MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நாகர்கோவில் சிறையில் கைதி உயிரிழப்பு: 3 வார்டன்கள் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நாகர்கோவில் சிறையில் கைதி உயிரிழப்பு: 3 வார்டன்கள் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நாகர்கோவில் சிறையில் கைதி உயிரிழப்பு: 3 வார்டன்கள் கைது

தமிழ்நாடு

நாகர்கோவில் சிறையில் கைதி உயிரிழப்பு: 3 வார்டன்கள் கைது

Fernandez
Last updated: ஜூலை 14, 2026 10:03 மணி
Fernandez
Share
நாகர்கோவில் சிறைச்சாலை
நாகர்கோவில் சிறைச்சாலை
SHARE

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள சிறையில் விசாரணை கைதி சபரிவர்மன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சிறை வார்டன்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாராயணன்புதூரைச் சேர்ந்த சபரிவர்மன் (33), அப்பகுதியில் கடை நடத்தி வந்தார். கடந்த 9-ம் தேதி மதியம் 1.30 மணியளவில், தென்தாமரைகுளம் போலீஸார் அவரது கடையில் சோதனை நடத்தினர். சோதனையின் போது, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சபரிவர்மனின் கடையில் இருந்துள்ளதாகக் கூறி, போலீஸார் அவரை கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். அவர் கடந்த 4 நாட்களாக விசாரணை கைதியாக சிறையில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று அதிகாலையில் சிறை அறையில் சபரிவர்மன் மயங்கிய நிலையில் கிடப்பதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது, சபரிவர்மன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தத் தகவல் அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டதும், அவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

தங்கள் உறவினரான சபரிவர்மனை காவல்துறையினர் அடித்துக் கொன்றதாகக் கூறி, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதற்கிடையே, நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி சபரிவர்மன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிறையின் தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவகுமார் மற்றும் திருவுடை நம்பி ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்ததாக உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:KanyakumariNagercoil JailPrisoner DeathSabarivermanWardens Arrestedகன்னியாகுமரிகுட்கா வழக்குசபரிவர்மன்நாகர்கோவில் சிறைவார்டன்கள் கைதுவிசாரணை கைதி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 3வது மொழிப் பாடம் குறித்த அறிவிப்பு சிபிஎஸ்இ: 10ம் வகுப்பு தேர்ச்சிக்கு 3வது மொழி கட்டாயம் – புதிய அறிவிப்பு
Next Article சென்னையில் மின் தடை குறித்த அறிவிப்பு சென்னையில் நாளை மறுநாள் மின் தடை: அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஐஐடி சென்னையில் பட்டம் பெற்ற தாய் மற்றும் மகன்

கற்றலுக்கு வயது தடையில்லை: ஐஐடி-யில் தாயும் மகனும் பட்டம் பெற்றனர்

சென்னையில் உள்ள ஐஐடி-யில், சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைன் மூலம் பிஎஸ்…

ஜூலை 14, 2026

உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்குகளுக்கான புதிய நடைமுறை?

உயிருக்கும், சுதந்திரத்திற்கும் உடனடி அச்சுறுத்தல் ஏற்படும் அவசர…

ஜூலை 14, 2026

19 ஆண்டுகளுக்குப் பிறகு கொல்கத்தா வருகிறார் தஸ்லிமா நஸ்ரின்!

வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், 19 ஆண்டுகளுக்குப்…

ஜூலை 14, 2026

பெட்ரோல் பங்க் ஊழியரை 1 கி.மீ காரில் இழுத்துச் சென்ற ஓட்டுநர்

ஹரியானாவில் பெட்ரோல் பங்க் ஊழியரை டீசல் நிரப்பிய…

ஜூலை 14, 2026

கோவை மாநகராட்சி அரசு வேலை: 54 பேருக்கு சிக்கல் – சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் 54 அரசு ஊழியர்களை…

ஜூலை 14, 2026

You Might Also Like

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
தமிழ்நாடு

தென்காசி: ஜூலை 28 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தென்காசி மாவட்டத்திற்கு ஜூலை 28 அன்று சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி ஆடித்தபசு விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1 சனிக்கிழமை வேலை நாளாகும்.

1 Min Read
தமிழ்நாடு

ஆண்களே கவனம்! குடும்ப வன்முறையால் தற்கொலை – அரசுக்கு அதிரடி கோரிக்கை!

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் ஆண்களுக்காக மாநில அரசு ஹெல்ப்லைன் எண்ணை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்கொலைகள் அதிகரிப்பதாக மனுவில்…

2 Min Read
தமிழ்நாடு

100 ரூபாய் வரவு; 145 ரூபாய் செலவு!

வரவு 100 ரூபாயாக இருக்கும்போது, செலவு 145 ரூபாயாக இருப்பது நிதிப் பற்றாக்குறையை சுட்டிக்காட்டுகிறது. தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் நிதி சவால்களை சீரமைக்க முடியும்.

1 Min Read
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு விசாரணை
தமிழ்நாடு

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்துள்ளது. பொதுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்களைக் குறைப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கப்பட…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?