MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திமுக ஆட்சி ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை விரைவில்: அமைச்சர் ரமேஷ்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திமுக ஆட்சி ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை விரைவில்: அமைச்சர் ரமேஷ்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திமுக ஆட்சி ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை விரைவில்: அமைச்சர் ரமேஷ்

தமிழ்நாடு

திமுக ஆட்சி ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை விரைவில்: அமைச்சர் ரமேஷ்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 4, 2026 7:18 காலை
Fernandez
Share
அமைச்சர் ரமேஷ் தீரன் சின்னமலை உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்
அமைச்சர் ரமேஷ் தீரன் சின்னமலை உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
SHARE

திருச்சியில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவ சிலைக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், துணை சபாநாயகர் ரவிசங்கர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரமேஷ், "தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியா முழுவதும் உள்ள அனைத்துத் தலைவர்களும் பாராட்டும் வகையில் மிகச் சிறந்த ஆட்சியை நடத்தி வருகிறார். மக்களின் பேராதரவோடு வரலாற்றிலேயே சிறந்த அரசியல் மாற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையாக வாக்களிக்காதவர்கள் கூட சந்தோஷமாக வாழும் வகையிலான நல்லாட்சி நடந்து வருகிறது. அனைத்து விஷயங்களையும் பேசிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியமில்லை; செயலில் காட்டினால் போதும். நமது முதல்வர் தனது செயல்பாடுகள் மூலமாகவே இந்த ஆட்சியைச் சிறந்த நல்லாட்சியாக மாற்றி வருகிறார்" என்று தெரிவித்தார்.

கோயில்களில் தரிசனத்திற்கு லஞ்சம் வாங்கும் செயல்கள் ஏற்கெனவே 80 சதவீதம் சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும், இன்னும் சில கோவில்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், யாராக இருந்தாலும் எந்தவித பாரபட்சமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

நாம் தமிழர் கட்சியினர் 15 ஆண்டுகளாகப் பயிற்சி, பயிற்சி எனப் பயிற்சி பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், ஒரு தலைவருக்கு எதிராக வெறுப்பு அரசியல் பேசுவதை விட்டுவிட்டு, உண்மையான வெற்றி பெறுவதற்கான நோக்கத்தோடு சீமான் பேசினால், நிச்சயமாக உள்ளாட்சித் தேர்தலில் ஒரு சில இடங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.

காவிரி மற்றும் கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும் என்ற விவசாய சங்கங்களின் கோரிக்கைகள் குறித்துத் துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அதுகுறித்த ஆய்வுகள் நடந்து வருவதாகவும், பட்ஜெட் நிலைக்கு ஏற்ப உரிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அமைச்சர் ரமேஷ் கூறினார்.

மேலும், "தான் ஓடி ஒளியவில்லை என கூறும் செந்தில் பாலாஜி இவ்வளவு நாட்களாக எங்கு காணாமல் போயிருந்தா? தைரியமாக வந்து நின்று, நீதிமன்ற வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியதுதானே?" என்று கேள்வி எழுப்பிய அமைச்சர், "இந்த ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்" என்றார்.

கடந்த திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற ஊழல்கள் மற்றும் கோவில் சொத்துக்கள் அபகரிப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், இதுதொடர்பாகத் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். கோவில் சொத்துக்கள் எவ்வித சமரசமுமின்றி முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் உறுதியளித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CorruptionDMK RuleMinister RameshWhite Paperஅமைச்சர் ரமேஷ்ஊழல்கோவில் சொத்துக்கள்செந்தில் பாலாஜிதிமுக ஆட்சிதீரன் சின்னமலைவெள்ளை அறிக்கை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ஒட்டகப்பால் அருந்தும் நபர் ஒட்டகப் பாலில் டீ: சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மையா?
Next Article நெல்லை விக்கிரமசிங்கபுரம் அருகே உயிரிழந்த பெண் கரடி நெல்லை: தோட்டப் பகுதியில் பெண் கரடி உயிரிழப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேற்கு வங்காளத்தில் காவல் துறையினர் பறிமுதல் செய்த ரொக்கப் பணம்

மேற்கு வங்கத்தில் இருமல் மருந்து கடத்தல்: ரூ.2.5 கோடி சிக்கியது

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து கடத்தல் தொடர்பாக…

ஆகஸ்ட் 4, 2026

30 ஆண்டு வழக்குகள்: உச்ச நீதிமன்றத்தில் 10,000, உயர் நீதிமன்றங்களில் 80,000

30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள்…

ஆகஸ்ட் 4, 2026

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: பாதுகாப்பு நிறுவனத்திடம் கண்காணிப்பு பணி ஒப்படைப்பு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சை எதிரொலியாக,…

ஆகஸ்ட் 4, 2026

கோயிலில் ரீல்ஸ் எடுத்த பெண்: தேவஸ்தானம் போலீஸில் புகார்

விஜயவாடா கனக துர்கையம்மன் கோயிலில் ஒரு பெண்…

ஆகஸ்ட் 4, 2026

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் வழக்கு: பிரிஜ் பூஷன் சிங் விடுதலை

பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக…

ஆகஸ்ட் 4, 2026

You Might Also Like

ஈரோடு-செங்கோட்டை ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதைக் குறிக்கும் படம்
தமிழ்நாடு

ஈரோடு-செங்கோட்டை ரயில் சேவை மாற்றம்: பராமரிப்பு பணி அறிவிப்பு

பராமரிப்புப் பணிகள் காரணமாக ஈரோடு-செங்கோட்டை ரயில் சேவையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

சென்னையிலிருந்து செங்கோட்டை சிறப்பு ரயில்: அதிராம்பட்டினம், மானாமதுரையிலும் நிற்கும்!

சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், இனி அதிராம்பட்டினம் மற்றும் மானாமதுரை ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள்…

1 Min Read
வனத்துறையினர் அமைத்த கூண்டில் சிக்கிய ஆண் கரடி
தமிழ்நாடு

நெல்லை: பொதுமக்களை அச்சுறுத்திய கரடி கூண்டில் சிக்கியது

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஆண் கரடியை வனத்துறையினர் கூண்டில் பிடித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

2 Min Read
தமிழ்நாடு

மருத்துவர்களின் சேவையை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவர்களின் பணியை 'உயிர் காக்கும் உயரிய பணி' எனப் பாராட்டியுள்ளார். மருத்துவர்கள் தினம் அனுசரிக்கப்பட்ட நிகழ்வில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?