சேலம் மாவட்டம், குறும்பட்டி நாச்சியூர் பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் எரிந்து சேதமடைந்தன. ஆரம்பத்தில், தீபாவளி பண்டிகைக்கு விற்பனை செய்யப்படாமல் மீதமிருந்த பட்டாசுகள் தீப்பிடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கடை விற்பனையாளர் ஹேமலதா தெரிவித்திருந்தார். ஆனால், காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், விற்பனையாளர் ஹேமலதாவே அரிசி மூட்டைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததும், பின்னர் இது ஒரு விபத்து என்பது போல் நாடகமாடியதும் அம்பலமானது. இந்த அதிர்ச்சி சம்பவத்தைத் தொடர்ந்து, ஹேமலதா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், கூட்டுறவு சங்க அதிகாரிகள், ஹேமலதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்: ரேஷன் கடையில் தீ வைத்த பெண் ஊழியர் கைது

Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை