MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மகளிர் டி20: அதிவேக அரைசதம் அடித்து உலக சாதனை படைத்த பாத்திமா சனா!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > மகளிர் டி20: அதிவேக அரைசதம் அடித்து உலக சாதனை படைத்த பாத்திமா சனா!
விளையாட்டு

மகளிர் டி20: அதிவேக அரைசதம் அடித்து உலக சாதனை படைத்த பாத்திமா சனா!

Admin
Last updated: May 16, 2026 11:29 am
Admin
Share
SHARE

கராச்சியில் நடைபெற்ற பாகிஸ்தான் – ஜிம்பாப்வே மகளிர் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில், பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா அதிரடியாக விளையாடி உலக சாதனை படைத்துள்ளார். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 152 ரன்கள் எடுத்திருந்தபோது களமிறங்கிய பாத்திமா சனா, எதிரணி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து தனது இன்னிங்ஸை தொடங்கினார்.

நொம்வெலோ சிபாண்டா வீசிய 19-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் உட்பட 24 ரன்களை விளாசிய பாத்திமா சனா, வெறும் 14 பந்துகளில் 48 ரன்களை எட்டினார். தொடர்ந்து, கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் 2 ரன்கள் எடுத்ததன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிக வேகமான அரைசதத்தை வெறும் 15 பந்துகளில் பதிவு செய்தார். இதற்கு முன் சோபி டிவைன், போப் லிட்ச்பீல்ட் மற்றும் இந்தியாவின் ரிச்சா கோஷ் ஆகியோர் 18 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது. பாத்திமா சனா அதனை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

மேலும், பாத்திமா சனா 19 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில் சாய்ரா ஜபீன் 50 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது. இது சர்வதேச டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

224 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, பாகிஸ்தானின் சாடியா இக்பால் மற்றும் நஷ்ரா சந்துவின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 90 ரன்களுக்கு சுருண்டது. பந்துவீச்சிலும் தனது திறமையை வெளிப்படுத்திய கேப்டன் பாத்திமா சனா 1 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:CricketPakistanWomen's Cricketகிரிக்கெட்பாகிஸ்தான்மகளிர் கிரிக்கெட்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரசிகருடன் மோதல்: அர்ஷ்தீப் சிங்கிற்கு சிக்கல்?
Next Article இந்தியாவிற்கு 3 கோடி பேரல் கச்சா எண்ணெய்: ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஒப்பந்தம்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வேலையில்லா இளைஞர்கள் குறித்து தலைமை நீதிபதி விளக்கம்: என்ன சொன்னார்?

வேலையில்லா இளைஞர்கள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் தவறாக…

May 17, 2026

மத்திய அமைச்சர் மகன் போக்சோ வழக்கில் கைது: பரபரப்பு!

தெலுங்கானா மாநில மத்திய இணை அமைச்சர் பண்டி…

May 17, 2026

நீட் முறைகேடு: மத்திய அமைச்சரை நீக்க மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய…

May 17, 2026

பேராசிரியர் கைது: மாணவியிடம் மிரட்டல் விடுத்த வினாத்தாள் விவகாரம்!

லக்னோ பல்கலைக்கழக பேராசிரியர், மாணவியிடம் தேர்வு வினாத்தாள்…

May 17, 2026

குஜராத்தில் கொடூரம்: வாடகை பாக்கிக்கு மனைவியையும் மகளையும் பலி கொடுத்த கணவன்!

குஜராத்தில் வாடகை பாக்கிக்கு ஈடாக, தனது மனைவியையும்…

May 17, 2026

You Might Also Like

விளையாட்டு

ஐபிஎல்: மெதுவான ஓவர் வீச்சு விகிதம் – அபராதம் பெறும் கேப்டன்கள்

ஐபிஎல் 2026 தொடரில் மெதுவான ஓவர் வீச்சு விகிதத்திற்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் அக்சர் படேலுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, இவர் இந்த பட்டியலில்…

1 Min Read
விளையாட்டு

ஐபிஎல் 2026: பிரப்சிம்ரன் சிங் அசத்தல்! பஞ்சாப் கிங்ஸ் வீரர் புதிய சாதனை!

ஐபிஎல் 2026ல் பஞ்சாப் கிங்ஸ் வீரர் பிரப்சிம்ரன் சிங் 400 ரன்கள் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 32 பந்துகளில் 57…

1 Min Read
விளையாட்டு

ஐபிஎல் 2026: தமிழக வீரர் சாய் சுதர்சன் புதிய சாதனை.. கிறிஸ் கெயிலுக்கு அடுத்தபடியாக அசத்தல்

குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்சன், ஐபிஎல் வரலாற்றில் 140+ ஸ்ட்ரைக் ரேட்டுடன் தொடர்ந்து மூன்று சீசன்களில் 500 ரன்களுக்கு மேல் குவித்து கிறிஸ் கெயிலுக்கு அடுத்தபடியாக…

2 Min Read
விளையாட்டு

ஐபிஎல் 2026: ஆடாத நட்சத்திரங்கள்! காயம், தேர்வு சிக்கல்கள்!

ஐபிஎல் 2026 தொடரில் எம்.எஸ். தோனி, மதீஷ பத்திரன போன்ற நட்சத்திரங்கள் காயத்தால் விலகல். ரச்சின் ரவீந்திரா, பிரித்வி ஷாவுக்கும் அணியில் இடம் இல்லை.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?