MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு ரத்து அறிவிப்பு: செல்வப்பெருந்தகை கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > நீட் தேர்வு வினாத்தாள் கசிவு ரத்து அறிவிப்பு: செல்வப்பெருந்தகை கண்டனம்
தமிழ்நாடு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு ரத்து அறிவிப்பு: செல்வப்பெருந்தகை கண்டனம்

Admin
Last updated: May 12, 2026 10:57 pm
Admin
Share
SHARE

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: 'கடந்த மே 3ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வு, வினாத்தாள் கசிந்த காரணத்தால் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசின் தேர்வு முகமை (National Testing Agency) அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய அரசுக்கு எங்களின் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'

லட்சக்கணக்கான மாணவர்கள் மருத்துவராகும் தங்கள் கனவை நனவாக்க இரவும் பகலும் அயராது உழைத்தனர். பெற்றோர்களோ, கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகப் பல தியாகங்களைச் செய்தனர். ஆனால், அவர்களுக்குக் கிடைத்தது என்னவோ நிர்வாக அலட்சியம், முறைகேடுகள் மற்றும் கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கையின்மை மட்டுமே.

இந்த நிலைமை ஒரு சாதாரண தவறு கிடையாது. இது மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடப்பட்ட மிகப் பெரிய அநீதி. நாட்டின் கல்வி அமைப்பின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கிய இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களை உடனடியாகக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட நாளிலிருந்து முறைகேடுகள் தொடர்ந்து நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது. மாணவர்களின் மன உளைச்சல், பெற்றோரின் வேதனை மற்றும் அவர்களின் கடின உழைப்பைப் மதிக்கும் வகையில், மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: ஆட்டத்தின் போக்கையே மாற்றிய ரன் அவுட்டா? டெல்லி அணிக்கு அதிர்ச்சி கொடுத்த கூப்பர்… முழு விவரம்
Next Article முதலமைச்சர் விஜய்: கி. வீரமணி முதல் திருமாவளவன் வரை அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அமுல் பால் விலை உயர்வு: லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு!

இந்தியாவின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான அமுல், நாடு முழுவதும் பால் விலையை…

May 13, 2026

காரிஃப் பயிர்கள்: மத்திய அரசு அறிவித்த புதிய குறைந்தபட்ச ஆதார விலைகள்!

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, 2026-2027 சந்தைப்படுத்தல்…

May 13, 2026

சேலை சரியில்லை: மணமகள் மறுப்பு – திருமணமே நின்றது! குடும்பத்தில் மோதல்

உத்தர பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தில் உள்ள…

May 13, 2026

பிரிக்ஸ் மாநாடு: டெல்லி வந்தடைந்தார் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ்!

புதுடெல்லி: பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் பங்கேற்கும்…

May 13, 2026

திருமணத்தில் ஸ்விக்கி டெலிவரி: பூசாரிக்கு விறகு கொடுத்த நபர் வைரல்!

தென்னிந்திய திருமணங்கள் எப்போதும் பரபரப்புக்கும், எதிர்பாராத நிகழ்வுகளுக்கும்…

May 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு

எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி… 37 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவு..? – பரபரக்கும் அரசியல் களம்

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. பெரும் பின்னடவை சந்தித்தது. கடந்த 2021 தேர்தலில் 66 இடங்களை வென்று இருந்த அந்த கட்சி, இந்த தேர்தலில் 47 இடங்களை…

3 Min Read
தமிழ்நாடு

மீண்டும் ஆளுநரைச் சந்திக்க புறப்பட்டார் விஜய்

தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களைக் கைப்பற்றினாலும் கூட, பெரும்பான்மை இல்லாததால் இதுவரை ஆட்சியமைக்க இயலாமல் தவித்து வருகிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள்…

1 Min Read
தமிழ்நாடு

சென்னை: சுடுகாட்டில் உடலில் காயத்துடன் வாலிபர் உடல் மீட்பு- போலீஸ் விசாரணை

சென்னை வானகரம், மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள சுடுகாட்டில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக வந்த தகவலையடுத்து திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அந்த…

1 Min Read
தமிழ்நாடு

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஓங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?