MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: புதுச்சேரி: தற்காலிக சபாநாயகர் நாளை பதவியேற்பு – ரங்கசாமி ராஜினாமா?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > அரசியல் > புதுச்சேரி: தற்காலிக சபாநாயகர் நாளை பதவியேற்பு – ரங்கசாமி ராஜினாமா?
அரசியல்

புதுச்சேரி: தற்காலிக சபாநாயகர் நாளை பதவியேற்பு – ரங்கசாமி ராஜினாமா?

Admin
Last updated: May 17, 2026 5:29 pm
Admin
Share
SHARE

புதுச்சேரி சட்டப்பேரவையில் தற்காலிக சபாநாயகராக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் நாளை நண்பகல் 12 மணிக்கு பதவியேற்க உள்ளார். துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமி தனது தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி புதுச்சேரியில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. என்.ஆர். காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக மற்றும் லஜக தலா 1 என மொத்தம் 18 இடங்களை கைப்பற்றியது. திமுக 5, காங்கிரஸ் 1, நேயம் மக்கள் கழகம் 1, தவெக 2, மற்றும் சுயேச்சைகள் 3 இடங்களை வென்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல்வராக ரங்கசாமி கடந்த மே 13-ம் தேதி பதவியேற்றார். அவருடன் நமச்சிவாயம் மற்றும் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

உப்பளம் தொகுதியில் 5-வது முறையாக வெற்றி பெற்ற அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ, தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பிறப்பித்துள்ளார். நாளை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அன்பழகன் பதவிப்பிரமாணம் ஏற்கிறார். பின்னர், சட்டப்பேரவைக்கு வந்து தற்காலிக சபாநாயகராக அவர் பொறுப்பேற்கிறார்.

முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றார். விதிகளின்படி, அவர் 14 நாட்களுக்குள் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். இதன்படி, நாளை அவர் தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, மே 20-ம் தேதி சட்டப்பேரவை கூடுவதற்கான அறிவிப்பு வெளியாகும். அன்றைய தினம், அன்பழகன் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி தவிர்த்து, மீதமுள்ள 28 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொள்வார்கள். இருப்பினும், புதுச்சேரியில் இன்னும் 3 அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் இழுபறி நீடிப்பதாகவும், புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:PuducherryRengasamySpeakerசபாநாயகர்புதுச்சேரிரங்கசாமி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 20,000 டன் LPG உடன் ஹார்முஸ் கடந்து வந்த Symi கப்பல்!
Next Article உச்சநீதிமன்ற நீதிபதிகள்: 34ல் இருந்து 38 ஆக உயர்வு – குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேற்கு வங்கத்தில் புல்டோசர் ராஜ்ஜியம்: கொல்கத்தாவில் கட்டிடங்கள் இடிப்பு!

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், உத்தரப் பிரதேசத்தைப் போல் புல்டோசர் நடவடிக்கை…

May 17, 2026

கோவில் ஊழியர் ஊதியம்: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!

கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களின் ஊதியம் குறித்து…

May 17, 2026

டெல்லியில் மீண்டும் CNG விலை உயர்வு: மக்கள் அதிர்ச்சி!

டெல்லி மற்றும் NCR பிராந்தியத்தில் சிஎன்ஜி விலை…

May 17, 2026

சோழர் பெருமை: நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்ட ஆனைமங்கலம் செப்பேடுகள் – மோடி நெகிழ்ச்சி

நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்ட ஆனைமங்கலம் செப்பேடுகள் சோழர்களின் பெருமையை…

May 17, 2026

தந்தை வெறிச்செயல்: மகளை கிணற்றில் தள்ளி கொன்று புதைத்த கொடூரம்!

கர்நாடக மாநிலம் தும்கூருவில், திருமண தகராறில் மகளையே…

May 17, 2026

You Might Also Like

அரசியல்

நீட் தேர்வு ரத்து கோரி நாளை மாபெரும் போராட்டம்!

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிடர் கழகம் தலைமையில் நாளை தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கின்றன.

1 Min Read
அரசியல்

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 இன்று முதல் வங்கி கணக்கில் வரவு!

தமிழகத்தில் மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 இன்று வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது பெண்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read
அரசியல்

விலைவாசி உயர்வு: மீண்டும் லாக்டவுன் வருமோ? பிரேமலதா கேள்வி

பெட்ரோல், டீசல், சிஎன்ஜி, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் தவிக்கின்றனர். மீண்டும் லாக்டவுன் போன்ற சூழல் வருமோ என பிரேமலதா அச்சம் தெரிவித்துள்ளார்.

1 Min Read
அரசியல்

கோட் சூட் முதல் வந்தே மாதரம் வரை – முதல்வர் விஜய் பதவியேற்பு விழா ஹைலைட்ஸ்

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்கும் நிகழ்வு இன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. காலை 10 மணிக்குதான் நிகழ்வு தொடங்கியது என்றாலும் அதிகாலை முதலே…

4 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?