MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நீட் தேர்வை முற்றாக நீக்க சீமான் வலியுறுத்தல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நீட் தேர்வை முற்றாக நீக்க சீமான் வலியுறுத்தல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நீட் தேர்வை முற்றாக நீக்க சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாடு

நீட் தேர்வை முற்றாக நீக்க சீமான் வலியுறுத்தல்

Fernandez
Last updated: ஜூலை 22, 2026 10:14 மணி
Fernandez
Share
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
SHARE

நீட் தேர்வு முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் என்பதோடு, இந்தத் தேர்வு முறையையே முற்றாக நீக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் எதிராக டெல்லியில் நடைபெற்ற இளைஞர் கூட்டத்தினுடைய மாபெரும் போராட்டத்தின் நீட்சியாக, வடமாநிலங்களில் போராட்டம் பற்றிப் படர்கையில், தமிழ்நாட்டிலும் மாணவர்களும், இளைஞர்களும் வீதியில் இறங்கிப் போராட முனையும்போது, அதனைக் காவல்துறையினர் மூலம் ஒடுக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது' என்று தெரிவித்துள்ளார்.

'நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறிவிட்டு, அத்தேர்வுக்கு எதிராக இளைய தலைமுறையினரின் தன்னெழுச்சியான போராட்டத்தை அடக்கி ஒடுக்க முயலும் மாநில அரசின் போக்கு சனநாயகத்துரோகமாகும். திரையில், ‘ஜனநாயகன்’ எனப் பெயர் சூட்டிக் கொள்ளும் முதல்வர் விஜய், தரையில் மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல்துறையின் மூலம் அரச வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, சனநாயகத்தைப் பச்சைப்படுகொலை செய்யலாமா? திரைப்படத்தில் மட்டும்தான் ஜனநாயகனா?' என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடநாட்டு இளைஞர்கள் டெல்லி வீதிகளில் கல்வியுரிமைக்காகக் களத்தில் நிற்கையில், தமிழ்நாட்டு இளைஞர்களைத் திரையரங்க வாசலில் நிறுத்தி இருப்பதெல்லாம் ஏற்கவே முடியாத பெருங்கொடுமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருபக்கம், டெல்லியில் நடைபெறும் இளைஞர்களின் போராட்டம் மீதான பாஜக அரசின் அடக்குமுறையைக் கண்டிப்பதாகக் கூறிக் கொண்டு, தமிழ்நாட்டில் நடைபெறும் நீட் தேர்வுக்கு எதிரான இளைஞர்களின் போராட்டங்களை தவெக அரசு ஒடுக்க நினைப்பது இரட்டை வேடமில்லையா என்றும் சீமான் விமர்சித்துள்ளார். பாஜகவைக் கொள்கை எதிரியெனக் கூறிவிட்டு, பாஜகவுக்காக தவெக அரசு செய்யும் மறைமுகச் சேவகமில்லையா இது? இது கேலிக்கூத்து என்றும் அவர் சாடியுள்ளார்.

