' என்று மந்தனா உறுதியாகத் தெரிவித்தார்.

'நான் எனது வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட முறையில் வாழ்ந்துள்ளேன். இந்த அனுதாப வலைக்குள் நான் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. அதனால்தான் நேர்காணல்களில் எனது குடும்பச் சிக்கல்களைப் பற்றி பேசுவதைத் தவிர்க்கிறேன். மக்கள் என்னை எப்போதும் ஒரு மகிழ்ச்சியான மனிதராகப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனது தனிப்பட்ட சோகக் கதையைக் கேட்டு மக்கள் ஈர்க்கப்படுவதை விட, எனது ஆட்டத்தைப் பார்த்து அவர்கள் உத்வேகம் பெற வேண்டும்,' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், கடினமான தருணங்கள் மற்றும் கடந்த கால அனுபவங்களை மனதில் தேக்கி வைக்காமல், அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதிலேயே தமக்கு நம்பிக்கை அதிகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 30 வயதான ஸ்மிருதி மந்தனா, தற்போது உலகின் முன்னணி பேட்டராகத் திகழ்கிறார். 2025 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கியப் பங்களிப்பை வழங்கிய அவர், தற்போது டி20 தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CricketIndian Women's CricketSmriti MandhanaSympathyஅனுதாபம்இந்திய மகளிர் கிரிக்கெட்கிரிக்கெட்ஸ்மிருதி மந்தனா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஜி.டி.என் திரைப்படத்தின் போஸ்டர் அல்லது படக்குழுவினர் நெட்​பிளிக்ஸ் டாப் 10 பட்டியலில் ‘ஜி.டி.என்.’ திரைப்படம்
Next Article சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் ஆளுநர் அனசுயா உய்கே சந்திப்பு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கவர்னர் அர்லேகரை சந்திப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில் மணமகனுக்கு பரிசளிக்கப்பட்ட கார்

ரூ.2.5 கோடியில் கார்: பீகார் எம்எல்ஏ மகள் திருமணத்தில் மாப்பிள்ளைக்கு அசத்தல் பரிசு!

பீகாரில் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில், மணமகனுக்கு ரூ.2.5 கோடியில் கார்…

நவம்பர் 11, 2026

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

You Might Also Like

விளையாட்டு

பதிரானாவுக்கு மீண்டும் காயம்: சிஎஸ்கே தப்பித்ததா? 18 கோடி வீண்!

ஐபிஎல் 2026-ல் KKR வீரர் மதீஷா பதிரானா வெறும் 8 பந்துகள் வீசிய நிலையில் காயமடைந்து வெளியேறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.18 கோடிக்கு வாங்கப்பட்ட வீரரின்…

2 Min Read
விளையாட்டு

வைபவ் சூர்யவன்ஷியை சீண்டிய இலங்கை வீரர்: நடந்தது என்ன?

இந்தியா ஏ - இலங்கை ஏ அணிகள் மோதிய போட்டியில், இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷியை இலங்கை வீரர் விஷென் ஹலம்பகே சீண்டியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. 'வீட்டுக்குப்…

2 Min Read
இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங் மற்றும் நடிகை சம்ரீன் கவுர்
விளையாட்டு

அர்ஷ்தீப் சிங் – சம்ரீன் கவுர் காதல்: இன்ஸ்டாகிராம் உரையாடல் தீவிரம்

இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங், நடிகை சம்ரீன் கவுர் உடனான காதல் வதந்திகளுக்கு வலுசேர்க்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் காதல் கமெண்ட் பதிவிட்டுள்ளார். இருவரும் விரைவில் திருமணம்…

3 Min Read
விளையாட்டு

இந்தியா ஏ அபார வெற்றி: இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு!

தம்புல்லாவில் நடைபெற்ற முத்தரப்பு ஏ தொடரில், ஆப்கானிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா ஏ அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம்,…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?