MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: புதிய பாடத்திட்டம்: 9 புத்தகங்களை வெளியிட்ட அமைச்சர் ராஜ் மோகன்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: புதிய பாடத்திட்டம்: 9 புத்தகங்களை வெளியிட்ட அமைச்சர் ராஜ் மோகன்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - புதிய பாடத்திட்டம்: 9 புத்தகங்களை வெளியிட்ட அமைச்சர் ராஜ் மோகன்!

தமிழ்நாடு

புதிய பாடத்திட்டம்: 9 புத்தகங்களை வெளியிட்ட அமைச்சர் ராஜ் மோகன்!

Admin
Last updated: மே 18, 2026 3:30 மணி
Admin
Share
SHARE

சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தலைமையில், இன்று (18.05.2026) நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்பது பாடப் புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இந்த பாடநூல்கள், மாணவர்கள் எளிதாகப் புரிந்து கற்கவும், அவர்களின் தனித்திறன்களை வளர்க்கவும், எதிர்பார்க்கப்படும் கற்றல் விளைவுகளை அடையவும் வகை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

குழந்தை மையக் கற்றல் அணுகுமுறையை ஊக்குவிக்கும் வகையில், பாடநூல்கள் மாணவர்களால் மிகவும் விரும்பப்படும் கதைகள், பாடல்கள் மற்றும் கற்றல் செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளன. இவை மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதோடு, அவர்களின் உடல் இயக்கத் திறன்கள், சமூக மனவெழுச்சித் திறன்கள், விழுமியங்கள் மற்றும் வாழ்க்கை திறன்களையும் வளர்க்கும் வகையில் வண்ணமயமான வடிவமைப்புகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளன.

மேலும், 2026-27ஆம் கல்வி ஆண்டு முதல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 1, 2026 அன்று திறக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். பள்ளி திறக்கும் நாளன்றே, 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தேவையான பாடநூல்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தால் அச்சிடப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். புதிய பாடப் புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்படுவதையொட்டி, 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய பாடநூல் மற்றும் கற்பித்தல் நுட்பங்கள் குறித்த பயிற்சி ஜூன் 1 முதல் ஜூன் 3, 2026 வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அனைத்துப் பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் அமைச்சர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். விலையில்லா நலத்திட்டங்கள் (பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடை, புத்தக பைகள்) மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி திறக்கும் நாளன்றே கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், பள்ளி வளாகம், வகுப்பறைகள், ஆய்வகங்கள், குடிநீர் வசதி, கழிப்பறைகள் ஆகியவை தூய்மையாகவும், மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஏற்ற வகையிலும் பராமரிக்கப்பட வேண்டும். EMIS வழியாக மாற்றுச் சான்றிதழ்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும், மாணவ, மாணவியர் சேர்க்கை மற்றும் பள்ளி வளாகத்தில் பெண்குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:New SyllabusSchool ReopeningTamil Nadu educationஅமைச்சர் ராஜ்மோகன்பாடப்புத்தகங்கள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தோனி 2027ல் ஓய்வு? அஸ்வின் சொன்ன முக்கிய தகவல்!
Next Article அதிமுக பொதுக்குழு: எடப்பாடிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் திரட்டல்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன்

அமெரிக்காவிலிருந்து 3000 இந்திய சிலைகள் மீட்பு: உச்ச நீதிமன்றத்தில் மனு

அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகளை மீட்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்…

ஆகஸ்ட் 3, 2026

கேரளாவில் கனமழை: 8 பேர் உயிரிழப்பு, 8 பேர் மாயம்

கேரளாவில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு…

ஆகஸ்ட் 3, 2026

போதைக்கு எதிராக பிரதமர் மோடி எச்சரிக்கை – விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்

போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக நாடு தழுவிய விழிப்புணர்வு…

ஆகஸ்ட் 3, 2026

மும்பையில் இறந்தவர்கள் பெயரில் ஆதார், பான் மோசடி: ரூ.2.29 கோடி நிலம் பறிப்பு

மும்பையில், இறந்தவர்களின் பெயரில் ஆதார், பான் கார்டுகளைப்…

ஆகஸ்ட் 3, 2026

கேரளாவில் ரூ.11 கோடி தங்கம் கடத்தல்: 9 பேர் கைது

கேரளாவில் கடந்த ஒரு வாரத்தில் ரூ.11 கோடி…

ஆகஸ்ட் 3, 2026

You Might Also Like

வரி பாக்கியை செலுத்தக் கோரி பொதுமக்களின் காலில் விழும் ஊராட்சி செயலாளர்
தமிழ்நாடு

சேலம்: வரி கட்ட மக்கள் காலில் விழுந்த ஊராட்சி செயலாளர்!

சேலம் மாவட்டம் சாணாரப்பட்டி ஊராட்சியில், வரி பாக்கி வைத்திருந்த பொதுமக்களிடம் ஊராட்சி செயலாளர் மாதவன் காலில் விழுந்து வேண்டுகோள் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராம வளர்ச்சிக்காக…

2 Min Read
தமிழ்நாடு

நீட் தேர்வு ரத்து: ஜெயலலிதா இருந்திருந்தால் தடுத்திருப்பார் – சசிகலா

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மத்திய…

2 Min Read
நாமக்கல் முட்டை பண்ணை
தமிழ்நாடு

முட்டை விலை புதிய உச்சம்: மக்களுக்கு அதிர்ச்சி!

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று 650 காசுகளாக இருந்த ஒரு முட்டையின் விலை, இன்று 5 காசுகள் உயர்த்தப்பட்டு 655…

2 Min Read
தமிழ்நாடு

கோவை சிறுமி கொலை: 2 பேருக்கு நீதிமன்ற காவல் – நடந்தது என்ன?

கோவை சூலூரில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கார்த்திக், மோகன் ராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மோகன் ராஜ் 27ஆம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?