MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இந்தியாவை முந்துவதே இலக்கு – பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெஸன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இந்தியாவை முந்துவதே இலக்கு – பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெஸன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - இந்தியாவை முந்துவதே இலக்கு – பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெஸன்

விளையாட்டு

இந்தியாவை முந்துவதே இலக்கு – பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெஸன்

Sri Prem Kumar R
Last updated: செப்டம்பர் 23, 2026 6:53 மணி
Sri Prem Kumar R
Share
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸன்
SHARE

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியை ஒரு சிறந்த முன்னுதாரணமாகக் கருதுவதாகவும், அவர்களை முந்திச் செல்வதே தங்களது முக்கிய இலக்கு என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸன் தெரிவித்துள்ளார். மேலும், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள தங்களால் முடிந்த சிறந்த முறையில் தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு புறப்படுவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மைக் ஹெஸன், சர்வதேச டி20 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய கடந்த ஆறு போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். குறிப்பாக, 2025 ஆசிய கோப்பை தொடரில் இரு அணிகளும் மூன்று முறை மோதியதில், அனைத்திலும் இந்தியாவே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலவரப்படி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி தான் மிகச்சிறந்த முன்னுதாரணமாக உள்ளது. அவர்களை எட்டிப்பிடிப்பதே எங்கள் முன்னால் உள்ள சவால் என்று மைக் ஹெஸன் கூறினார். மேலும், ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் நாங்கள் அவர்களுக்கு நெருக்கடி கொடுத்தது போல, மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது இந்திய அணிக்கு சவால் அளிக்க எங்களை நாங்கள் சிறந்த முறையில் தயார்படுத்தி வருகிறோம்.

எனினும், இறுதிப் போட்டிக்கு இன்னும் பல போட்டிகளைக் கடக்க வேண்டியுள்ளதால், நாங்கள் தற்போதைக்கு அடுத்தடுத்த ஆட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். இப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் மட்டுமே நேருக்கு நேர் மோத முடியும் என்ற சூழல் உள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்தியாவைப் போலல்லாமல், முன்னணி வீரர்களுக்கு ஓய்வளித்துவிட்டு சாஹிப்ஸாதா ஃபர்ஹான் தலைமையிலான இரண்டாவது தர அணியை பாகிஸ்தான் அனுப்பியுள்ளது. இருப்பினும், இந்த அணி வலிமையானது என்று மைக் ஹெஸன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது மிகவும் சமபலமும் ஆக்ரோஷமும் கொண்ட ஒரு அணியாகும்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் புதிய மற்றும் திறமையான இளம் வீரர்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்த ஒரு சிறந்த தளமாக அமையும். குறிப்பாக, சாஹிப்ஸாதா ஃபர்ஹானுக்கு கேப்டனாக அனுபவத்தைப் பெற இது ஒரு நல்ல வாய்ப்பாகும், என்று அவர் கூறினார். கடந்த ஆண்டு தான் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு வரை, அந்த அணி குரூப் சுற்றுகளைக் கடப்பதற்கே கடுமையாகப் போராடி வந்தது என்று ஹெஸன் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் அணி மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருப்பது இயல்பானது தான் என்றாலும், தொடக்கத்தில் இருந்து உடனடியாக கோப்பைகளை வெல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றும் அவர் தங்களது அணியின் தற்போதைய நிலையை விளக்கினார். இந்தியா எங்களை அடித்து நொறுக்கிவிடும் என நினைத்தோம்.. இப்படி ஒரு போட்டியை எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்தியாவை ஒரு பெஞ்ச் மார்க்காகக் கொண்டு, அவர்களை முந்துவதே தங்களது இலக்கு என பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெஸன் கூறியுள்ளது கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பாகிஸ்தான் அணி எவ்வாறு செயல்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Indian CricketMike HessonPakistan Cricketஆசிய விளையாட்டுப் போட்டிகள்இந்திய கிரிக்கெட்ஒருநாள் கிரிக்கெட்டி20 கிரிக்கெட்பாகிஸ்தான் கிரிக்கெட்மைக் ஹெஸன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் – கனிமொழி
Next Article தமிழக பாஜக பொறுப்பாளராக ராம் மாதவ் மற்றும் ஆந்திரா இணை பொறுப்பாளராக வானதி சீனிவாசன் நியமனம் குறித்த அறிவிப்பு ஆந்திரா இணை பொறுப்பாளர் வானதி சீனிவாசன், தமிழக பொறுப்பாளர் ராம் மாதவ் நியமனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது மனைவி அன்னா லெஸ்னவாவிடமிருந்து பிரிந்து…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

பஸ்தரில் பாதுகாப்புப் படையினருடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதிக்கு வருகை தந்துள்ள பிரதமர்…

நவம்பர் 8, 2026

You Might Also Like

பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பற்றி பேசுகிறார்
விளையாட்டு

சச்சின் போல ஜாம்பவான் ஆக வைபவ் சூர்யவன்ஷி: பிசிசிஐ செயலாளர் பேட்டி

15 வயது இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, சச்சின் டெண்டுல்கர் போல பல ஆண்டுகள் இந்திய அணிக்கு சேவை செய்ய வேண்டும் என பிசிசிஐ செயலாளர்…

2 Min Read
விளையாட்டு

நைட் கிளப் சர்ச்சை: பென் ஸ்டோக்ஸ் மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்புகிறார்

இரவு விடுதி விவகாரத்தில் சிக்கியதால் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டிக்கான டர்ஹாம் அணியில்…

2 Min Read
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பேட்டிங் செய்யும் காட்சி
விளையாட்டு

இந்தியா vs இலங்கை: ராகுல், படிக்கல் அதிரடி – ரன் குவிப்பில் இந்திய அணி

இந்தியா - இலங்கை டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் கேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல் அரை சதம் அடித்து அசத்தினர். இந்திய அணி ரன் குவிப்பில்…

2 Min Read
விளையாட்டு

IND vs ENG: துணை கேப்டன் திலக் வர்மா மீண்டும் சொதப்பல்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் திலக் வர்மா, விசித்திரமான ஷாட் ஆட முயன்று 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இது இந்திய…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?