MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஷரியா சட்டத்தை பயன்படுத்தி ரூ.6,000 கோடி மோசடி: ஹைதராபாத் பெண் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஷரியா சட்டத்தை பயன்படுத்தி ரூ.6,000 கோடி மோசடி: ஹைதராபாத் பெண் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - ஷரியா சட்டத்தை பயன்படுத்தி ரூ.6,000 கோடி மோசடி: ஹைதராபாத் பெண் கைது

இந்தியா

ஷரியா சட்டத்தை பயன்படுத்தி ரூ.6,000 கோடி மோசடி: ஹைதராபாத் பெண் கைது

Admin
Last updated: மே 26, 2026 1:31 மணி
Admin
Share
SHARE

ஷரியா சட்டத்தை முன்னிறுத்தி சுமார் ரூ.6,000 கோடி மோசடி செய்ததாக ஹைதராபாத்தை சேர்ந்த ஆலிமா நவ்ஹேரா ஷேக் (52) என்ற பெண் குருகிராமில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஹீரா குழும நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வந்தார்.

ஹீரா குழுமம் தங்கம், ஜவுளி, கிரானைட், சுற்றுலா, ரியல் எஸ்டேட் மற்றும் இணைய வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக ஆலிமா விளம்பரப்படுத்தினார். முஸ்லிம்களின் ஷரியா சட்டப்படி வட்டி பெறுவது குற்றம் என்றும், ஆனால் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் வட்டிக்கு பதிலாக ஆண்டுக்கு 36% ஈவுத்தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த கவர்ச்சிகரமான விளம்பர உத்தியால் ஈர்க்கப்பட்ட சுமார் 1.75 லட்சத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் ஹீரா குழுமத்தில் ரூ.6,000 கோடிக்கு மேல் முதலீடு செய்தனர்.

ஆனால், வாக்குறுதி அளித்தபடி முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை வழங்கப்படவில்லை. முதலீட்டாளர்கள் வழங்கிய பணத்தை தனது சொந்த கணக்குகளுக்கு மாற்றிய ஆலிமா, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்தார். இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இது தொடர்பாக அமலாக்கத்துறை தனி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதன் பேரில் அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டன.

பல்வேறு வழக்குகளில் ஜாமீன் பெற்ற ஆலிமா மீது, தெலங்கானாவின் வாரங்கல் காவல் நிலையத்தில் 2021-ல் தங்க முதலீடு மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை விசாரித்த வாரங்கல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. மேலும் ஹைதராபாத் சிறப்பு நீதிமன்றமும் கைது வாரண்ட் பிறப்பித்தது. உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இந்த சூழலில், ஹரியானாவில் அவர் பதுங்கி இருப்பதாக அமலாக்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தெலங்கானா மற்றும் ஹரியானா போலீசாருடன் இணைந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆலிமாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Newsகைதுமோசடிஷரியா சட்டம்ஹீரா குழுமம்ஹைதராபாத்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry1
Surprise1
Cry0
Wink0
Previous Article விவசாயக் கடன் தள்ளுபடி: விஞ்ஞான ஏமாற்று வேலை – இபிஎஸ் குற்றச்சாட்டு
Next Article தமிழகத்தில் எளிதாக ஆட்சிக்கு வரலாம் – பவன் கல்யாண் பேச்சு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் தேசிய மாநாட்டில் உரையாற்றுகிறார்

டெல்லியில் மாநில நீர்வளத்துறை செயலாளர்கள் தேசிய மாநாடு

புதுடெல்லியில் இன்று மாநில நீர்வளத்துறை செயலாளர்களுக்கான தேசிய மாநாடு நடைபெறுகிறது. மத்திய ஜல்…

ஜூலை 13, 2026

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை புகழ்ந்த பதிப்பாளர்கள் கைது

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை பெருமைப்படுத்தும்…

ஜூலை 13, 2026

ககன்யான் விண்கலம்: 3 சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு

ககன்யான் விண்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று புதிய சோதனைகள்…

ஜூலை 13, 2026

குதிரை பேரம்: உமர் அப்துல்லா குற்றச்சாட்டுக்கு பாஜக கண்டனம்

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பா.ஜ.க.…

ஜூலை 13, 2026

கணவர் மீது வழக்கு: கோமியத்தை குடிக்க வற்புறுத்தல்

தானே மாநகரில், மனைவியை கோமியத்தை குடிக்க வற்புறுத்திய…

ஜூலை 13, 2026

You Might Also Like

அயோத்தி ராமர் கோவில்
இந்தியா

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட புனித நூல் காணாமல் போனதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி லட்சுமிநாராயணன் பகிரங்கமாக குற்றம்…

1 Min Read
இந்தியா

மோடி மேற்கு வங்கம், ஒடிசா பயணம்: யோகா, நிதி, புதிய கப்பல்கள்

பிரதமர் மோடி மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவுக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார். அங்கு யோகா தின நிகழ்ச்சி, பி.எம்.கிசான் நிதி வெளியீடு மற்றும் புதிய போர் கப்பல்கள்…

1 Min Read
மேற்கு வங்கத்தில் சிறுமி கூட்டு பாலியல் கொலை சம்பவம் தொடர்பான செய்தி
இந்தியா

மேற்கு வங்கத்தில் சிறுமி கூட்டு பாலியல் கொலை: முக்கிய குற்றவாளி என்கவுண்டரில் மீட்பு

மேற்கு வங்கத்தில் 11 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி காவல்துறையின் என்கவுண்டரில் உயிரிழந்தான். மேலும் குற்றவாளிகளைத் தேடும்…

1 Min Read
இந்தியா

Kerala Assembly Election 2026 | கேரளாவில் அரியணை யாருக்கு? – 1 சதவீதத்திற்கும் குறைவான வித்தியாசம்… முந்தைய தேர்தல் கணக்கு!

RDல் தம்பதிகள் 10 ஆண்டு மாதம் ரூ.24,000 சேமித்தால் ரூ.41 லட்சம் பெறலாம். ஆண்டுக்கு 6.7% வட்டி; 5 ஆண்டுகள் முடிந்ததும் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கலாம்.…

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?