தூத்துக்குடி: சப்-இன்ஸ்பெக்டர் கைது கோரி மனைவி உண்ணாவிரதம்

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், கடந்த ஏப்ரல் 7, 2026 அன்று காவல் சார்பு ஆய்வாளர் இசக்கிராஜாவால் துப்பாக்கியால் சுடப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளி காவல் சார்பு ஆய்வாளரை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட மணிகண்டனின் மனைவி பொன்மணி போராட்டத்தில் குதித்துள்ளார்.

தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பொன்மணி, 'எனது கணவரைச் சுட்ட காவல் சார்பு ஆய்வாளர் இசக்கிராஜாவை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இந்த கொடூர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட எனது கணவருக்கு தமிழக அரசு உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். மேலும், எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு எனக்கொரு அரசு வேலையும் வழங்க வேண்டும்' என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார்.

தங்களுக்கு இதுவரை எந்த நீதியும் கிடைக்கவில்லை என்றும், நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வரும் மே 26ஆம் தேதி ஆலங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வின்போது, சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பு தமிழ்நாடு நிறுவனர் தலைவர் சிலுவை, வழக்கறிஞர்கள் திலக் மற்றும் நம்பிராஜன் ஆகியோர் உடனிருந்தனர். காவல்துறையினரின் அத்துமீறலுக்கு எதிராக வழக்கறிஞர் கூட்டமைப்பு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தும் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version