MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்குத் திரும்பினார்: குல்தீப் யாதவ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மாற்றம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - விளையாட்டு - ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்குத் திரும்பினார்: குல்தீப் யாதவ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மாற்றம்

விளையாட்டு

ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்குத் திரும்பினார்: குல்தீப் யாதவ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மாற்றம்

Admin
Last updated: ஜூன் 23, 2026 3:14 மணி
Admin
Share
SHARE

ஐபிஎல் 2026 சீசன் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய ரிஷப் பண்ட், தனது பழைய அணியான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்குத் திரும்பியுள்ளார். இந்த அதிரடி மாற்றத்திற்காக அவர் தனது சம்பளத்தை பெருமளவு குறைத்துக் கொண்டுள்ளார். அவருக்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் லக்னோ அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு சீசன்களுக்கு முன்பு லக்னோ அணியால் 27 கோடி ரூபாய் என்ற சாதனைத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ரிஷப் பண்ட், அங்கு அவரது பேட்டிங் மற்றும் கேப்டன்சி பெரிய அளவில் எடுபடவில்லை. 2025 மற்றும் 2026 ஐபிஎல் தொடர்களில் அவர் முறையே 269 மற்றும் 312 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். கேப்டனாகவும் அதிக வெற்றிகளைப் பெறவில்லை. இதனையடுத்து, தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்குத் திரும்புவதற்காக தனது சம்பளத்தை 15 கோடி ரூபாயாகக் குறைத்துக் கொண்டுள்ளார்.

முன்னதாக, 2016 முதல் 2024 வரை டெல்லி அணியின் முக்கிய வீரராகவும், கேப்டனாகவும் இருந்த ரிஷப் பண்ட், அந்த அணிக்காக 111 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெல்லி அணியின் வரலாற்றிலேயே அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமை இவருக்கு உண்டு. மேலும், 2021 முதல் 2024 வரை 43 போட்டிகளில் டெல்லி அணியை கேப்டனாக வழிநடத்தியுள்ளார். தற்போது மீண்டும் தனது சொந்த அணிக்குத் திரும்பியிருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த மெகா பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, டெல்லி அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த 2022 இல் டெல்லி அணியில் இணைந்த குல்தீப், 65 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். தற்போது அவர் 13.50 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் லக்னோ அணியில் இணைய உள்ளார். ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் முக்கியமான இந்த வீரர்களின் மாற்று ஒப்பந்தத்தை ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:IPLஐபிஎல்குல்தீப் யாதவ்டெல்லி கேப்பிட்டல்ஸ்ரிஷப் பண்ட்லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்திய தொப்பியின் மதிப்பு குறைகிறது: கவாஸ்கர் கண்டனம்
Next Article சென்னையில் இனி 400 மீட்டருக்கொரு பேருந்து நிறுத்தம்: MTC அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் சட்டமன்ற கட்டிடம்

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி அலுவல் மொழியாக சேர்க்கப்பட்டுள்ளது. இன்று…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

You Might Also Like

விளையாட்டு

ஐபிஎல் 2026: ஸ்டார்க் அடுத்தடுத்து இரு விக்கெட்டுகள் வீழ்த்தியும், ஹாட்ரிக் பந்தில் பறந்த 100 மீட்டர் சிக்ஸர்

டெல்லி அணியின் மிட்செல் ஸ்டார்க் அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை வீழ்த்திய போதும், ஹாட்ரிக் பந்தில் சூர்யான்ஷ் ஷெட்கே 100 மீட்டர் சிக்ஸர் அடித்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு…

2 Min Read
விளையாட்டு

ரோஹித் சர்மா ரன் அவுட்: சுப்மன் கில் மீது பழி இல்லை – மோகித் சர்மா விளக்கம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா ரன் அவுட் ஆனது குறித்து மோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். இதில் சுப்மன் கில் தவறு இல்லை…

2 Min Read
விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்தும் விலகுகிறாரா சூர்யகுமார் யாதவ்?

இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்தும், இந்திய அணியில் இருந்தும் நீக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், தனது ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ்-இல் இருந்தும் விலக உள்ளதாக…

2 Min Read
விளையாட்டு

இந்திய டி20 அணி அறிவிப்பு: ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டன்

அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடர்கள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணிகளை அறிவித்த பிசிசிஐ, ஸ்ரேயாஸ் ஐயரை புதிய கேப்டனாக நியமித்துள்ளது. 15 வயது வைபவ்…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?