MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மின் கட்டண உயர்வு, மின்வெட்டுக்கு எதிராக பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மின் கட்டண உயர்வு, மின்வெட்டுக்கு எதிராக பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மின் கட்டண உயர்வு, மின்வெட்டுக்கு எதிராக பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!

தமிழ்நாடு

மின் கட்டண உயர்வு, மின்வெட்டுக்கு எதிராக பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!

Fernandez
Last updated: ஜூலை 19, 2026 7:03 காலை
Fernandez
Share
பிரேமலதா விஜயகாந்த் மின் கட்டண உயர்வு மற்றும் மின்வெட்டு குறித்து அறிக்கை வெளியிடுகிறார்
மின் கட்டண உயர்வு மற்றும் மின்வெட்டுக்கு எதிராக பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்
SHARE

தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக ஏற்படும் மின்வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள், விவசாயிகள், சிறு மற்றும் குறு தொழில்முனைவோர், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இந்த நிலை மக்களின் அன்றாட வாழ்க்கை, விவசாய உற்பத்தி, தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகளை பெரிதும் பாதிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் பலரும் முந்தைய மாதங்களை விட பல மடங்கு அதிகமாக மின் கட்டண ரசீது வந்துள்ளதாக பகிர்ந்து வருகின்றனர். இதனால், மின் கட்டணம் மறைமுகமாக உயர்த்தப்பட்டுள்ளதா என்ற கேள்விகள் பொதுமக்களிடையே எழுந்துள்ளன.

இதுகுறித்து பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வு குறித்து அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். மின்சாரத் துறை அமைச்சரும், தமிழக முதல்வரும் இந்தப் பிரச்சனைக்கு மிக முக்கியத்துவம் அளித்து, உடனடியாக தீர்வு காண வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், 'தமிழகம் முழுவதும் ஏற்பட்டு வரும் மின்வெட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் சுமையைக் குறைக்கும் வகையில், மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். விவசாயத்துக்கான தடையற்ற மற்றும் தேவைப்படும் இடங்களில் இலவச மின்சாரம் வழங்கப்பட வேண்டும்' என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மின் கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளதாகவும், இதனால் சாமானிய மக்களின் வாழ்க்கை மேலும் சிரமத்துக்கு உள்ளாகும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் சுட்டிக்காட்டியுள்ளார். மின் தடையை முற்றிலும் அகற்றி, மின்சார கட்டண உயர்வையும் திரும்பப் பெற வேண்டும் என தேமுதிக சார்பாக வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மின்சார உற்பத்திக்கு தேவையான நடவடிக்கைகளை வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அரசு அறிவிக்க வேண்டும் என்றும், அதன் மூலம் தமிழகத்தை மீண்டும் மின் மிகை மாநிலமாக உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் அரசின் உடனடி நடவடிக்கை அவசியம் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMDKpower cutPower Tariff HikePremalatha VijayakanthTamil Nadu Governmentதமிழக அரசுதேமுதிகபிரேமலதா விஜயகாந்த்மின் கட்டணம்மின்வெட்டு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article நடிகரும் இயக்குநருமான தனுஷ் தேசிய விருது பெற்றதைக் கொண்டாடும் புகைப்படம் தனுஷுக்கு 3வது தேசிய விருது: நெகிழ்ச்சியில் நடிகர்!
Next Article விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் தமிழ்நாட்டின் ஆட்சியமைப்பில் விசிகவின் பங்கு: திருமாவளவன் பேச்சு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மணிப்பூர் மாநில அரசு அலுவலகம்

உலகக்கோப்பை கால்பந்து: மணிப்பூரில் நாளை விடுமுறை அறிவிப்பு

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியையொட்டி, மணிப்பூர் மாநிலத்திலும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

ஜூலை 19, 2026

உண்ணாவிரதப் போராட்டம்: சட்டம் என்ன சொல்கிறது?

உண்ணாவிரதப் போராட்டம் என்பது ஜனநாயகத்தில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட…

ஜூலை 19, 2026

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி கைது

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவியை…

ஜூலை 19, 2026

எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வேண்டுகோள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள்…

ஜூலை 19, 2026

சோனம் வாங்சுக் மருத்துவமனை மாற்றம்: மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்

சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய…

ஜூலை 19, 2026

You Might Also Like

தமிழ்நாடு

வாடமங்கலம் ஏரி: துர்நாற்றம் வீசும் மீன்களால் மக்கள் அவதி!

கிருஷ்ணகிரி மாவட்டம் வாடமங்கலம் ஏரியில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

சாலைகள், குடிநீர் வசதி மேம்பாடு: நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை

முதல்வர் விஜய் இன்று காலை சட்டமன்றத்தில் முதல் உரை ஆற்றிய நிலையில், சாலைகள், குடிநீர் வசதிகளை மேம்படுத்துவது குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

1 Min Read
தமிழ்நாடு

மெஜாரிட்டியை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவி ஏற்கிறார்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல். ஆதரவு அளித்துள்ளதால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை தாண்டி 120 இடங்கள் கிடைத்துள்ளன. இதனைத்…

1 Min Read
மதுரை மாவட்ட 5-வது கூடுதல் நீதிமன்ற கட்டிடம்
தமிழ்நாடு

மதுரை மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கு: விசாரணைக்கு புதிய நீதிமன்றம்

மதுரை மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கு விசாரணை, ஜூலை 29 முதல் மதுரை மாவட்ட 5-வது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவான நீதி…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?