27-10-2026 ராசிபலன்: குடும்பத்தில் சகஜநிலை, கருத்து வேறுபாடு நீங்கும்!

இன்றைய ராசிபலன்

27 அக்டோபர் 2026, இன்றைய ராசிபலன்: இந்த நாளில் குடும்பத்தில் சகஜமான சூழல் நிலவும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, சுமூகமான உறவு மலரும்.

மேஷம் ராசிக்காரர்களுக்கு இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. நண்பர்களுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது. உங்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் மட்டும் சற்று கவனம் தேவை.

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்களின் உதவியால் முன்னேற்றம் காணும் வாய்ப்புகள் உண்டு. எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. காரிய வெற்றி நிச்சயம். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். தடைபட்டிருந்த காரியங்கள் சாதகமாக நிறைவேறும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

மிதுனம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். சக மாணவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. காரிய வெற்றி உண்டாகும். குடும்பக் கவலைகள் தீரும். கடின உழைப்பும் மனோ தைரியமும் அதிகரிக்கும். மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழலாம்.

கடகம் ராசிக்காரர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாலினத்தாரால் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை அதிகரிக்கும். பணவரத்து கூடும். வீண் அலைச்சலும் திடீர் கோபமும் ஏற்பட வாய்ப்புண்டு. காரிய வெற்றி உண்டாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும்.

சிம்மம் ராசிக்காரர்களுக்கு இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ள கடன் பிரச்சனைகள் தீரும். போட்டிகள் குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நல்லபடியாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களைத் தவறாகப் புரிந்து கொண்டு சங்கடப்பட நேரிடும். உங்கள் வாக்குவன்மையால் நன்மை ஏற்படும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் நல்ல பலன்கள் கிடைக்கும். நண்பர்களால் சிறு தொந்தரவுகள் ஏற்படலாம்.

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் ஏற்படலாம். காரிய வெற்றி மற்றும் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். சக கலைஞர்கள் மூலம் நன்மை உண்டாகும். சாமர்த்தியமான பேச்சால் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இன்று நேர்மையாகப் பணிகளைச் செய்து பாராட்டுக்களைப் பெறுவீர்கள். உயர் பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும். தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள்.

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மாணவர்களுக்கு சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். பாடங்களில் கவனம் செலுத்துவது அதிகரிக்கும். மனோ தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். எந்த நேரத்திலும் அனைவருக்கும் உதவும் எண்ணம் தோன்றும்.

மகரம் ராசிக்காரர்களுக்கு இன்று கற்பனை வளமும் கலையார்வமும் அதிகரிக்கும். நட்பிற்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.

கும்பம் ராசிக்காரர்களுக்கு இன்று பணவரத்து சற்று குறையலாம். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். வழக்கம்போல் வியாபாரம் நடந்தாலும் திடீர் பணத்தேவை ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையைச் செய்யும் முன்பும் அதுபற்றி அதிகம் யோசிப்பார்கள்.

மீனம் ராசிக்காரர்களுக்கு இன்று சிலருக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சகஜமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். உறவினர்கள் வகையில் செலவுகள் ஏற்படலாம். நண்பர்களால் இருந்து வந்த கருத்து வேற்றுமை அகலும்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version