MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: குதிரை பேர அரசியல்: தவெக மீது பழனிசாமி கடும் தாக்கு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: குதிரை பேர அரசியல்: தவெக மீது பழனிசாமி கடும் தாக்கு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - குதிரை பேர அரசியல்: தவெக மீது பழனிசாமி கடும் தாக்கு

அரசியல்

குதிரை பேர அரசியல்: தவெக மீது பழனிசாமி கடும் தாக்கு

Admin
Last updated: மே 25, 2026 7:27 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தில் கீழ்த்தரமான அரசியலும், குதிரை பேர கலாச்சாரமும் புகுத்தப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாவது: 'சுயம்பிரகாச தூயசக்தி' என தன்னை அறிவித்துக்கொண்ட திரையுலகப் பிரபலம், மக்களின் ஆதரவு தனக்கு இல்லை என்பதை உணர்ந்தும், தான் அமைத்த பொய்க்கால் ஆட்சியைக் காப்பாற்ற தகிடுதத்த அரசியலில் ஈடுபட்டு வருவது வெட்கக்கேடானது.

தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத வகையில், ஒரு மோசமான குதிரை பேர அரசியலை நடத்தி, மைனாரிட்டி ஆட்சியைக் காப்பாற்ற முனைவது கண்டு மக்கள் எள்ளி நகையாடுகின்றனர். 234 தொகுதிகளில் 126 தொகுதிகளில் மக்கள் தனக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள் என்பதை உணராமல், எந்தக் கட்சியை 'தீய சக்தி' என்று வருணித்தாரோ அந்தக் கட்சியின் தயவில் வெற்றி பெற்ற சில கட்சிகளை தேடிச் சென்று ஆதரவு கேட்டதும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை 'புஷ்பா' பட பாணியில் ஆதரவு பெற்றதும் நேர்மையான அரசியல்வாதியின் செயலா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அதிமுக மீது விசுவாசம் கொண்ட தொண்டர்களின் உழைப்பால் வெற்றி பெற்ற 3 சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து, சபாநாயகர் அறையில் ராஜினாமா கடிதம் வாங்கி, அடுத்த 10 நிமிடத்தில் அமைச்சர் ஒருவரின் அறையில் கட்சி உறுப்பினர் அட்டை வழங்குவது, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி நாடகத்தையும், குதிரை பேரத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது. தற்போதைய தவெக அரசின் இதுபோன்ற தகிடுதத்த வேலைகளை சந்திப்பது தமிழக அரசியலில் புதிதான அணுகுமுறையாகும்.

எத்தனையோ துரோகங்களையும், முதுகில் குத்திய நிகழ்வுகளையும் தாங்கி மக்கள் பணியாற்றி வருகிறது அதிமுக. இந்த அரசுக்கு ஆதரவு கொடுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும், ராஜினாமா செய்தவர்களாக இருந்தாலும், திரைப் பிரபலத்தின் சின்னத்திற்கு எதிராக மக்கள் வாக்களித்துதான் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. இதுபோன்ற துரோகச் செயல்களால் அதிமுகவை அசைத்துப் பார்க்கலாம்; வீழ்த்திவிடலாம் என்று நினைத்தால் அது பகல் கனவாகவே முடியும். 'ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை' என்பதுபோல, அடுத்தவர்களின் முதுகில் ஏறி பயணம் செய்வதில்தான் வாழ்வு இருக்கிறது என்று செயல்படும் புதிய கரகாட்ட கோஷ்டிக்கு தமிழக மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று பழனிசாமி தெரிவித்துள்ளார். முன்னதாக, அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ADMKEdappadi PalanisamyTamil Nadu PoliticsTVEKஅரசியல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னையில் நாளை மின்தடை: மின்வாரிய பராமரிப்பு பணி
Next Article புதிய படங்களுக்கு தினசரி 5 காட்சிகள்: முதல்வர் விஜய் உத்தரவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

ரஜினிகாந்தை சந்தித்த நயினார் நாகேந்திரன்: அரசியல் களத்தில் பரபரப்பு

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும்…

1 Min Read
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

காங்கிரஸ் துரோகம் உலகிற்கே தெரியும்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்

காங்கிரஸ் கட்சியின் துரோகச் செயல்கள் உலகிற்கே தெரியும் என்றும், விவசாயிகளுக்கு துரோகம் செய்ய காங்கிரஸ் கட்சி துடிப்பதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

1 Min Read
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிமுக மற்றும் பாமக கூட்டணி குறித்து பேசுகிறார்
தமிழ்நாடு

பாமக ஆதரவு இல்லாமல் அதிமுக 47 தொகுதிகளில் வென்றிருக்காது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பாமக ஆதரவின்றி அதிமுக 47 தொகுதிகளில் வென்றிருக்க முடியாது என்றும், மக்கள் அதிமுகவை புறக்கணித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

1 Min Read
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு

கைது குறித்து உதயநிதி ஸ்டாலின்: அரசு இலவச ரோடு ஷோ நடத்தியதா?

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது கைது குறித்து பேசியபோது, அரசு செலவில் இலவச ரோடு ஷோ நடத்தப்பட்டதால் கைது செய்யப்பட்டதாக நினைத்ததாக நகைச்சுவையாகக் கூறினார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?