MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: குதிரை பேரம் நடத்தவில்லை – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: குதிரை பேரம் நடத்தவில்லை – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - குதிரை பேரம் நடத்தவில்லை – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

அரசியல்

குதிரை பேரம் நடத்தவில்லை – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

Admin
Last updated: மே 26, 2026 5:14 மணி
Admin
Share
SHARE

புதிய தமிழக அரசு அமைந்திருக்கும் சூழலில், அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே ராஜினாமா செய்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுக எம்எல்ஏக்களை தான் தவெகவில் சேர்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். முதல்வர் விஜய்யின் ஆட்சியின் செயல்பாடுகளைப் பார்த்து பலரும் அவருடன் இணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 'பணநாயகத்தை வென்று ஜனநாயகத்தைக் காக்கும் முதல்வர் விஜய்யின் ஆட்சியின் செயல்பாடுகளைப் பார்த்து எல்லோரும் இன்று அவருடன் இணைந்துள்ளனர்' என்று கூறினார். ராஜினாமா செய்தவர்களுக்கு அதே தொகுதியில் மீண்டும் தவெக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா என்பது குறித்து பின்னர் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார்.

'எங்கள் ஆட்சியில் யாரும் குதிரை பேரம் நடத்தவில்லை. குதிரை பேரம் நடத்தியது யார் என்பது நாட்டுக்கே தெரியும். திமுக ஆதரவோடு நான் முதல்வர் ஆவேன் என்று சொன்னது யார் என்பதை தெரிந்துகொண்டு அவரிடம் இதற்கான பதிலை கேளுங்கள்' என்றும் அவர் சவால் விடுத்தார். மேலும், அதிமுகவில் இருந்த எம்எல்ஏக்கள் தங்கள் விருப்பத்தின் பேரிலேயே ராஜினாமா செய்துள்ளதாகவும், புதிய ஆட்சி வந்துள்ளதால் மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர் விளக்கினார்.

'புதிய ஆட்சி வந்துள்ளது, மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. எனவே ஆறு மாத காலம் பொறுத்திருந்தே விமர்சிப்போம் என எதிர்க்கட்சியான திமுக சொன்னதா இல்லையா? நாங்களும் பொறுத்திருந்தே ஒவ்வொன்றாக செய்ய முடியும். எங்களுக்கும் அவகாசம் கொடுக்க வேண்டும். குற்றங்கள் நடக்கும்போது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை சிறுமி விவகாரத்தில் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதில் காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும்' என்றும் அவர் தெரிவித்தார்.

'அதிமுக எம்எல்ஏக்களை நான் அழைத்து வந்து தவெகவில் சேர்ப்பதாக சொல்லும் குற்றச்சாட்டு தவறானது. நான் யாரையாவது அழைத்து வந்து சேர்த்தேனா? பழனிசாமி என் மீது கோபத்தில் இருக்கிறார், அதனால் இதுபோல குற்றம்சாட்டுகிறார். ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்கள் தேவையில்லை, தன் படம் போதும் என பழனிசாமி நினைத்தார்' என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅதிமுகஅமைச்சர் செங்கோட்டையன்அரசியல்தவெக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு: அரசுக்கு ராமதாஸ் கடும் எச்சரிக்கை
Next Article சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா: பால்குடம், அக்னிசட்டி நேர்த்திக்கடன்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் மாநாட்டில் உரை நிகழ்த்துகிறார்

இந்தியாவை உலகின் ஆய்வகமாக்க வேண்டும்: மத்திய இணை அமைச்சர் அனுப்ரியா படேல்

அகமதாபாத்தில் நடைபெற்ற 'ஹெல்த்கேர் சம்மிட் 2026' மாநாட்டில் பேசிய மத்திய சுகாதாரத்துறை இணை…

ஆகஸ்ட் 23, 2026

வந்தே மாதரம் பாடல்: மோடி, பாஜகவிடம் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடாதது ஏன்?…

ஆகஸ்ட் 22, 2026

90 ஆண்டுகளாக இல்லாத சிக்கல் இப்போது ஏன்? – வந்தே மாதரம் விவகாரத்தில் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலின் சுருக்கப்பட்ட பதிப்பையே காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

சோமாலியா கடலில் 2 கப்பல்கள் கடத்தல்: 22 இந்திய மாலுமிகள் மீட்பு தீவிரம்

சோமாலியா, ஏமன் கடற்பகுதிகளில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 2…

ஆகஸ்ட் 22, 2026

31 ஆண்டுகள் சிறைவாசம்: 105 வயது முதியவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 31…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கரூர் அரசுமுறைப் பயணத்தின் போது
தமிழ்நாடு

கரூர் செல்கிறார் முதலமைச்சர் விஜய்: அரசுமுறைப் பயணம் உறுதி!

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், ஜூலை 10 அன்று கரூர் செல்கிறார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிதியுதவி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குகிறார். திமுகவின் தடை மனுவை உச்ச நீதிமன்றம்…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

திமுக தோல்விக்கான காரணங்கள்: கள ஆய்வாளர் எழிலரசன் அறிக்கை

ஈரோடு, நாமக்கல் மாவட்ட தேர்தல் கள ஆய்வாளர் எழிலரசன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்த அறிக்கையில், கடைசி 4 நாட்களில் தேர்தல் பிரச்சாரம் மாறியதும், கூட்டணி கட்சிகளின்…

1 Min Read
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி
தமிழ்நாடு

அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், ஜூலை 15, 16, 17 தேதிகளில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

‘நான் முதல்வன்’ பெயர் மாற்றம்: உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!

திமுகவின் 'நான் முதல்வன்' திட்டத்தின் பெயர் மாற்றம் மற்றும் முந்தைய பதிவுகள் நீக்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம் செய்துள்ளார். இது குறுகிய…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?