MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெக அரசின் 100 நாள் ஆட்சிக்கு -80 மதிப்பெண்: நயினார் நாகேந்திரன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெக அரசின் 100 நாள் ஆட்சிக்கு -80 மதிப்பெண்: நயினார் நாகேந்திரன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தவெக அரசின் 100 நாள் ஆட்சிக்கு -80 மதிப்பெண்: நயினார் நாகேந்திரன்

தமிழ்நாடு

தவெக அரசின் 100 நாள் ஆட்சிக்கு -80 மதிப்பெண்: நயினார் நாகேந்திரன்

Fernandez
Last updated: செப்டம்பர் 1, 2026 1:14 மணி
Fernandez
Share
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்.
SHARE

தமிழக அரசின் 100 நாள் ஆட்சிக்கு மைனஸ் 80 மதிப்பெண்கள் வழங்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த காலங்களில் சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற்றதாகக் குறிப்பிட்டார். தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் கோரிக்கை வைத்ததன் பேரில் நெல்லைக்கு ரூ. 350 கோடியில் புறவழிச்சாலை திட்டம் கொண்டுவரப்பட்டதாக அவர் நினைவு கூர்ந்தார்.

மேலும், மிகவும் பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் மானூர் பகுதிக்கு அரசு கலைக் கல்லூரி ஒன்றை அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியதையும், கட்சிப் பாகுபாடின்றி அனைத்து தொகுதிகளுக்கும் திட்டங்கள் செய்யப்பட வேண்டும் என மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதையும் நயினார் நாகேந்திரன் சுட்டிக்காட்டினார்.

ஆனால், இன்றைய சட்டமன்றத்தில் அமைச்சர்கள் உறுப்பினர்களைப் பார்த்து 'உன் மாமாவிடம் கேள், உன் அப்பாவிடம் சொல்' என்று தரம் தாழ்ந்து பேசுவது வருத்தமளிப்பதாக அவர் வேதனை தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியினர் யாரிடமும் நம்பிக்கையாக இருக்க மாட்டார்கள் என்றும், திமுகவுடன் 15 வருடங்கள் நம்பிக்கையாக இருந்துவிட்டு, ஒரே நிமிடத்தில் ஓடிவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அறையை மாற்றி அமைக்கும் பணிக்காக ரூ. 5.40 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் எதுவும் கோரப்படவில்லை என்பதை அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். டெண்டர் இன்றி இவ்வளவு பெரிய தொகையை நேரடியாகப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்வது கூட்டு ஊழல் என நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார். இதன் காரணமாக, இந்த தவெக அரசின் 100 நாள் ஆட்சிக்கு மைனஸ் 80 மதிப்பெண்கள் வழங்குவதாகவும் அவர் கூறினார்.

ஆளும் அரசு பொய்யான ரீல்ஸ்களை பரப்பி வருவதாகவும், தேவையில்லாத பொய் செய்திகள் இளம் தலைமுறையின் எதிர்காலத்தை பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்தார். தனித் தொகுதி என்ற பெயர் யாருடைய மனதையாவது புண்படுத்தும் வகையில் இருந்தால், அதனை மாற்றுவது நல்லது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

நெல்லை மட்டுமல்லாமல் நாகர்கோவில், கோவில்பட்டி என தினந்தோறும் தமிழ்நாடு முழுவதும் கொலைகள் நடந்து வருவதாகவும், எனவே மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BJPNainar NagendranTamil NaduTNV Governmentதமிழக அரசுதவெக அரசுதிருநெல்வேலிநயினார் நாகேந்திரன்பாஜக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article சென்னையில் தங்கத்தின் விலை உயர்வு குறித்த செய்தி தங்கம் விலை உயர்வு: சென்னையில் சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு
Next Article செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் நிதி மாற்றங்கள் குறித்த அறிவிப்பு செப். 1 முதல் அமல்: உங்கள் பாக்கெட்டை பாதிக்கும் 6 முக்கிய நிதி மாற்றங்கள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்

இந்தியா, உலகத்துடன் நவீன ஆராய்ச்சிகளைப் பகிர வேண்டும்: பிரதமர் மோடி

இந்தியாவின் பண்டைய அறிவு மற்றும் நவீன ஆராய்ச்சிகளின் பலன்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள…

நவம்பர் 13, 2026

மோடியுடன் விவாதிக்க தயார் – ராகுல் காந்தி சவால்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர்…

நவம்பர் 13, 2026

வெளிநாட்டில் விவாகரத்து பெற முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டவர்கள் வெளிநாடுகளில் விவாகரத்து பெற…

நவம்பர் 13, 2026

பிரதமர் மோடியை பாராட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா

இந்திய வெளிநாடு வாழ் காங்கிரஸ் தலைவர் சாம்…

நவம்பர் 13, 2026

சிக்கிமில் 4.9 ரிக்டர் நிலநடுக்கம்: மக்கள் பீதி

சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் உட்பட கிழக்கு…

நவம்பர் 12, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மூதாட்டி மீதான பாலியல் வன்கொடுமை: முதல்வர் விஜய்க்கு பா.ஜ.க. மாநில தலைவர் கேள்வி

ஈரோடு பவானியில் மூதாட்டி மீதான பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அடுத்து, முதல்வர் விஜய்யின் மெத்தனப் போக்கை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

1 Min Read
சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் மதுராந்தகத்தில் பிரச்சாரம் செய்யும் காட்சி
தமிழ்நாடு

தவெக வேட்பாளர் வெற்றி பெறக்கூடாது – சண்முகம்

மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் வெற்றி பெறக்கூடாது என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
மதுரையில் நிதி மோசடி புகார் அளிக்க குவிந்த பொதுமக்கள்
தமிழ்நாடு

மதுரையில் ₹800 கோடி நிதி மோசடி: புகார் அளிக்க மக்கள் குவிந்ததால் பரபரப்பு

மதுரையில் ₹800 கோடி நிதி நிறுவன மோசடி தொடர்பாக புகார் அளிக்க பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் திரண்டனர்.

2 Min Read
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்

முன்னாள் திமுக அமைச்சர் எ.வ. வேலுவுக்கு சாலை அமைக்காமலேயே பணம் எடுத்ததாக எழுந்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக 11 பேர் மீது…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?