MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சேலம் குடிநீர் விநியோகம்: பன்னாட்டு நிறுவனத்திற்கு தாரை வார்ப்பதா? – முதல்வர் விஜய்க்கு சீமான் கண்டனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சேலம் குடிநீர் விநியோகம்: பன்னாட்டு நிறுவனத்திற்கு தாரை வார்ப்பதா? – முதல்வர் விஜய்க்கு சீமான் கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சேலம் குடிநீர் விநியோகம்: பன்னாட்டு நிறுவனத்திற்கு தாரை வார்ப்பதா? – முதல்வர் விஜய்க்கு சீமான் கண்டனம்

தமிழ்நாடு

சேலம் குடிநீர் விநியோகம்: பன்னாட்டு நிறுவனத்திற்கு தாரை வார்ப்பதா? – முதல்வர் விஜய்க்கு சீமான் கண்டனம்

Fernandez
Last updated: ஜூலை 11, 2026 1:32 மணி
Fernandez
Share
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
SHARE

சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு 25 ஆண்டுகளுக்கு தாரை வார்த்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:

"சேலம் மாநகர குடிநீர் விநியோகத்தை 25 ஆண்டுகளுக்கு சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாரைவார்த்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. அர்ஜென்டினா மற்றும் பொலிவியா போன்ற நாடுகளுக்குள் குடிநீர் விநியோகம் செய்வதாய் உள்நுழைந்து, தண்ணீரை விற்பனைப் பண்டமாக்கி, அம்மண்ணின் நீர்வளத்தைச் சூறையாடி, அந்நாட்டு மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு, சேலம் மாநகரத்தின் நீர் விநியோகத்தை வழங்கியிருக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; அது புல், பூண்டு, பூச்சி, ஆடு, மாடு, கரடி, மான், புலி, சிங்கம் என உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்குமான உயிருடைமை. அதனை மனிதர்களுக்கு மட்டுமானதாக்கி, விற்பனைப் பண்டமாக மாற்றி, சந்தைப்படுத்திப் பொருளீட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. நீரை விற்பனை செய்யும் மானுடகுலத்தின் செயல் உலக உயிர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். புட்டிகளிலும், போத்தல்களிலும் அடைக்கப்பட்டுள்ள நீரை மனிதர்கள் விலைகொடுத்து வாங்கிப் பருகிவிட முடியும். காக்கையும், குருவியும், மைனாவும், சிட்டும் தனது தாகத்திற்கு என்ன செய்யும்? எனும் கேள்வியை உளச்சான்றோடு ஒவ்வொரு குடிமகனும் எழுப்ப வேண்டும். தண்ணீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்குவதும், குடிநீரை சந்தைப்பொருள் ஆக்குவதும் ஏற்கவே முடியாத சனநாயகத் துரோகம். வரிசெலுத்தி, வாக்குச் செலுத்தி ஓர் அரசை நிர்மாணிக்கும் குடிமக்களுக்கு தூய குடிநீரைத் தங்குதடையின்றித் தர வேண்டியது ஒரு அரசின் தலையாயப் பொறுப்பும், முதன்மைக் கடமையுமாகும்.

கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகம் தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டு, அதற்கெதிராகப் பரப்புரையும், போராட்டமும் செய்து வரும் நிலையில், தற்போது சேலம் மாநகரத்தின் குடிநீர் விநியோகத்தை அதே சூயஸ் நிறுவனத்திடம் தவெக அரசு கையளித்திருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய் அவர்கள் குடிநீர் வழங்குவதைத் தனியாருக்குத் தாரைவார்க்க உத்தரவிட்டது ஏன்?

பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தால் குடிநீர் விநியோகத்தைச் சிறப்பாகச் செய்ய முடியும்; இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு அரசு இயந்திரத்தால் செய்ய முடியாதா? பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் இலாபத் தேவைக்குத்தான் வேலைசெய்வார்களே ஒழிய, மக்கள் சேவைக்கு ஒருநாளும் வேலை செய்ய மாட்டார்கள் எனும் அடிப்படைப் புரியாதா? நீர்வளத்தையும், நீராதாரங்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் கையளித்தால், நீர் இறையாண்மை முழுக்க முழுக்க அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். அவர்கள் சொல்கிற விலைக்குக் குடிநீரை மக்கள் வாங்க வேண்டியப் பேராபத்துமிக்க சூழல் நாளை உருவாகும். இது வருங்காலத் தலைமுறையின் நலவாழ்வினைப் பன்னாட்டு நிறுவனத்திடம் அடமானம் வைக்கும் பேரபாயம்.

அர்ஜென்டினாவிலும், பொலிவியாவிலும் சூயஸ் நிறுவனம் செய்த மானுடகுலக் கொடுமைகள் வரலாறாக விரிகையில், கண்முன்னே சாட்சியாக இருக்கையில், அந்நிறுவனத்திடமே சேலம் மாநகரத்தின் நீர்விநியோகத்தை வழங்குவது மக்கள் விரோதப்போக்கின் உச்சமாகும். ஆகவே, சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, மாநில அரசே தரமான குடிநீரை மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு சீமான் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CM VijayNaam Tamilar KatchiSalemSeemanSuez CompanyTVEK GovtWater Supplyகுடிநீர் விநியோகம்சீமான்சூயஸ் நிறுவனம்சேலம்தவெக அரசுநாம் தமிழர் கட்சிமுதல்வர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கரூருக்கு ஒரு வருடம் கழித்து வந்தீர்களா? நயினார் நாகேந்திரன் கேள்வி
Next Article சத்குருவின் 'கிருஷ்ண லீலா' நூல் வெளியீட்டு விழா சத்குருவின் பார்வையில் கிருஷ்ணரின் பன்முகப் பரிமாணங்கள்: ‘கிருஷ்ண லீலா’ நூல் அறிமுகம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

செயற்கை நுண்ணறிவு போர்கள்: ராஜ்நாத் சிங் கருத்து

எதிர்காலப் போர்கள் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் நடத்தப்படலாம், ஆனால் வெற்றிக்கு மனவுறுதி, பயிற்சி…

ஜூலை 11, 2026

வயநாடு: குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது

வயநாடு குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து அச்சம் ஏற்படுத்திய…

ஜூலை 11, 2026

கர்ப்பிணியை கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற கணவன்: அதிர்ச்சி சம்பவம்

குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்ற தகராறில், கர்ப்பிணி…

ஜூலை 11, 2026

காவிரி நீர் பிரச்சினை: பேசித் தீர்க்க தேவகவுடா வலியுறுத்தல்

முன்னாள் பிரதமர் தேவகவுடா, தமிழக முதலமைச்சர் விஜயை…

ஜூலை 11, 2026

இந்தியா-நியூசிலாந்து வர்த்தகம்: 2030க்குள் ரூ.35,000 கோடியாக உயர்வு இலக்கு

இந்தியா மற்றும் நியூசிலாந்து, 2030க்குள் இருதரப்பு வர்த்தகத்தை…

ஜூலை 11, 2026

You Might Also Like

தமிழ்நாடு

வாடமங்கலம் ஏரி: துர்நாற்றம் வீசும் மீன்களால் மக்கள் அவதி!

கிருஷ்ணகிரி மாவட்டம் வாடமங்கலம் ஏரியில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

பொறுப்பு கவர்னருக்கு பொறுப்பு வேண்டாமா? – அமைச்சர் கேள்வி

மதுரையில் வைகை நதி மீட்பு குறித்து பேசிய பொறுப்பு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு, அமைச்சர் வன்னி அரசு 'பொறுப்பு கவர்னருக்கு பொறுப்பு வேண்டாமா?' என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்,…

3 Min Read
தமிழ்நாடு

வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு: வானதி சீனிவாசன்

தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அனைவரும் சமம் – முதல்வர் விஜய்

சட்டப்பேரவையில் முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சமம்தான் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ.க்களுக்கான 2 நாள் பயிற்சி முகாமின் நிறைவு நிகழ்ச்சியில் அவர் இதை வலியுறுத்தினார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?