தென்கொரியாவுக்கு முதலீடுகளை ஈர்க்கச் சென்ற தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தமிழகம் திரும்பியுள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சிவகாசி பட்டாசுகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
சீனாவிற்கு இணையாக சிவகாசி பட்டாசுகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார். சீன தயாரிப்புகள் உலகளவில் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், சிவகாசியின் திறமையை பயன்படுத்தி இதுவரை ஏற்றுமதி செய்யாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்றும், இதற்கான சட்டப்பூர்வமான வழிமுறைகளை பின்பற்றி பாலிசி உருவாக்கி ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் அவர் கூறினார். இது விருதுநகரின் தரத்தை உயர்த்தும் என்றும், அருகில் துறைமுகம் இருப்பதால் ஏற்றுமதி எளிதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தில் இரண்டாம் இடத்தில் இருக்கும் சிவகாசியை மேலும் மேம்படுத்த பல வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். கொரியாவிற்கு சென்றபோது சிவகாசி பட்டாசு உற்பத்தி குறித்து கூறியதற்கு அவர்கள் ஆச்சரியப்பட்டு, ஏற்றுமதி செய்ய அழைப்பு விடுத்தனர். போலந்து நாட்டில் ஒரு வாடிக்கையாளர் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்வதாக கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
முதல்வர் விஜய்யின் வழிகாட்டுதலுடன் இந்த பாலிசியை எப்படி கொண்டு வர வேண்டும் என்பதை ஆராய்ந்து, ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுப்பேன் என்று அமைச்சர் கீர்த்தனா உறுதியளித்தார்.