MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சபரி வர்மன் மரணம்: நீதி கேட்டு போராடும் குடும்பம் – அமைச்சர்கள் ஏமாற்றம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சபரி வர்மன் மரணம்: நீதி கேட்டு போராடும் குடும்பம் – அமைச்சர்கள் ஏமாற்றம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சபரி வர்மன் மரணம்: நீதி கேட்டு போராடும் குடும்பம் – அமைச்சர்கள் ஏமாற்றம்

தமிழ்நாடு

சபரி வர்மன் மரணம்: நீதி கேட்டு போராடும் குடும்பம் – அமைச்சர்கள் ஏமாற்றம்

Fernandez
Last updated: ஜூலை 17, 2026 11:24 காலை
Fernandez
Share
சபரி வர்மன் குடும்பத்தினர் நீதி கேட்டு போராட்டம்
சபரி வர்மன் மரணத்துக்கு நீதி கேட்டு போராடும் அவரது குடும்பத்தினர்.
SHARE

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள மாவட்டச் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரி வர்மன் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் தொடர்பாக நீதிக்காகப் போராடி வரும் குடும்பத்தினர், இலவச வீடோ, அரசு வேலையோ வேண்டாம், எங்களுக்கு நீதி மட்டுமே வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

சபரி வர்மனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த அதிர்ச்சிகரமான தகவலைத் தொடர்ந்து, சபரி வர்மனின் குடும்பத்தினர் அவரது மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுவரை உடலை வாங்கப் போவதில்லை என அவர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் ஆகியோர் சபரி வர்மனின் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அப்போது, சபரி வர்மனின் மரணம் குறித்த சந்தேகங்கள் முழுமையாக நீங்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என குடும்பத்தினர் அமைச்சர்களிடம் உறுதியாகத் தெரிவித்தனர்.

மேலும், பிரேதப் பரிசோதனை தொடர்பான வீடியோ காட்சிகளை மக்கள் கண்காணிப்பகம் மற்றும் மனித உரிமை அமைப்பின் உதவியுடன் மருத்துவர்கள் மூலம் ஆய்வு செய்து தங்கள் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டும் என்றும், மனித உரிமை சார்ந்த வழக்கறிஞர்களிடம் ஆலோசனை பெற்ற பின்னரே சடலத்தை வாங்குவோம் என்றும் குடும்பத்தினர் அமைச்சர்களிடம் தெரிவித்தனர்.

குடும்பத்திற்கு நிவாரணத்தொகை, இலவச வீட்டுமனை, மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு தற்காலிக அரசு வேலை போன்ற சலுகைகள் அடங்கிய கோப்புகளுடன் வந்திருந்த அமைச்சர்கள், குடும்பத்தினரின் உறுதியான நிலைப்பாடு காரணமாக அவற்றை வழங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சபரி வர்மனின் மரணம் குறித்த முழுமையான விசாரணை மற்றும் நீதி கிடைக்கும் வரை குடும்பத்தினர் தங்கள் போராட்டத்தைத் தொடர முடிவு செய்துள்ளனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Human RightsJusticeNagercoil JailSabari Varmanசபரி வர்மன்சபரி வர்மன் மரணம்நாகர்கோவில் சிறைநீதி விசாரணைமனித உரிமை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார் 1993 ஏப்ரல் 14, 15 தேதிகளில் நடந்தது என்ன? வைகோ பரபரப்பு விளக்கம்
Next Article தமிழக அரசு மருந்து நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு மருந்து நிறுவனத்தில் வேலை: டிகிரி தகுதியுடன் 10 பணியிடங்கள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ்

திமுக ஒருபோதும் பாஜக கூட்டணியில் இல்லை – ஜெயராம் ரமேஷ்

பாஜக மற்றும் திமுகவின் கொள்கைகள் வெவ்வேறானவை என்பதால், அவை ஒருபோதும் ஒன்றிணைய முடியாது…

ஜூலை 17, 2026

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர்…

ஜூலை 17, 2026

பூரி ரத யாத்திரையில் 2 பக்தர்கள் உயிரிழப்பு: அதிர்ச்சி

பூரி ஜெகநாதர் ரத யாத்திரையின் போது 60…

ஜூலை 17, 2026

மேற்கு வங்கத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

மேற்கு வங்கத்தில் பள்ளி வேன் மீது ரயில்…

ஜூலை 17, 2026

பிரதமர் இல்லத்தில் அமித் ஷா, நிதின் நவீன் அவசர ஆலோசனை

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், பிரதமர்…

ஜூலை 17, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திருச்சியில் போதை ஊசியால் இளைஞர் பலி: அதிர்ச்சியில் மக்கள்

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே பொது கழிப்பறையில் போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. த.வெ.க. ஆட்சியில் போதைப்பொருள்…

1 Min Read

போக்சோ, கொலை முயற்சி வழக்குகள்: 3 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: போக்சோ மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய 3 பேர், தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.…

2 Min Read
நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

நீட் மறுதேர்வு முடிவுகள்: ஜூலை 20-க்குள் வெளியீடு – புதிய தகவல்

நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20ஆம் தேதிக்குள் வெளியாகும் என தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட தேர்வுக்கு இது…

2 Min Read
போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் குறித்த விசாரணை
தமிழ்நாடு

17 வயது சிறுமிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு

17 வயது சிறுமிக்கு திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?