MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வினாத்தாள் கசிவு: மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து – தேசிய தேர்வு முகமையின் அதிரடி அறிவிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வினாத்தாள் கசிவு: மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து – தேசிய தேர்வு முகமையின் அதிரடி அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - வினாத்தாள் கசிவு: மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து – தேசிய தேர்வு முகமையின் அதிரடி அறிவிப்பு

இந்தியா

வினாத்தாள் கசிவு: மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து – தேசிய தேர்வு முகமையின் அதிரடி அறிவிப்பு

Admin
Last updated: மே 12, 2026 8:00 மணி
Admin
Share
SHARE

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக தேசிய தேர்வு முகமை (NTA) நடத்திய நீட் தேர்வு கடந்த மே மாதம் 3-ஆம் தேதி நடந்தது. இந்தத் தேர்வில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மறுதேர்வுக்கான தேதிகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வுக்குச் சில நாட்களுக்கு முன்பே ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மே 1-ஆம் தேதியே ராஜஸ்தானின் சிகார் பகுதியில் இந்த வினாத்தாள் பரவத் தொடங்கியுள்ளது. இது மாணவர்களிடம் 20,000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

கையால் எழுதப்பட்ட இந்த மாதிரி வினாத்தாள் பிரதியில் மொத்தம் 281 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. மே 3 அன்று நடந்த அசல் நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 135 கேள்விகள், இந்த மாதிரி தாளில் இருந்த கேள்விகளுடன் அப்படியே பொருந்திப் போயின. இதில் 90 உயிரியல் கேள்விகளும், 45 வேதியியல் கேள்விகளும் அப்படியே இடம்பெற்றிருந்தன.

இதன் மூலம், மொத்தமுள்ள 720 மதிப்பெண்களில் 600 மதிப்பெண்களுக்கான கேள்விகள் தேர்வுக்கு முன்னரே கசிந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ராஜஸ்தான் காவல்துறை இந்த மாதிரி வினாத்தாளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறது.

இந்த முறைகேட்டின் பின்னணியில், கேரளாவில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் ராஜஸ்தான் மாநிலம் சூருவைச் சேர்ந்த ஒரு எம்பிபிஎஸ் மாணவருக்குத் தொடர்பு இருப்பதாகக் காவல்துறை சந்தேகிக்கிறது. அவர்தான் மே 1 அன்று சிகாரில் உள்ள தனது நண்பருக்கு இந்தத் தகவலைப் பகிர்ந்திருக்கிறார். அங்கிருந்து விடுதிகள் மற்றும் பயிற்சி மையங்கள் வழியாக இது காட்டுத்தீயாகப் பரவியுள்ளது. மேலும், வாட்ஸ்அப் போன்ற செயலிகள் மூலம் இந்த வினாத்தாள் பலமுறை பகிரப்பட்டுள்ளது. இது மிக அதிக எண்ணிக்கையிலான மாணவர்களைத் தேர்வுக்கு முன்னரே சென்றடைந்திருக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேசிய தேர்வு முகமை, தேர்வு முடிந்த நான்கு நாட்களுக்குப் பிறகுதான் முறைகேடு குறித்த தகவல் தங்களுக்குக் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளது.

விசாரணை அமைப்புகளின் ஆதாரங்களின் அடிப்படையில் வெளிப்படையான முறையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்த நிலையில், தற்போது தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

மேலும், வினாத்தாள் கசிந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட உள்ளது.

ஒருவேளை இந்தத் தேர்வு ரத்து செய்யப்படாமல் இருந்திருந்தால், வினாத்தாள் கசிவு காரணமாக நீட் தேர்வின் தரவரிசைப் பட்டியலிலும், மருத்துவச் சேர்க்கையிலும் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டிருக்கும் என்பதாலேயே தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வேலுமணி தரப்பு வாக்குகள் செல்லுமா? சபாநாயகர் முடிவு செய்வார் – திருமாவளவன் பேட்டி
Next Article ‘இதுதான் சாதாரண மக்களுக்குத் தேவை’ – முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் விஷால் பாராட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பாராளுமன்ற விவாதம் குறித்து பேசுகிறார்

பாராளுமன்ற விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்: கிரண் ரிஜிஜு

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விவாதங்களில்…

ஆகஸ்ட் 12, 2026

அசாம் வெள்ள நிவாரணம்: மேற்கு வங்காளம் ரூ.10 கோடி உதவி அறிவிப்பு

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்திற்கு மேற்கு…

ஆகஸ்ட் 12, 2026

கூகுள் ஜெமினி: 100 கோடி பயனர்களை எட்டிய அசத்தல் சாதனை!

கூகுளின் செயற்கை நுண்ணறிவு செயலியான ஜெமினி, மாதம்…

ஆகஸ்ட் 12, 2026

நீட் சர்ச்சை: எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனைக்கு அமித் ஷா கடிதம்

நீட் தேர்வு சர்ச்சை தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை…

ஆகஸ்ட் 12, 2026

இந்தியாவில் 60% ஆசிய யானைகள்: பிரதமர் மோடி பெருமிதம்

உலக யானைகள் தினத்தில், இந்தியாவில் 22,000க்கும் மேற்பட்ட…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

இந்தியா

பஞ்சாபில் 3 வயது சிறுவன் கிணற்றில் இருந்து பத்திரமாக மீட்பு!

பஞ்சாபின் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் 20-30 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் 9 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டான்.

1 Min Read
மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ரத்த சேகரிப்பு தரவுகள்
இந்தியா

2025-ல் 1.58 கோடி யூனிட் ரத்தம் சேகரிப்பு இலக்கு

2025-க்குள் நாட்டின் ரத்த சேகரிப்பை 1.58 கோடி யூனிட்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தரவுகள் ரத்த மேலாண்மையில் சவால்கள் இருப்பதை சுட்டிக்காட்டுகின்றன.

2 Min Read
ராகுல் காந்தி மாணவர்களுக்காக குரல் கொடுப்பது
இந்தியா

ராகுல் காந்தியின் மாணவர் நிகழ்ச்சிக்கு அனுமதி ரத்து: கருத்து தெரிவிப்பு

உத்தரப்பிரதேசத்தில் மாணவர்களுக்கான ராகுல் காந்தியின் நிகழ்ச்சிக்கு அனுமதி ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான தனது குரலை தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

1 Min Read
திருப்பதி திருமண மண்டபத்தில் நடந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பான விசாரணை
இந்தியா

திருப்பதியில் திருமண மண்டபத்தில் இரட்டை கொலை: 3 பேர் கைது

திருப்பதி மாவட்டம், எஸ்.ஆர்.புரம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது. மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாம் திருமணம்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?