MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: மதபோதகருக்கு மரண தண்டனை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: மதபோதகருக்கு மரண தண்டனை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: மதபோதகருக்கு மரண தண்டனை!

தமிழ்நாடு

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: மதபோதகருக்கு மரண தண்டனை!

Fernandez
Last updated: ஆகஸ்ட் 20, 2026 2:32 மணி
Fernandez
Share
மரண தண்டனை விதிக்கப்பட்ட மதபோதகர் ஆபிரகாம்
மரண தண்டனை விதிக்கப்பட்ட மதபோதகர் ஆபிரகாம்
SHARE

திருநெல்வேலி மாவட்டத்தில், பிரார்த்தனைக்கு வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கிறிஸ்தவ மதபோதகர் ஆபிரகாமுக்கு மரண தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேவர்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 2022-ஆம் ஆண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தேவாலயம் ஒன்றில் பிரார்த்தனைக்காக வரும் சிறுமிகளிடம் மதபோதகர் ஆபிரகாம் (வயது 47) பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து ஆபிரகாம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், தேவாலயத்திற்கு வந்த நான்கு சிறுமிகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், ஆபிரகாம் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், மதபோதகர் ஆபிரகாமுக்கு மரண தண்டனை விதித்து ஆகஸ்ட் 20 அன்று உத்தரவிட்டார். மேலும், பாலியல் தொல்லைக்கு ஆளான நான்கு சிறுமிகளுக்கு தலா ரூ. 10 லட்சம் வீதம், மொத்தம் ரூ. 40 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தீர்ப்பு விவரங்களைக் கேட்டதும் ஆபிரகாம் நீதிமன்ற அறையிலேயே மயங்கி விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மதபோதகருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Death SentencePastorPOCSOSexual AbuseTirunelveliநெல்லைபாலியல் தொல்லைபோக்சோமதபோதகர்மரண தண்டனை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த கே.ஏ.கே.முகில் அதிமுகவில் இருந்து விலகிய கே.ஏ.கே.முகில்: இபிஎஸ்-க்கு ஷாக்
Next Article இஸ்ரோ நிறுவனத்தின் லோகோ மற்றும் வேலைவாய்ப்பு அறிவிப்பு தொடர்பான படம் இஸ்ரோவில் 242 வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும் புகைப்படம்
தமிழ்நாடு

பணம் ஒரு விஷயமே இல்லை – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முதலமைச்சர் விஜய்க்கு பணம் ஒரு விஷயமே இல்லை என்றும், தேர்தலில் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை…

2 Min Read
இரண்டு தலைகளுடன் காணப்படும் அரிதான ஆமைக் குஞ்சு
தமிழ்நாடு

5.2 கிராம் எடையில் இரண்டு தலை ஆமை: உலகை வியப்பில் ஆழ்த்திய அதிசயம்!

அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் 5.2 கிராம் எடையில் இரண்டு தலைகளுடன் பிறந்த அரிதான 'டைமண்ட் பேக் டெர்ராபின்' ஆமைக் குஞ்சு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கேப் வனவிலங்கு மையத்தினர் கண்காணித்து வருகின்றனர்.

2 Min Read
தமிழ்நாடு

பெங்களூரு கல்குவாரியில் கோர விபத்து: 8 தொழிலாளர்கள் பலி

பெங்களூரு மதனபட்டணத்தில் உள்ள கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்த விபத்தில் பீகாரைச் சேர்ந்த 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஹிட்டாச்சி இயந்திரம் இயக்கப்பட்டபோது இந்த துயரம் நிகழ்ந்துள்ளது.

1 Min Read
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி வைக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறை பதாகை
தமிழ்நாடு

இடுக்கு பிள்ளையார் கோயிலில் புதிய கட்டுப்பாடு: அனுமதி மறுக்கப்பட்டவர்கள் யார்?

திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் பாதுகாப்பு காரணங்களுக்காக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உடல் பருமன், சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?