MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மும்மொழித் திட்டம் திரும்பப்பெறப்படவில்லை: ரவிக்குமார் எம்.பி.
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மும்மொழித் திட்டம் திரும்பப்பெறப்படவில்லை: ரவிக்குமார் எம்.பி.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மும்மொழித் திட்டம் திரும்பப்பெறப்படவில்லை: ரவிக்குமார் எம்.பி.

தமிழ்நாடு

மும்மொழித் திட்டம் திரும்பப்பெறப்படவில்லை: ரவிக்குமார் எம்.பி.

Admin
Last updated: ஜூன் 30, 2026 9:34 மணி
Admin
Share
SHARE

மும்மொழித் திட்டம் திரும்பப் பெறப்படவில்லை என்றும், இது ஒன்றிய அரசின் தந்திரமான அறிவிப்பு என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

சில ஊடகங்களில் வெளியான செய்திகள், ஒன்றிய அரசு சிபிஎஸ்இ பள்ளிகளில் புகுத்தியுள்ள மும்மொழித் திட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியிருக்கலாம். ஆனால், சிபிஎஸ்இ அதனைத் தொடர்ந்து செயல்படுத்துவதாகவே அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இதற்கு எதிர்ப்பு வலுத்துள்ளதால், தமிழ்நாட்டு மாணவர்களைக் குழப்பும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2026-27 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது என்றும், அவர்கள் தொடர்ந்து இரண்டு மொழிகளைக் கொண்ட பழைய முறையையே பின்பற்றுவார்கள் என்றும் சிபிஎஸ்இ மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மேலும், இப்பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் மூன்றாவது மொழியைப் பயில வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒன்பதாம் வகுப்பில் தற்போது பயிலும் மாணவர்கள் மூன்று மொழிகளைப் படிக்க வேண்டும் என சிபிஎஸ்இ கூறியுள்ளது.

சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இரண்டு அயல் மொழிகளைப் பயிலும் மாணவர்கள், 2026-27 ஆம் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு சிறப்புத் தளர்வாக, அந்த இரண்டு அயல் மொழிகளையும் தொடர்ந்து பயிலலாம். அத்துடன் மூன்றாவது மொழியாக ஒரு 'பாரதிய பாஷா'வை கூடுதலாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த மூன்றாவது மொழிக்கு, மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும்போது தேர்வு கிடையாது. இது பள்ளி அளவிலான அக மதிப்பீட்டின் மூலமாக மட்டுமே மதிப்பிடப்படும்.

மற்ற வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு, முன்பு அறிவித்தவாறு ஆங்கிலம் அல்லாமல் இரண்டு இந்திய மொழிகள் கற்பிக்கப்படும். அதாவது இந்தியோ சமஸ்கிருதமோ கட்டாயம். மூன்று மொழிகளைக் கற்பிக்க ஆசிரியர்களை அமர்த்துவதால் செலவு அதிகரிக்குமே என்ற பள்ளி நிர்வாகத்தினரின் கவலையையும் சிபிஎஸ்இ போக்கியுள்ளது. நெகிழ்வான பணியாளர் நியமன ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. பள்ளிகள், தற்போதுள்ள ஆசிரியர்களையோ, ஓய்வுபெற்ற ஆசிரியர்களையோ, முதுகலைப் பட்டதாரிகளையோ பணியமர்த்தலாம் அல்லது அருகிலுள்ள பள்ளிகளின் ஆசிரியர்களைப் பயன்படுத்தும் முறையைக் கடைபிடிக்கலாம். இணையவழியிலோ, நேரடியாகவோ கற்பிக்கும் கலப்பு முறையையும் பயன்படுத்தலாம்.

மும்மொழித் திட்டம் என்ற இந்தி/ சமஸ்கிருதத் திணிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து கூறிவரும் நிலையில், அந்த எதிர்ப்பைக் கூர் மழுங்கச் செய்வதற்கு ஒன்றிய அரசு செய்யும் தந்திரம்தான் இந்த அறிவிப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:கல்விசிபிஎஸ்இதமிழ்நாடுமும்மொழித் திட்டம்ரவிக்குமார்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கணவனை விட அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் கிடையாது – கர்நாடக உயர்நீதிமன்றம்
Next Article மும்பையில் பள்ளி பேருந்து மீது மரம் விழுந்து மாணவர் பலி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கைது செய்யப்பட்ட யூடியூபர் துருவ் ராத்தி

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர் துருவ் ராத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.…

அக்டோபர் 11, 2026

சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே உள்ளிட்டோர் விடுவிப்பு

சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, நிர்வாகிகள்…

அக்டோபர் 11, 2026

காங்கிரஸ் விலகல்: சிஜேபி போராட்டத்தில் ராகுல் காந்தி ஏன் பங்கேற்கவில்லை?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி…

அக்டோபர் 11, 2026

விமானத்தில் 3 பேர் கைது: பெண் போலீஸ் ஏன் பயன்படுத்தப்பட்டனர்?

டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தில்…

அக்டோபர் 11, 2026

டெல்லி போலீஸ் அபிஜித் தீப்கேவை கடத்தியது: சிஜேபி குற்றச்சாட்டு

சவுரவ் தாஸ் மற்றும் அபிஜித் தீப்கே ஆகியோரை…

அக்டோபர் 10, 2026

You Might Also Like

சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் சண்முகம் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து அறிக்கை வெளியிடுதல்
தமிழ்நாடு

கரூர் உயிரிழப்பு: அரசு வேலை வழங்கக் கூடாது – சிபிஐஎம் கண்டனம்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கக் கூடாது என சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்…

1 Min Read
சென்னையில் இடியுடன் மழை பெய்யும் காட்சி
தமிழ்நாடு

சென்னையில் இன்று மாலை இடியுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னையில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 Min Read
சட்டப்பேரவையில் பேசும் திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி
தமிழ்நாடு

பதில் சொல்லாமல் ஊமையாக இருக்க வரவில்லை – செந்தில் பாலாஜி

மின் துறையின் 2025-26 கொள்கை விளக்கக் குறிப்பில் புள்ளி விவரங்கள் நீக்கப்பட்டு, பழைய சரத்துகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன; லேசான மழைக்கே சென்னையில் மின்வெட்டு ஏற்படுகிறது - செந்தில்…

1 Min Read
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

அமைச்சர்கள் வாங்க ஆரம்பித்துவிட்டனர்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தமிழக அமைச்சர்கள் ஊழலில் ஈடுபடுவதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சர்களின் ஊழல் பட்டியல் தன்னிடம் இருப்பதாகவும், விரைவில் அதை வெளியிடுவோம் என்றும் அவர்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?