தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி

விநாயகர் சதுர்த்திக்கு களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளையே வாங்க வேண்டும் என்றும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளை தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசுகையில், "விஞ்ஞான அடிப்படையிலும், மூடநம்பிக்கைகளை தவிர்த்தும் செயல்பட வேண்டும். நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பல குடும்பத்தினர் தங்க நகை புதிதாக வாங்குவதை தவிர்த்து, தங்களிடம் உள்ள பழைய தங்க நகைகளை உருக்கி புதிய நகை செய்து கொள்வதாக தெரிவித்தனர். இதனால் தங்கத்தின் இறக்குமதி குறைந்துள்ளது. மக்கள் எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர்."

மேலும், "ஜூன் மாதம் சி-295 ரக விமானம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. நமது நாட்டிலேயே சி-295 ரக விமானங்கள் தயாரிக்கப்படவுள்ளது. 40 எண்ணிக்கையில் விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3 போர்கப்பல்கள் கடற்படையில் இணைந்துள்ளன" என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஹர்கிலா எனப்படும் அரிய பறவை இயற்கையை தூய்மையாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு காலத்தில் மூடநம்பிக்கையால் புறக்கணிக்கப்பட்ட இந்த பறவையை, விஞ்ஞானி பூர்ணிமாதேவி பர்மன் தனது விழிப்புணர்வு மூலம் மக்களின் மனதில் பாதுகாக்க வேண்டிய உயிரினமாக மாற்றினார். இன்று ஆயிரக்கணக்கான பெண்கள் ஹர்கிலா படையாக இணைந்து இந்த அரிய பறவையை பாதுகாத்து வருகிறார்கள். சரியான தகவல் சமூக மாற்றத்தை உருவாக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

பல சகாப்தங்களாக மரங்களின் வேர்களை வழிநடத்தி உருவாக்கப்படும் இந்தப் பாலங்கள், காலப்போக்கில் மேலும் வலிமை பெறுகின்றன. இயற்கையுடன் இணைந்து வாழும் வாழ்க்கை முறைக்கும், பொறுமைக்கும், படைப்பாற்றலுக்கும் இவை சிறந்த எடுத்துக்காட்டு. இந்த தனித்துவமான வேர்ப்பாலங்களை யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பட்டியலில் சேர்க்க இந்தியா விண்ணப்பித்துள்ளது" என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version