MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஐபிஎல் வரலாற்றில் முகமது ஷமி: முதல் பந்தில் புதிய சாதனை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஐபிஎல் வரலாற்றில் முகமது ஷமி: முதல் பந்தில் புதிய சாதனை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - ஐபிஎல் வரலாற்றில் முகமது ஷமி: முதல் பந்தில் புதிய சாதனை!

விளையாட்டு

ஐபிஎல் வரலாற்றில் முகமது ஷமி: முதல் பந்தில் புதிய சாதனை!

Admin
Last updated: மே 24, 2026 6:03 காலை
Admin
Share
SHARE

இந்திய அணியின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன் யாரும் நிகழ்த்தாத ஒரு அசாதாரண சாதனையை படைத்துள்ளார். லக்னோவில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், அவர் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

2026 ஐபிஎல் தொடரின் 68வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் லக்னோ அணிக்காக பந்துவீசிய முகமது ஷமி, ஆட்டத்தின் முதல் பந்திலேயே பஞ்சாப் தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை ஆட்டமிழக்கச் செய்தார். ஷமி வீசிய மின்னல் வேக பவுன்சர் பந்தை சரியாக கணிக்கத் தவறிய ஆர்யா, மிட்-விக்கெட்டில் நின்றிருந்த அர்ஜுன் டெண்டுல்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இந்த சாதனையால், ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸின் முதல் பந்திலேயே 6 முறை விக்கெட் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை முகமது ஷமி பெற்றுள்ளார். இதற்கு முன்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 5 முறை முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை ஷமி தகர்த்துள்ளார். ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி மற்றும் இங்கிலாந்தின் லூக் வூட் ஆகியோர் தலா 9 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக புவனேஸ்வர் குமார், முகமது அமீர் ஆகியோருடன் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி ஷமியும் இணைந்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ஷமி இதுவரை 13 இன்னிங்ஸ்களில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனாலும், அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஷமியின் பெயர் இடம் பெறவில்லை. இது குறித்து பேசிய தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர், ஷமி தற்போது டி20 போட்டிகளில் விளையாட மட்டுமே உடல் தகுதியுடன் இருப்பதாகவும், நீண்ட நேரம் பந்துவீச வேண்டிய போட்டிகளுக்கு அவர் இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால், ஐபிஎல் அரங்கில் 35 வயதில் முகமது ஷமி காட்டி வரும் அனல் பறக்கும் வேகம் மற்றும் துல்லியம், தான் எப்போதுமே ரெடி என்பதைத் தேர்வுக் குழுவினருக்கு உரக்கச் சொல்லும் வகையில் அமைந்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Cricket NewsIPL 2026ஐபிஎல்கிரிக்கெட்சாதனைமுகமது ஷமி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வெயில் சதம்: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் உச்சம் தொட்ட வெப்பம்!
Next Article அமைச்சரவை விரிவாக்கத்திற்கு எஸ்.டி.பி.ஐ. வரவேற்பு: சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் குறித்து கேள்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போக்குவரத்துறை அமைச்சர் பேருந்தில் ஆய்வு

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர், சில்லறை இல்லை என்று கூறி…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

பெங்களூரு: மாசடைந்த காற்று – மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பது போல!

பெங்களூருவில் சுவாசிக்கப்படும் மாசடைந்த காற்று, ஒரு மாதத்திற்கு…

ஜூலை 12, 2026

ராமர் கோயில் கொள்ளையர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால்

அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை…

ஜூலை 12, 2026

You Might Also Like

விளையாட்டு

ஐபிஎல் 2026: க்ருணாலின் பந்துவீச்சு.. காவ்யா மாறன் ரியாக்‌ஷன் வீடியோ வைரல்!

ஐபிஎல் 2026 போட்டியில் க்ருணால் பாண்டியா வீசிய வித்தியாசமான பந்துவீச்சைக் கண்டு ஹைதராபாத் உரிமையாளர் காவ்யா மாறன் அதிர்ச்சியடைந்த வீடியோ வைரலாகி வருகிறது.

2 Min Read
விளையாட்டு

நார்வே செஸ் போட்டி: குகேஷ், பிரக்ஞானந்தா பங்கேற்பு

நார்வே நாட்டின் ஓஸ்லோவில் இன்று தொடங்கும் 14-வது சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா உள்ளிட்ட 6 முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர். பெண்கள் பிரிவிலும் பல…

1 Min Read
விளையாட்டு

CSK-க்கு பெரும் பின்னடைவு: ஜேமி ஓவர்டன் விலகல்! பிளே ஆஃப் கனவு கேள்விக்குறி?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜேமி ஓவர்டன், தொடையில் ஏற்பட்ட காயத்தால் ஐபிஎல் 2026 தொடரில் இருந்து விலகியுள்ளார். இது அணிக்கு பெரும்…

1 Min Read
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய்
விளையாட்டு

தினேஷ் கார்த்திக் என் நண்பர்: முரளி விஜய்யின் பேச்சு சர்ச்சை

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய், தினேஷ் கார்த்திக் குறித்து உருக்கமாகப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பழைய கதைகளை கிளறி முரளி விஜய்யை விமர்சித்து…

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?