நீட் தேர்வு முறைகேடு: புகார் அளிக்க புதிய இணையதளம் அறிவிப்பு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், அதன் மறு தேர்வு ஜூன் 21 அன்று நடைபெறுகிறது. இதற்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வுக்கான கட்டணத்தை தேசிய தேர்வு முகமை (NTA) திருப்பித் தரும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. மேலும், நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து புகாரளிக்க புதிய இணையதளத்தையும் NTA அறிவித்துள்ளது.

http://innovateindia.mygov.in/neet-ug-2026 என்ற இணையதளத்தில் புகார்களைப் பதிவு செய்யலாம். மேலும், http://nta.ac.in மற்றும் http://neet.nta.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் தகவல்களைப் பகிரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக் கட்டணத்தை இணையதளம் மூலம் திரும்பப் பெறும்போது, தேர்வர்களிடம் எந்தக் காரணத்திற்காகவும் OTP கேட்கப்படாது என்றும், செலுத்தப்பட்ட பணம் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு வந்து சேரும் என்றும் NTA முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மோசடியான அழைப்புகள், செய்திகள், இணைப்புகளை தேர்வர்கள் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணத்தைத் திரும்பப் பெற தேர்வர்களுக்கு எந்தக் கட்டணமும் கிடையாது. ஒருவேளை, வங்கிக் கணக்கு எண்ணைத் தவறுதலாகப் பதிவிட்ட தேர்வர்களுக்கு, தேர்வு முடிந்த பின்னர் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version