வடமாநிலங்களில் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்துப் போராடுகையில், தமிழ்நாட்டில் மட்டும்தான் நீட் தேர்வு முறையே ஒரு முறைகேடு என்பதை வலியுறுத்திப் போராட்டங்கள் நடக்கின்றன. ஏற்கனவே, இருந்த முறையைவிட நீட் தேர்வின் மூலம்தான் தரமான மருத்துவர்களை உருவாக்க முடியும் எனக் கூறிக் கொண்டு வரப்பட்ட முறையிலேயே இவ்வளவு முறைகேடுகள், குழப்பங்கள், குளறுபடிகள் என்றால், இந்தத் தேர்வு முறை எதற்கு? இதே நீட் தேர்வு முறையில் கடந்த காலங்களில் முறைகேடு ஏற்பட்டிருக்காது என்பதற்கு என்ன உறுதிப்பாடு இருக்கிறது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆகவே, நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை விசாரிப்பது மட்டுமல்ல; இம்முறைகேடான நீட் தேர்வு முறையையே முற்றாக நீக்குவது என்பதே இந்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பைத் தற்காப்பதற்கான பெருவாய்ப்பாகும். ஒரே மாதிரியான கற்றல் வாய்ப்புகளும், வசதிகளும் இல்லாத நாட்டில் ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு என்பதே அசமத்துவமானது. ஆகவே, சமத்துவத்துக்கு எதிரான நீட் தேர்வு முறையை நாம் தமிழர் கட்சி வலிமையாக எதிர்க்கிறது என சீமான் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வை எதிர்த்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் போராட்டங்களை முன்னெடுக்கிறபோது அவைகள் அடையாளப் போராட்டங்கள் என்றளவில்தான் கருதப்படும். அதேசமயம், மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் வீதிக்கு வந்து போராடுகிறபோது, அது சனநாயகப்புரட்சியாக வெடித்து, ஆளும் வர்க்கத்தை அடிபணியச்செய்து, கோரிக்கை முழக்கத்தை நிறைவேறச் செய்யும். அதனை நோக்கிய இளையோர் கூட்டத்தின் அறப்போராட்டத்தை முழுமையாக ஆதரித்து, வரவேற்கிறேன். தமிழ்நாட்டில் நடைபெறும் இளையோர் கூட்டத்தின் அறப்போராட்டம் வெல்லட்டும்! நீட் எனும் நுழைவுத்தேர்வு முறை முழுமையாக நீக்கப்படட்டும்! அநீதிக்கு எதிராகப் போர்க்குணத்தோடு களத்தில் நின்றுப் போராடும் என்னுடைய தம்பி, தங்கைகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சிகரமான வாழ்த்துகளும், அன்பும்! என சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Naam Tamilar KatchiNEET ExamSeemanTamil Nadu Politicsசீமான்தமிழக அரசியல்நாம் தமிழர் கட்சிநீட் தேர்வு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article உத்தரப் பிரதேசம் கான்பூரில் காவல் நிலையத்தில் புகார் அளித்த தம்பதி தினமும் சாம்பார் வைத்ததால் கணவன்-மனைவி காவல் நிலையம் சென்ற விசித்திர சம்பவம்
Next Article பழனி முருகன் கோவில் நில முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்ட வெள்ளத்துரை பழனி கோவில் நில முறைகேடு: வெள்ளத்துரைக்கு முன்ஜாமீன் நிராகரிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

வினாத்தாள் கசிவு: ராகுல் மீது நட்டா விமர்சனம்

வினாத்தாள் கசிவு விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என்றும், இது குறித்து ஆழமான விவாதம்…

ஜூலை 22, 2026

டெல்லி மெட்ரோ: அனைத்து ரயில் நிலையங்களும் திறப்பு – பயணிகளுக்கு அறிவிப்பு

டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம், பயணிகளின் நலன்…

ஜூலை 22, 2026

தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்: கரப்பான் பூச்சி கட்சி வலியுறுத்தல்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக…

ஜூலை 22, 2026

தினமும் சாம்பார் வைத்ததால் கணவன்-மனைவி காவல் நிலையம் சென்ற விசித்திர சம்பவம்

உத்தரப் பிரதேசத்தில், தினமும் சாம்பார் செய்வதால் கணவன்-மனைவி…

ஜூலை 22, 2026

நீட் தேர்வு விவகாரம்: பேச்சுவார்த்தைக்கு தயார் – ஜே.பி.நட்டா

டெல்லியில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நடைபெற்று…

ஜூலை 22, 2026

You Might Also Like

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியை மல்லிகா
தமிழ்நாடு

பள்ளியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு: தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

பட்டுக்கோட்டை அருகே உள்ள பள்ளியில் த.வெ.க. நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தலைமை ஆசிரியை மல்லிகா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

விஜய் ஆட்சியை டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்தார்

முதல்வர் விஜயை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக கூட்டணியில் கையேந்தி ஆட்சி அமைத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

1 Min Read
தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி சாதனை
தமிழ்நாடு

தமிழக காற்றாலை மின் உற்பத்தி: ஒரே நாளில் புதிய சாதனை

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி வரலாற்றில் புதிய சாதனை. ஒரே நாளில் 12.43 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, இதுவரையிலான உச்சத்தை எட்டியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

கோழிக்கோடு சுங்கச்சாவடியில் பயங்கரம்: கார் பானட்டில் ஊழியர் இழுத்து செல்லப்பட்டார்!

கோழிக்கோடு பந்தீரங்காவு சுங்கச்சாவடியில், கட்டணம் செலுத்தாமல் தப்பிக்க முயன்ற காரை தடுக்க முயன்ற ஊழியர், காரின் பானட்டில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?