30-07-2026 ராசிபலன்: அதிகாரிகளின் ஆதரவால் முன்னேற்றம்

இன்றைய ராசிபலன்

30-07-2026 அன்று வெளியிடப்பட்ட இன்றைய ராசிபலன், மேலிடத்தில் உள்ள அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு சாதகமாக இருக்கும் எனத் தெரிவிக்கிறது. இந்த நாள் பல ராசிக்காரர்களுக்கு நற்பெயரையும், கீர்த்தியையும், பொருளாதார வளத்தையும் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகள் பெருகிடவும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் பாக்கியம் ஏற்படும். நீண்ட நாள் கஷ்டங்கள் நீங்கி, எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்ட எண்கள்: 5, 6. அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெள்ளை.

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரத்து கூடும். தடைபட்டிருந்த அனைத்து காரியங்களும் அடுத்தடுத்து நடைபெறும். வெள்ளை உள்ளத்துடன் செயல்படுவோருக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் விலகி நன்மைகள் நடக்கும். சுற்றியிருக்கும் சோம்பேறிகளிடமிருந்து விலகி இருப்பது நல்லது. அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை.

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வேலை மாற்றம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனுகூலமாகும். ஊதிய உயர்வுடன் கூடிய பணி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு அரச அனுகூலம் உண்டு. வியாபாரிகளுக்கு புதிய திட்டங்களை செயல்படுத்த சிறப்பான சந்தர்ப்பம் அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல நேரிடும். அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 7. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பிரவுன்.

கடக ராசிக்காரர்கள் இன்று சக ஊழியர்களுடன் ஒத்துப் போவார்கள். பெரிய கடன்களிலிருந்து விடுபட இது உகந்த நாள். உற்பத்தி சார்ந்த தொழிற்துறையாளர்களுக்கு தொய்வின்றி தொழில் நடைபெறும். வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், நீலம்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிறிது முயற்சி செய்வதன் மூலம் சிறந்த வாய்ப்புகள் கைகூடும். மேலும் உங்கள் கௌரவம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தியடைவீர்கள். அதிர்ஷ்ட எண்கள்: 5, 9. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெள்ளை, மஞ்சள்.

கன்னி ராசிக்காரர்கள் இன்று புத்துணர்ச்சியுடன் எதையும் எதிர்கொள்வார்கள். நல்ல உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் இருக்கும். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் மிகச் சாதுர்யமாக கையாளுவீர்கள். பெண்களுக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமையல் செய்யும் போதும் மின் சாதனங்களை இயக்கும் போதும் கவனம் தேவை. அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், சிவப்பு.

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உங்களது யோசனைகளை மற்றவர்கள் கேட்டு அனுசரித்து செல்வார்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். எதையும் ஆலோசனை செய்து முடிவெடுப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 9. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று தெய்வ நம்பிக்கைகளிலும் சடங்குகள், சம்பிரதாயங்களிலும் நாட்டம் அதிகரிக்கும். உங்களின் செயல்பாட்டினால் குடும்பத்திற்கு நன்மை ஏற்படும். நிலம், வீடு, மனை ஆகியவற்றில் இருந்த சிக்கல்கள் விலகி நன்மையுண்டாகும். விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும். அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்.

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று குடியிருக்கும் வீட்டினை மாற்றவும் சிலருக்கு வாய்ப்புண்டு. பணவரவில் ஓட்டம் இருக்கும். ஆனால் அதை உரியதாக செலவழிப்பதில் உங்கள் திறமை வெளிப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. அதிர்ஷ்ட எண்கள்: 5, 6. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை.

மகர ராசிக்காரர்களுக்கு இன்று இரக்கப்பட்டு செய்த உதவி கூட ஏன் செய்தோம் என்று எண்ண வைக்கும். சுபகாரிய விஷயங்கள் தொய்வின்றி நடக்கும். வேலை இழந்தவர்கள் மீண்டும் பணியில் சேர இது பொன்னான நாள். புதிய பொறுப்புகள் சுமையாக வரலாம். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்.

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மேலிடத்தில் உள்ள அதிகாரிகள் அனுசரனையாக நடந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சனைகளை நிதானமான அணுகுமுறையுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். திறமையான பணியாளர்கள் அமைவார்கள். அதிர்ஷ்ட எண்கள்: 3, 5. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு.

மீன ராசிக்காரர்களுக்கு இன்று தொழில்துறையாளர்களுக்கு நன்றாக இருக்கும். ஊழியர்கள் அமைதியாக செயல்படுவார்கள். வங்கிப் பணப் பரிமாற்ற முறையில் தங்குதடையின்றி நடைபெறும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரத்து தாமதப்படலாம். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட எண்கள்: 2, 4, 6. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பிரவுன்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version