MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முரசொலி விமர்சனம்: 3 மாதங்களில் முதலமைச்சர் விஜய்க்கு பயம் வந்ததா?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முரசொலி விமர்சனம்: 3 மாதங்களில் முதலமைச்சர் விஜய்க்கு பயம் வந்ததா?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முரசொலி விமர்சனம்: 3 மாதங்களில் முதலமைச்சர் விஜய்க்கு பயம் வந்ததா?

தமிழ்நாடு

முரசொலி விமர்சனம்: 3 மாதங்களில் முதலமைச்சர் விஜய்க்கு பயம் வந்ததா?

Fernandez
Last updated: ஆகஸ்ட் 18, 2026 6:33 மணி
Fernandez
Share
முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா சுதந்திர தின விழாவில் பங்கேற்பது
சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா
SHARE

முதலமைச்சர் விஜய்யின் சுதந்திர தின விழா நிகழ்வுகள் மற்றும் அவரது செயல்பாடுகள் குறித்து முரசொலி நாளிதழ் கடுமையாக விமர்சித்துள்ளது. குறிப்பாக, சுதந்திர தின விழாவில் நடிகை திரிஷா முன் வரிசையில் அமர்ந்தது மற்றும் முதலமைச்சர் அவருடன் சல்யூட் பரிமாறிக் கொண்டது போன்றவற்றை முரசொலி சுட்டிக்காட்டி உள்ளது.

'மூன்று மாதங்களிலேயே முதலமைச்சருக்கு பயம் வந்துவிட்டது. சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றிய முதலமைச்சர் விஜய்யின் மானம் காற்றில் பறந்தது. வெட்கமோ, கூச்சமோ இல்லாமல் ஒரு நடிகையை முன்வரிசையில் உட்கார வைத்து, இருவரும் மாறி மாறி சல்யூட் வைத்துள்ள காட்சியை அவருக்கு வாக்களித்தவர்களாலேயே சகிக்க முடியவில்லை. அசிங்கத்தையும் அருவருப்பையும் பட்டவர்த்தன மாகச் செய்வதன்மூலமாக அதனை நியாயப்படுத்த நினைக்கிறவர் தான் இன்று தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக வந்துள்ளார்' என்று முரசொலி விமர்சித்துள்ளது.

மேலும், 'மூன்றே மாதங்களில் அவருக்கு தனது செல்வாக்கு நிலைக்குமா. பதவி நிலைக்குமா என்ற பயம் வந்துவிட்டது. அதையும் அவர் உரையே காட்டிக் கொடுத்துவிட்டது. கொடி ஏற்றிவிட்டு முதலமைச்சர் விஜய் பேசுகிறார்… 'எல்லோரும் வாக்களித்துவிட்டோம். விஜய்யை ஜெயிக்க வைத்து முதலமைச்சர் ஆக்கிவிட்டோம். எனவே கடமையெல்லாம் முடிந்து விட்டது என்று யாரும் ஒதுங்கிப் போய்விடாதீர்கள். இனிமேல்தான் நீங்கள் நம்முடனே, அரசுடனே இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்காக இருக்கிற அனைத்து நல்ல திட்டங்களையும் என்னால் செயல்படுத்த முடியும்' என்று அழுது புலம்பி இருக்கிறார். இந்தப் புலம்பலுக்கு, இந்த அழுகைக்கு என்ன காரணம்? அவரை நம்பி வாக்களித்தவர்கள். 'தவறு செய்துவிட்டோம்' என்று வருந்திக் கொண்டு இருக்கிறார்கள்' என்றும் முரசொலி குறிப்பிட்டுள்ளது.

கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம், போதை மருந்து நடமாட்டம் கட்டுப்படுத்தப்படாதது, மாணவன் அமுதன் கொலை போன்ற சம்பவங்களில் விஜய் அரசின் செயல்பாடுகளை முரசொலி கேள்விக்குள்ளாக்கியுள்ளது. '10 வயது சிறுமி கோவையில் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டபோது அதை மறைக்க நினைத்தது விஜய் அரசு. 'நீங்க ஆக்ஷன் ஹீரோ… தப்பு நடந்தா நட வடிக்கை எடுப்பீங்கன்னு நினைச்சு தானே வாக்களித்தோம் என்று ஒரு பெண் கதறினாரே. இப்படி பல பேரும் கதறிக் கொண்டு இருக்கிறார்கள்' என்று குறிப்பிட்டுள்ளது.

சினிமா தயாரிப்பாளர்களுக்கு அரசு பதவிகள் வழங்கப்படுவதையும் முரசொலி விமர்சித்துள்ளது. 'தனது படத்தைத் தயாரித்த சினிமா தயாரிப்பாளர்களுக்கு மகுடம் சூட்டிக் கொண்டு இருக்கிறார் விஜய். 'ஜனநாயகன்' படத்தைத் தயாரித்த வெங்கட நாராயணா தமிழ் நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாம். 'பிகில்'. 'கோட்' படத்தை தயாரித்த அர்ச்சனா கல்பாத்தி கோவில்களுக்கான அறங்காவலர்களைத் தேர்வு செய்யப் போகிறாராம். 'லியோ' படத்தைத் தயாரித்த ஜெகதீஷ் பழனிசாமி தான் முதலமைச்சரின் தனிச் செயலாளர். தனது ஜோசியருக்கு மகுடம். தேர்தலுக்கு முன்னதாக தனக்கு செலவு செய்தவருக்கு பதவி இதுதான் நடக்கிறது. இதை எல்லாம் தலையாட்டி ஏற்றுக் கொள்வார்கள் மக்கள் என்று நினைக்கிறாரா விஜய்?' என்று கேள்வி எழுப்பியுள்ளது.

திருவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணன் மீதான பாலியல் புகார், அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம், அமைச்சர் சரத்குமார் மற்றும் அமைச்சர் ரமேஷ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை விஜய் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் முரசொலி சுட்டிக்காட்டியுள்ளது. 'எவர்மீதும் இதுவரை விஜய் நடவடிக்கை எடுத்தது இல்லை. அரசைப் பற்றி விமர்சித்து 'ட்விட்டர்' போட்டால் கைது. நீதிமன்றங்கள் நித்தமும் த.வெ.க. ஆட்சியாளர்கள்மீது தலையில் கொட்டுகின்றன. சொரணையே இல்லை இவர்களுக்கு. இப்படித்தான் போய்க் கொண்டு இருக்கிறது ஆட்சி' என்று விமர்சித்துள்ளது.

இறுதியாக, 'சுதந்திர தின விழாவுக்கு ஒரு நடிகையை அழைத்துவந்து, அவருக்கு 'சல்யூட்' அடிப்பதை விஜய் ரசிகர்களாலேயே ஏற்றுக் கொள்ள முடிய வில்லையே… மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? சமூக வலைதளங்களில் கழுவிக் கழுவி ஊற்றுகிறார்கள். 'உங்களுக்குத் தான் வாக்களித்தோம்… வாக்களித்ததற்காக வருத்தப்படுகிறோம்' என்று சொல்லும் வீடியோக்கள்தான் அதிகமாகப் பரவுகின்றன. அதனால்தான். 'என்னோடு இருங்கள். போய்விடாதீர்கள்' என்று கழிவிரக்கம் தேடப்பார்க் கிறார் விஜய். மக்கள் ஏமாளிகள் அல்ல. அவர் இன்னமும் தனிமைப்படுத்தப்படுவார்' என்று முரசொலி தனது விமர்சனத்தை முடித்துள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MurasoliTamil Nadu PoliticsTrishaVIJAYதமிழ்நாடு அரசியல்திரிஷாமுதலமைச்சர் விஜய்முரசொலிவிமர்சனம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article புதிய யமஹா ஃபாசினோ மற்றும் ரேZR 2026 ஹைப்ரிட் ஸ்கூட்டர்கள் யமஹா ஃபாசினோ, ரேZR 2026: புதிய ஹைப்ரிட் ஸ்கூட்டர்கள் அறிமுகம்!
Next Article ஹைப்ரிட் தொழில்நுட்பத்தில் ரெனால்ட் டஸ்டர் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் ஹைப்ரிட் கார்கள்: பெட்ரோல், டீசலுக்கு புதிய சவால்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே

கல்வி அமைச்சர்கள் ஏன் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்கிறார்கள்? – அபிஜீத் தீப்கே கேள்வி

கல்வி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஏன் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள்…

ஆகஸ்ட் 18, 2026

நாக்பூர் பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல்: புரளி என உறுதி

நாக்பூரில் 12 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த…

ஆகஸ்ட் 18, 2026

ஜார்க்கண்ட் தேர்வு ரத்து: தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டம்

ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை…

ஆகஸ்ட் 18, 2026

நீட் தேர்வு போராட்டம்: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை குழு அமைப்பு

டெல்லியில் நீட் தேர்வு போராட்டத்தின் போது காவல்…

ஆகஸ்ட் 18, 2026

தெலங்கானா வெப்சீரிஸ் பார்த்து தாய்-மகன் கொடூரம்: பெண்களை கொலை செய்து எரித்த அதிர்ச்சி

தெலங்கானா வெப் சீரிஸால் ஈர்க்கப்பட்ட தாய்-மகன் ஜோடி,…

ஆகஸ்ட் 18, 2026

You Might Also Like

தமிழ்நாடு அரசு மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் திட்ட அறிவிப்பு
தமிழ்நாடு

2031க்குள் 20,000 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்: தவெக அரசு திட்டம்

தமிழ்நாட்டில் 2031க்குள் 20,000 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என தவெக அரசு அறிவித்துள்ளது. இதற்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

2 Min Read
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

6 ஆயிரம் டன் ரேஷன் அரிசி கடத்தல்: 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

தமிழகத்தில் சுமார் 6 ஆயிரம் டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்ட விவகாரத்தில், 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்பு விசாரணையில் இந்த முறைகேடு அம்பலமானது.

2 Min Read
ஆடிக்கூழ் தயாரிப்பு மற்றும் பரிமாறும் காட்சி
தமிழ்நாடு

ஆடிக்கூழ் திருவிழா: தமிழர்களின் பாரம்பரிய ஆரோக்கியம்

கேழ்வரகு அல்லது கம்பில் செய்யப்படும் ஆடிக்கூழ், தமிழர்களின் பாரம்பரிய ஆரோக்கிய உணவாகும். ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் இதன் திருவிழா, கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் திகழ்கிறது. இது உடல்…

2 Min Read
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

கர்நாடக அரசை விமர்சித்த அன்புமணி ராமதாஸ்: விஜய் பேச்சுக்கு அர்த்தமில்லை

தமிழக முதலமைச்சர் விஜய், உரிய மரியாதை தராத கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?