MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பழனி கோயில் நில மோசடி: மேலிடப் புள்ளி யார்? – கிருஷ்ணசாமி கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பழனி கோயில் நில மோசடி: மேலிடப் புள்ளி யார்? – கிருஷ்ணசாமி கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பழனி கோயில் நில மோசடி: மேலிடப் புள்ளி யார்? – கிருஷ்ணசாமி கேள்வி

தமிழ்நாடு

பழனி கோயில் நில மோசடி: மேலிடப் புள்ளி யார்? – கிருஷ்ணசாமி கேள்வி

Fernandez
Last updated: ஜூலை 15, 2026 9:01 மணி
Fernandez
Share
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பழனி கோயில் நில மோசடி குறித்துப் பேசுகிறார்
பழனி கோயில் நில மோசடி குறித்துப் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி
SHARE

உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான, பழனியின் மையப்பகுதியில் கார் நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வந்த 1.40 ஏக்கர் நிலம், ₹100 கோடிக்கும் மேல் மதிப்புடையது.

இந்த நிலத்தை சட்ட விதிமுறைகளுக்கு மாறாக மூன்று தனி நபர்களுக்குப் பத்திரப்பதிவு செய்தது எப்படி என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:

'பட்டப்பகலில் முருகன் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தையே மூன்று தனிநபர்கள் பத்திரப்பதிவு செய்து கொள்ளையடிப்பது எப்படிச் சாத்தியமாயிற்று? இரவுகளில் கன்னக்கோல் போடுவது, வீடு புகுந்து திருடுவது, பிக்பாக்கெட் அடிப்பது போன்ற குற்றச் செயல்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இது முற்றிலும் வேறுபட்ட, அதிர்ச்சியளிக்கும் ஒரு மோசடி' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பழனி முருகன் கோவிலுக்கு அருகாமையில், பழனி நகராட்சியின் 3-ஆவது வார்டு, 25-ஆவது பிளாக்கில், சர்வே எண்கள் 998 மற்றும் 999-இல் உள்ள 1.40 ஏக்கர் பரப்பளவுள்ள நிலம், கடந்த ஜூலை மாதம் 6-ஆம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகதாஸ், பழனி அருகே உள்ள பாப்பாங்குளம் சேர்ந்த வெள்ளத்துரை மற்றும் பழனி அருகே உள்ள டி.கே.என் புதூரைச் சேர்ந்த சேதுபதி ஆகிய மூவர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடிக்குச் சார்பதிவாளர் மணிகண்டன் உடந்தையாகச் செயல்பட்டுள்ளார் என்பதும் தெரியவருகிறது. இந்த நிலம் ஆட்சேபனைக்குரியது என அறநிலையத்துறை ஆணை இருந்தும், யாருடைய தூண்டுதலின் பேரில் அல்லது ஆதரவின் பேரில் இந்த நில மோசடி நடந்துள்ளது என்பது தமிழக மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.

இந்தக் குற்றச்சாட்டு வெளியானவுடன், அடிமட்ட அளவில் சார்பதிவாளர் உள்ளிட்ட ஒருசிலர் பெயரைக் குறிப்பிட்டு வெறுமனே ஒரு முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் உண்மை வெளிவராது என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு மாதத்தில், சட்டமன்றத்திற்கு உள்ளும், பொதுவெளியிலும் முதலமைச்சர் விஜய் அவர்கள் தூய ஆட்சியைப் பற்றி வலியுறுத்தி வருகிறார். ஆனால், பழனி முருகன் கோவில் சொந்தமான நிலம் சட்டவிரோதமாக சில தனிநபர்களின் பெயரில் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலிடப் புள்ளிகளின் ஆதரவு இல்லாமல் இந்த குற்றம் நடைபெற வாய்ப்பில்லை.

முதலமைச்சர் விஜய் அவர்கள் ஆட்சி வந்த பிறகு எழுப்பப்பட்டிருக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு இதுவாகும். ஒரு அரசை வீழ்த்த 100 குற்றச்சாட்டுகள் தேவையில்லை; வலுவான ஒரு குற்றச்சாட்டே போதுமானது. எனவே, விஜய் அரசு பழனி முருகன் கோவில் மோசடி நிலப்பத்திரபதிவு உண்மைத்தன்மையை நடுநிலையான, நேர்மையான, சுதந்திரமான விசாரணை, குறிப்பாக உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதியின் (Sitting Judge) கீழ் நடத்தப்பட்டு, அந்த மேலிடப்புள்ளி யார் என்பது ஆன்மீகப் பெரியோர்களுக்கும் தமிழக மக்களுக்கும் வெளிப்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:KrishnasamyLand ScamNew Tamilagam PartyPalani TempleTamil Nadu GovernmentVIJAYகிருஷ்ணசாமிதமிழக அரசுநில மோசடிபழனி கோயில்புதிய தமிழகம் கட்சிவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கொச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கத்துடன் கைது செய்யப்பட்ட தமிழக தம்பதி கேரளாவில் ரூ.2 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்: தமிழக தம்பதி கைது
Next Article நடிகர் விஜய் மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் தளபதி விஜய்யால் ‘இம்மோர்டல்’ ரிலீஸ் தள்ளிவைப்பு: செப். 4க்கு மாற்றம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்

இந்தியா, உலகத்துடன் நவீன ஆராய்ச்சிகளைப் பகிர வேண்டும்: பிரதமர் மோடி

இந்தியாவின் பண்டைய அறிவு மற்றும் நவீன ஆராய்ச்சிகளின் பலன்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள…

நவம்பர் 13, 2026

மோடியுடன் விவாதிக்க தயார் – ராகுல் காந்தி சவால்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர்…

நவம்பர் 13, 2026

வெளிநாட்டில் விவாகரத்து பெற முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டவர்கள் வெளிநாடுகளில் விவாகரத்து பெற…

நவம்பர் 13, 2026

பிரதமர் மோடியை பாராட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா

இந்திய வெளிநாடு வாழ் காங்கிரஸ் தலைவர் சாம்…

நவம்பர் 13, 2026

சிக்கிமில் 4.9 ரிக்டர் நிலநடுக்கம்: மக்கள் பீதி

சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் உட்பட கிழக்கு…

நவம்பர் 12, 2026

You Might Also Like

தமிழ்நாடு

புனே சிறுமி கொலை: 55 நாட்களில் தூக்கு தண்டனை – விரைந்த நீதி!

புனேவில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் நடந்து 55 நாட்களுக்குள் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…

1 Min Read
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை நாள் வாழ்த்து தெரிவிக்கும் படம்
தமிழ்நாடு

சென்னை நாள் வாழ்த்துக்கள்: அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை தினத்தை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னையின் வளங்களையும், சிறப்புகளையும் பாதுகாக்க உறுதியேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

1 Min Read
பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்
தமிழ்நாடு

தமிழ்நாட்டை ஆளும் பேரறிஞர் அண்ணா – உதயநிதி ஸ்டாலின் புகழாரம்

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரை நினைவு கூர்ந்து புகழாரம் சூட்டியுள்ளார். 'கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு' என்ற முழக்கத்துடன்…

2 Min Read
சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழா நிகழ்வு
தமிழ்நாடு

சுதந்திர தின விழா: முதல்முறையாக கொடியேற்றும் விஜய், வைகோவுக்கு விருது?

சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் ஜெ. முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றவுள்ளார். தகைசால் தமிழர் விருதுக்கு பண்ருட்டி ராமச்சந்திரன், வைகோ…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?