MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!

தமிழ்நாடு

போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!

Admin
Last updated: ஜூன் 28, 2026 6:41 காலை
Admin
Share
SHARE

நாடு முழுவதும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் இலவச போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், குழந்தைகளை பாதிக்கும் போலியோ வைரஸ் நோயைத் தடுக்கும் நோக்கில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் இன்று (ஜூன் 28) தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

இந்த சிறப்பு முகாமை சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் வைத்து தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி, மாநிலம் முழுவதும் நடைபெறும் சிறப்பு முகாமை அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.

அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் உள்ளிட்ட 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இந்த முகாமின் மூலம் 5 வயதிற்குட்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தேசிய தடுப்பூசி அட்டவணையின்படி ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து பெற்றிருந்தாலும், முகாம் நாளில் அனைத்து குழந்தைகளுக்கும் மீண்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும் என மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சுங்கச் சாவடிகள், சோதனைச் சாவடிகள் மற்றும் விமான நிலையங்களில் தற்காலிக மையங்கள் அமைக்கப்பட்டு, பயணத்தில் உள்ள குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். ஜூன் 28ஆம் தேதி அனைத்து மையங்களிலும், ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தற்காலிக மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டில் வசிக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் இம்முகாமின் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். மேலும், தொலைதூர மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எனவே ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கி, முகாமை வெற்றிகரமாக்க பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:சுகாதாரம்சொட்டு மருந்துதமிழ்நாடுபோலியோமுகாம்முதல்வர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கிட்னியைப் பாதுகாக்க எளிய வழிகள்: யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துங்கள்!
Next Article காசா இனப்படுகொலை: மோடி அரசு மீது சோனியா காந்தி குற்றச்சாட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

ராகுல் காந்தியை சந்தித்த முதல்வர் விஜய்!

தமிழக முதல்வர் விஜய், டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக உரையாடினார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க சென்றபோது இந்த…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

மன்னார்குடி அருகே கார் மோதி 4 பள்ளி மாணவர்கள் பலி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் மீது கார் மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த…

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் நாளை மின் தடை: இந்த பகுதிகள் பாதிக்கப்படும்!

சென்னையின் முக்கியப் பகுதிகளில் நாளை (19-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என மின் பகிர்மானக் கழகம்…

2 Min Read
தமிழ்நாடு

சென்னையில் நாளை மின் தடை: இந்த பகுதிகள் பாதிப்பு!

சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். பணிகள் முடிந்தவுடன் மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?